என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் பிரபல பாடகி ஒருவர் உதவி கேட்டு இருக்கிறார்.
    ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் '99 சாங்ஸ்' பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியது குறித்தும் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.

    சுசீலா - ஏ ஆர் ரஹ்மான்
    ஏ.ஆர்.ரகுமான் - சுசீலா

    அப்போது, "மிகச்சிறந்த தென்னிந்தியப் பாடகி பி.சுசீலா அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, '99 சாங்ஸ்' படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். அப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்துவிட்டது என்று கூறினேன். படத்தைப் பார்த்தபிறகு என்னை மீண்டும் அழைத்த பி.சுசீலா, 'மிகவும் நன்றாக இருக்கிறது' என்று கூறினார். 

    மேலும், 'என்னுடைய கதை இதேபோன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் என்னுடைய படத்தைப் பாராட்டுவது அருமையான விஷயம்" என்றார்.
    வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயாரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் முன்னோட்டம்.
    ஜேஎஸ்கே பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ வி‌ஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியதாவது: “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

    ஸ்ரேயாரெட்டி
    ஸ்ரேயாரெட்டி 

    நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார்” என்றார்.
    ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரம் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதனை தற்போது ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

    ராட்சசன் படத்தில் இன்பராஜாக நடித்த வினோத் சாகருடன் இயக்குனர் ராம்குமார்
    ராட்சசன் படத்தில் இன்பராஜாக நடித்த வினோத் சாகருடன் இயக்குனர் ராம்குமார்

    அவர் பதிவிட்டுள்ளதாவது: “ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்” என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.


    ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் 5-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உலகளவில் திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடருக்கென உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை பற்றிய கதைதான் இந்த ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடர். இதுவரை, 4 சீசன்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது. 

    மனி ஹெய்ஸ்ட் தொடரின் போஸ்டர்
    மனி ஹெய்ஸ்ட் தொடரின் போஸ்டர்

    இந்நிலையில் ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடரின் 5-வது சீசன் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5-வது சீசன் இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ளது. முதல் பகுதி வருகிற செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 5-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான 4 சீசன்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 5-வது சீசனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
    தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

    நடிப்பை போலவே நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனால் இவர் நடனமாடும் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

    சாய் பல்லவி
    சாய் பல்லவி

    இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே போல் ‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

    தற்போது அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் வேறு எந்த நடிகையும் இத்தகைய சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    அப்பாவும், அம்மாவும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
    நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழப் பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    சுருதிஹாசன், சரிகா
    சுருதிஹாசன், சரிகா

    அவர்கள் எனக்கும், எனது தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான் அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கம். அம்மா நலமுடன் இருக்கிறார். எங்கள் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்து இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே ரொம்ப நல்லவர்கள். ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள்”. இவ்வாறு சுருதிஹாசன் கூறி உள்ளார்.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா, சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. 

    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை
    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

    அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
    தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இபடத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி  ‘கே.ஜி.எப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. 

    யாஷ்
    யாஷ்

    இந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஜி.எப் 2 படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.
    இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போது நிறைய அவதூறுகளை சந்தித்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
    தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. 

    ரகுல் பிரீத் சிங்
    ரகுல் பிரீத் சிங்

    இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் என்மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதைவைத்து நிறைய பேர் என்னை தொடர்ந்து அவதூறு செய்தார்கள். தலையும் வாலும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் வந்த கிசுகிசுக்களால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். 

    தாங்க முடியாத அளவு வேதனையும் இருந்தது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கொடுத்தும் அதை நிறுத்தவில்லை. அதனால் என் மீதான கிசுகிசுகளுக்கு விளக்கம் சொல்வதை நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு எதிரான கிசுகிசுக்கள் குறைந்துள்ளன”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இதுவரை பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இத்தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 

    ரன்பீர் கபூர்
    ரன்பீர் கபூர்

    சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் நடிகை சமந்தா, தற்போது இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார். அப்போது நடிகை சமந்தாவிடம், பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். நடிகை சமந்தா இதுவரை பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஜய்யுடன் ஏற்கனவே பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் அவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    விஜய், கீர்த்தி சுரேஷ்
    விஜய், கீர்த்தி சுரேஷ்

    வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார்.

    அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 2 கதாநாயகிகளை கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    படத்தின் பட்ஜெட், தான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.
    இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

    மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது. இந்தப் படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை தான் வருகிறது. 

    போனி கபூர், புயலால் சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்
    போனி கபூர், புயலால் சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்

    படத்தின் பட்ஜெட் நான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அதிர்ஷ்டவசமாக அந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் புதிதாக செட் போட வேண்டும் என்றால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்” என போனிகபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
    ×