என் மலர்
சினிமா

சோனு சூட்
பால் அபிஷேகம் வேண்டாம்... ரசிகர்களுக்கு சோனு சூட் வேண்டுகோள்
ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்கள் வெளியான நிலையில் பாலை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கினார்கள். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதே போல தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இதில் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் பாலை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story






