என் மலர்
தலைப்புச்செய்திகள்

கமல்
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.
Next Story






