என் மலர்
சினிமா செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு படத்தின் விமர்சனம்.
துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.

விழித்து பார்த்தால் சிம்பு மீண்டும் விமானத்தில் பயணிக்கிறார். இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது. அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை சிம்பு உணர்கிறார். இதையடுத்து இதிலிருந்து விடுபட சிம்பு முயற்சி செய்கிறார்.
இறுதியில் டைம் லூப்பில் இருந்து சிம்பு விடுபட்டாரா? தானும் தப்பித்து முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிம்பு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் அதிகம். இருவருக்கும் மாநாடு பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை.
ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு. தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

யுவனின் இசையில் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை விட்டு நம்மால் பிரியமுடியவில்லை. அந்த அளவிற்கு அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாநாடு’ சிறப்பு.
விஷால் தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும், படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்''. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். வரும் 2022 ஜனவரி 26 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, அர்.என்.ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டா, தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.
தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சில தினங்களுக்கு முன்பு கதிர் என்பவர் சென்றார். தற்போது மற்றொரு என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார்.

இதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘எண்ணி துணிக’. இப்படத்தில் முற்றிலும் புதுமையான பாத்திரத்தில், வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார் நடிகர் ஜெய். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் ஜெய்.
ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் எஸ்.ஜே.வெற்றிச் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின், இசை, டிரைலர் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப்.2 படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.
இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார்.
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் பெரும் சிக்கலுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியானதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை:
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மாநாடு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்.. அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மாநாடு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்.. அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை
ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ள கிராண்மா படத்தின் முன்னோட்டம்.
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு 'கிராண்மா' என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா, சூர்யா ஜே.மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா, மரினா மைக்கேல், கோகுல் சுரேஷ், சரத் அப்பானி, ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் ஆடியோ, டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே, எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (நாளை) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
பிரபல நடிகர் மன்சூரலிகான், அங்கீகாரம் இல்லாமல் வீடு கட்டப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.
வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான் வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை. இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.






