என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முன்னதாக தனது டுவிட்டரில், ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.

    சென்னை:

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பு இருந்தது.

    மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்து வந்தார்.

    அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். காணொலி மூலம் ரசிகர்கள் முன் தோன்றி உரையாடினார்.

    இந்நிலையில் ஓய்வு முடிந்து பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் இன்று (4-ந் தேதி) தன் வழக்கமான பணிகளைச் செய்ய மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டார். அதன்படி இன்று மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

    முன்னதாக தனது டுவிட்டரில், ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.

    தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    இதையும் படியுங்கள்... போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு

    பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
    அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான 'தரையோடு தூரிகை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

    சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான 'கெமிஸ்ட்ரி' உள்ளது. 

    ராதே ஷியாம்

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகிறது. யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். 
    சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு அண்ணாத்த படம் ஓடி முடிவதற்குள்ளாகவே எழுந்து விட்டது. எப்படியாவது பெரிய ஹிட் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ரஜினியை நெருக்கியிருக்கிறது. சமீபத்தில் ஐந்து இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார்கள். 

    எல்லோரிமும் தனித்தனியே கதை கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் வந்த எல்லோருமே ஒன் லைன் மட்டுமே சொல்லி ஒக்கே என்றால் முழுக்கதையைத் தயார் செய்கிறேன் என்று ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள். இது ரஜினியை ரொம்பவே சோர்வடைய வைத்திருக்கிறது. 

    அப்போதுதான் தனது இன்ஸ்டியூட் நண்பரான அந்த இயக்குநருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். நான் ஒரு வருடத்திற்கு 28 படங்கள் செய்திருக்கிறேன். அவ்வளவு கதைகள் கிடைத்தன. ஆனால் இன்று அப்படிப்பட்ட கதைகள் இப்போது கிடைக்கவில்லையே என்று பேசியிருக்கிறார். 

    ரஜினிகாந்த்

    இந்நிலையில் அடுத்தப்படம் என்பது வெற்றியைத் தொட்டாக வேண்டும், அதோடு படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இதற்குச் சரியான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது ரஜினியின் விருப்பமாக இருக்கிறது. பல மாதங்களாகவே ரவிக்குமாரிடம் தனது ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி பேசி வந்திருக்கிறார். அதனால் அடுத்தப்படம் தன் ஆஸ்தான இயக்குநர் ரவிக்குமார் என்று ரஜினி தரப்பில் கூறுகிறார்கள்.
    கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    விக்ரம்
    பா.ரஞ்சித் - விக்ரம் - ஞானவேல் ராஜா

    இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.
    இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர, இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை.

    சசிகுமார்

    தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தைத் தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது. அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
    பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் தலைப்பில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேச்சிலர் திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடி முழக்கம் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

    ரெபல்

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதற்கு ரெபல் (Rebel) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ரெபல் தலைப்பில் ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு படம் ஒன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.
    காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் டைரக்டு செய்தார். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். 

    கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர். 

    இளையராஜா

    இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

    மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    எப்.ஐ.ஆர்.

    இந்நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் அறிவித்து இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
    தமிழில் பல படங்களில் நடித்து பலருடைய கவனத்தை பெற்ற நடிகை பூர்ணா, சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது. சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

    சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன். 

    பூர்ணா

    சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்றார்.
    கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பிகில் சின்ன படம், நஷ்டம் அடைந்த படம் என்று கூறியிருக்கிறார்.
    ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

    "இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். "நீங்கள் வந்தால் களை கட்டும்" என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.  

    தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள். உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள். எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்... என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா? 

    கே ராஜன்

    அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்" என்றார்.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார்.

    இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் 'நாங்க வேற மாறி' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. 

    வலிமை

    இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் முழு பாடல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. தாய் மகன் பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.
    பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்த சுஜா வருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
    நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகை சுஜா வருணியின் கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது. 

    சுஜா வருணி

    திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார். 'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.
    ×