என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூது கவ்வும், பிட்சா 2, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்க இருக்கிறார்.
    இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

    சஞ்சிதா ஷெட்டி
    அமீர் - சஞ்சிதா ஷெட்டி - சத்யா

    கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின் ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார். கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, ”அதர்மம்”, ”பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, வெளியாக இருக்கும் ஒரு படத்தை பார்த்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 

    ஆன்டி இண்டியன் வரும் டிச-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிறப்புக் காட்சித் திரையிடலில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

    இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த புளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன். 

    பாரதிராஜா
    மாறனை பாராட்டும் பாரதிராஜா

    ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான்’’ என்றார்.
    கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    கமல்

    இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.
    கமல் நடித்துள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு அரங்கில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கின. தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அதுபோல், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கிறார். 

    இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. தற்போது இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. 

    தமன்னா
    தமன்னா

    இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதில் வேறு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

    திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. தற்போது காஜல் அகர்வாலுக்கு பதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு தமன்னாவை ஆரம்பத்தில் இருந்து நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.

    விஜய் சேதுபதி

    விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
    குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் உள்ள ஒரு படத்தில் சரத்குமார்- சுஹாசினி இருவரும் மண் சார்ந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
    ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, “இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். இது எனக்கான கதை என்றார்.

    மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கிறார். இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார்.
    பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண் என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது.

    ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன்.

    எனது தாய்மொழி பஞ்சாபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘கிராண்ட்மா' படம் திரைக்கு வர உள்ளது.

    எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் இருக்கிறார். அவர் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றாலும், சொந்த குரலில் பாடி நடிக்கவில்லை. அடுத்து ஒரு படத்தில் பாடகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு நடிகை சோனியா அகர்வால் பேசினார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
    காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார்.

    சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். அடுத்ததாக திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

    செல்வராகவன்
    மோகன் ஜி - செல்வராகவன்

    மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
    எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    பட பூஜை

    கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
    தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    ‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'பேரன்பு' படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணும் கண்ணும்' பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

    'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் கலந்து' பாடலும், அதற்கு இடையே வரும் 'சபாஷ் சரியானப் போட்டி' என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது. இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத சாதனாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    சாதனா

    பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன் படத்தின் குழுவினர், சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார்கள்.
    சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாயோன்' படத்தின் டீசர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

    இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ''மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம் என பதிவிட்டிருக்கிறார்.

    மாயோன் படத்தில் சிபிராஜ் - தன்யா
    மாயோன் படத்தில் சிபிராஜ் - தன்யா

    'மாயோன்' படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுதிறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

    இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீசர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    கமல்
    கமல்

    கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ×