என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். 

    இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

    கங்கனா ரனாவத்


    இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
    அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
    2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். 

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர்.சியுடன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ராஷி கண்ணா

    இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
    பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 3.33 படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

    3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டியுடன் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், ரேஷ்மா ஆகியோரும், இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சாண்டி

    பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார். 

    சிவகார்த்திகேயன்
    சிவகார்த்திகேயன்

    மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தார். அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    முன்னணி நடிகைகள் பலரும் மதுபான விளம்பரத்தில் நடித்து வருவதால், அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார். 

    தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    ஹன்சிகா - பூஜா ஹெக்டே

    திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது. பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.
    எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வாலி படத்தின் இந்தி ரீமேக் உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
    எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்து இருந்தார். அவருக்கு திருப்பு முனை படமாக வாலி அமைந்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 

    எஸ்.ஜே.சூர்யா
    எஸ்.ஜே.சூர்யா

    வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. வாலி இந்தி ரீமேக்கில் அஜித்குமார் நடிக்காத பட்சத்தில் தானே நடிக்க எஸ்.ஜே.சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில் வெளியான கோர்ட்டு தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு திரைக்கதை தன்னுடையது என்பதால் வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.
    ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

    இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர். 

    மாளவிகா

    அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஐதராபாத்:

    தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் உடனிருந்து கவனித்து வந்தார்.

    இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.

    சிவசங்கர் மாஸ்டர்

    இந்நிலையில், டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சாக்ஷி அகர்வால்

    சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

    சாக்ஷி அகர்வால்

    தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங் பணிக்காக அடாத மழையில் தண்ணீர் நடந்து சென்று தனது வேலையை முடித்து இருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
    தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களில் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.

    பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

    சித்ஸ்ரீராம்

    ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா..., ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘‘உருகுதே மருகுதே..., ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா...’’ ஆகிய பாடல்கள், ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.

    இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில் உள்ள இசை குடும்பத்தை சேர்ந்தவர். ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘‘வெண்ணிலவே...’’ பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே...’’ என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல், சாதனா சர்கம் பாடி வெற்றி பெற்ற பாடல்கள்.
    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    ரம்யா கிருஷ்ணன்
    ரம்யா கிருஷ்ணன்

    இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார். 

    ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முருங்கைக்காய் சிப்ஸ்


    இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 
    ×