என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

    கமல்

    இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். 

    சசிகுமார்

    இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச் சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா. பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்து இருந்தார். 

    86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

    கைகலா சத்யநாராயணா

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம்.
    பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது.

    மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.

    படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார்.

    சசிகுமார்
    சசிகுமார்

    மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார் அவர். 

    'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
    பல படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய்சேதுபதி, படத்தில் இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

    கவுதம் மேனன்

    இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது ‘மைக்கேல்’ படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.
    அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

    கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.

    கார்த்திகேயா திருமணம்

    இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் - நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் படத்தில் உள்ளனர்.

    இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்த நந்தா, பிதாமகன் படங்கள் அவருக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தன.

    சூர்யா - கீர்த்தி சுரேஷ்
    சூர்யா - கீர்த்தி சுரேஷ்

    தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தில் சூர்யா வயதானவராகவும், இளமையான தோற்றத்திலும் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இளம் வயது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார். வயதான சூர்யா ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ஹேமமாலினி பெயர் அடிபடுகிறது. பாலா படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
    ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.
    சென்னை:

    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

    இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.

    ஜெய்பீம்

    இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

    ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம். 

    ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. 
    மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இசைவாணி

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
    பனாஜி:

    கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

    துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் வனம் படம் இயற்கையை நேசிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    பூர்வ ஜென்மத்தை நினைவுபடுத்தும் ஜமீன் கதை 
    கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் இப்போதும் மறக்க முடியாத படம் நெஞ்சம் மறப்பதில்லை படம் இதே பாணியில் தற்போது இயக்குநர் ஸ்ரீ கண்டன் என்பவர் வனம் படத்தை எடுத்து வருகிறார். இது மறுபிறவியைப் பற்றிய பேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. 

    அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்த ஜமீன்தார் ஒருவரின் வாழ்க்கையும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பங்களையும் சேர்த்து திரில்லர் படம் இது. கதாநாயகனாக வெற்றி, கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

    வனம்

    இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை ஒரு நாள் அழிக்கும் என்பதை விளக்குகிறது இந்தப்படம். இன்றைய காலகட்டத்தில் அறிவியல், மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதால் வனம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
    பிரபல பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். பல சம்பவங்களை திரையுலகினர் வெளியில் சொல்வதில்லை. இப்போது ராணி முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

    முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்குப் பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன். என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.

    ராணி முகர்ஜி

    அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார். ராணி முகர்ஜியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    ×