என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மனோ கார்த்திக்கேயன் இயக்கத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகர், ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் விமர்சனம்.
    டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார். இதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார்.

    அதாவது, அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில் மனைவி மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். இதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சதீஷ்குமார் தனது மனைவி மிருணாளினி ரவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார். 

    போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன். முதல் பாதி திரைக்கதை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘ஜாங்கோ’ புதிய முயற்சி. 
    பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
    தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ''சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன். 

    நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார். எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 

    ராதிகா ஆப்தே

    இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்'' என்றார்.
    தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
    ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

    இப்படம் குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்.. “கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார். 

    படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். 

    “கேப்டன்” படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். 

    இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
    டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அடுத்ததாக கேப்டனாக களமிறங்க இருக்கிறார்.
    ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

    இப்படம் குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறும்போது, தான் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்திலும், தன் உயிரைக்கொடுத்து, உழைக்கும் நடிகர் ஆர்யா பற்றி நான் என்ன கூறுவது, அவர் நடிப்பு திறமை குறித்து ஊரே அறியும். “கேப்டன்” படத்தை பொறுத்தவரை இப்பாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் அதனை ஒவ்வொரு படத்திலுமே மாறாமல் செய்து வருகிறார் ஆர்யா. இந்த திரைப்படம் இப்போது இருக்கும் ரசிகர் வட்டத்தை  தாண்டி, பல மொழிகளிலும் அவரது ரசிகர் வட்டத்தை பெருக்கும் என்றார்.

    கேப்டன்
    கேப்டன் படத்தின் போஸ்டர்

    கேப்டன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் படக்குழுவினர் செல்லவுள்ளனர். இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
    மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு பற்றி பேசினார்.
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    இதில் யுவன் பேசும்போது, ‘எப்பவும் பார்க்குற சிம்புவ இப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது’ என்றார்.

    யுவன்

    மாநாடு படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ரசிகர்களிடம் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    சிம்பு

    இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்.
    முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கனெக்ட்’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

    கனெக்ட்
    கனெக்ட் படத்தின் போஸ்டர்

    தற்போது கனெக்ட் படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
    நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

    சினேகா

    மேலும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.
    சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பதற்கு ரூ.1 லட்சம் தருவதாகவும் பாமக பிரமுகர் கூறியிருந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்தும் சூர்யாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறையை சார்ந்தவர்கள் பலரும் குரல் கொடுத்தார்கள். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பா.ரஞ்சித், குமரன் உள்ளிட்ட பலரும், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட திரைத்துறை சம்மந்தப்பட்ட சங்கங்களும் அறிக்கை மற்றும் வீடியோ மூலம் ஆதரவை தெரிவித்தனர். 

    சூர்யா
    சூர்யாவின் பதிவு

    இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘#Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் ‘தேள்’. இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    தேள் பட போஸ்டர்

    ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை - திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார். பிரபுதேவா - ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். சத்யா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். 

    பிரபுதேவா

    நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.

    நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
    1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

    2009ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார்.

    மனோகர்

    இந்நிலையில் இன்று (நவ.17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    ×