என் மலர்
இது புதுசு
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா 2020 மாடல் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஃபோர்ஸ் குர்கா 2020 ஆஃப்ரோடு எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறை ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. இந்திய சந்தையில் தனது என்ட்ரி லெவல் எக்ஸ்7 கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனம இந்திய சந்தையில் புதிய என்ட்ரி லெவல் எக்ஸ்7 எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 3-டி டி.பி.இ. மாடல் விலை ரூ. 92.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பேஸ் வேரியண்ட் மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 காரின் விலையை இந்திய சந்தையில் ரூ. 6 லட்சம் வரை குறைத்து இருக்கிறது. எனினும், புதிய என்ட்ரி லெவல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், மிட் ரேன்ஜ் மற்றும் டாப் எண்ட் மாடல் விலையை பி.எம்.டபுள்யூ. அதிகரித்து இருக்கிறது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 - எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ., எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் மற்றும் எக்ஸ்டிரைவ் 40ஐ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மிட் ரேன்ஜ் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 1.02 கோடி மற்றும் ரூ. 1.06 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 254 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாருதி டிசையர் மாடல்: Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் Zxi+ மேனுவல் மற்றும் ஆட்டமேடிக் வேரியண்ட் விலை முறையே ரூ. 8.28 லட்சம் மற்றும் ரூ. 8.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் புதிய எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற கிரில், மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 இன்ச் பிரெசிஷன் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி டிசையர் மாடலில் அடுத்த தலைமுறை K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVTBS6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. மற்றும் 133 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
லெக்சஸ் நிறுவனம் டாட்டூ போடப்பட்ட உலகினஅ முதல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மனிதர்களிடையே டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் சாதாரணமான ஒன்று தான். ஆனால் காருக்கு டாட்டூ போடுவதை இதுவரை யாரும் நினைத்திருக்க மாட்டோம்.
இதை சாத்தியப்படுத்தும் வகையில் டாட்டூ போடப்பட்ட உலகின் முதல் காரை லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. லெக்சஸ் நிறுவனத்தின் யு.எக்ஸ். காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான டாட்டூ வடிவமைப்பினை லண்டனை சேர்ந்த கிளாடியா டி சபே என்ற டாட்டூ கலைஞர் உருவாக்கி இருக்கிறார்.

வெள்ளை நிற காரில் டாட்டூ போடும் ஊசிக்கு பதில் டிரிமெல் ட்ரில் கருவி பயன்படுத்தி டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய ஜப்பான் நாட்டு கலையை பரைசாற்றும் வகையில் டாட்டூ வடிவைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
நாள் ஒன்று ஐந்து முதல் எட்டு மணி நேர உழைப்பில் காருக்கு முழுமையாக டாட்டூ போட ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டாட்டூ போடப்பட்ட யு.எக்ஸ். மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்கிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் டஸ்டர் பி.எஸ்.6 காரினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய டஸ்டர் ஆர்.எக்ஸ்.இ. துவக்க மாடல் விலை ரூ. 8.49 லட்சம் என்றும், ஆர்.எக்ஸ்.எஸ். வேரியண்ட் ரூ. 9.29 லட்சம் என்றும் டாப் எண்ட் ஆர்.எக்ஸ்.இசட். வேரியண்ட் ரூ. 9.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய பி.எஸ்.6 ரெனால்ட் டஸ்டர் காரில் 1.5 லிட்டர் H4K நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 106 பி.எஸ். பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த காரின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இது 160 பி.எஸ். பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டஸ்டர் காரிலும் 17 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், ரிமோட் கேபின் பிரீ-கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 மாடல் வேனை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 வேன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 4.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 மாடல்களில் மாருதி இகோ தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. ஐந்து அல்லது ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனில் கிடைக்கும் மாருதி இகோ மொத்தம் 12 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இகோ காரை மாருதி நிறுவனம் கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ஷன்களிலும் வழங்குகிறது.

அனைத்து வேரியண்ட்களின் அளவுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த வேனில் ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு இந்த வேனில் டூயல் ஏர்பேக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய மாருதி இகோ சி.என்.ஜி. மாடலில் பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 73 பி.ஹெச்.பி. பவர், 101 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் அட்வென்டம் கூப் மாடல் அறிமுகம்.
நெதர்லாந்தை சேர்ந்த தனியார் வாகனங்கள் வடிவமைப்பு நிறுவனமான நீல்ஸ் வான் ரோஜ் டிசைன் அட்வென்டம் கூப் உற்பத்தி மாடலினை அறிமுகம் செய்துள்ளது.
இது லேண்ட் ரோவர் கடந்த ஜனவரியில் ரத்து செய்த எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் இரண்டு கதவுகள் கொண்ட கார் ஆகும். புதிய கார் லேண்ட் ரோவர் எஸ்.வி.ஒ. கிரியேஷன் போன்றே உருவாகிறது. இதில் கஸ்டம்-மேட் அலுமினியம் பாடிவொர்க் வழங்கப்படுகிறது.
ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப் மாடலில் லேண்ட் ரோவரின் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 525 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

அட்வென்டம் கூப் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஆடம்பர பொருட்கள் பயன்படுத்தப்படுவதோடு, வெவ்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக ஃபியூயல் ஃபில்லர் கேப்கள், டூயல் டோன் வெளிப்புற பெயின்ட்கள் வழங்கப்படலாம் என வேன் ரோஜி தெரிவித்திருக்கிறார்.
புதிய அட்வென்டம் கூப் மாடலை முழுமையாக கஸ்டமைஸ் செய்வதற்கான கட்டணம் ரூ. 2.19 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முழுமையாக உற்பத்தி செய்ய அதிகபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஏப்ரல் 3, 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பி.எம்.டபிள்யூ. புதிய டீசர் மூலம் அறிவித்து இருக்கிறது.
முன்னதாக பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் 2019 EICMA விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் குரூயிசர் ஸ்டான்ஸ், பெரிய பாக்சர் என்ஜின் உள்ளிட்டவை காணப்படுகிறது. இது தோற்றத்தில் பி.எம்.டபிள்யூ. ஆர்18 கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மாடலில் 1800சிசி, இரண்டு சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பார்க்க ஃபிளாட்-ட்வின் என்ஜின்களை போன்றே காட்சியளிக்கிறது. இதேபோன்ற என்ஜின்களை 1960-க்களில் விற்பனை செய்த வாகனங்களுக்கு பி.எம்.டபிள்யூ. வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டான் சில்வர் புல்லட் எடிஷன் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை கார் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்ஷ என அழைக்கப்படுகிறது.
இது 1920 ரோட்ஸ்டர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய டான் சில்வர் புல்லட் கலெக்ஷன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள புதிய ரோட்ஸ்டர் மாடல் அதிநவீன தோற்றத்தை கொண்டிருக்கிறது.

காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள், புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் வீல்கள் பாலிஷ் செய்யப்பட்டு அவற்றில் ஆங்காங்கே நிழல் விழும் வகையில் நிறம் பூசப்பட்டுள்ளது. காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் மூலம் கோட் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் மொத்தம் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ரோட்ஸ்டர் கார் இருவர் பயணிக்கும் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றி எவ்வித தகவலும் இதுவரை வெளியாகிவில்லை. எனினும், இது ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹண்ட்டர், ஷெர்பா, ஃபிளையிங் ஃபிளீ மற்றும் ரோட்ஸ்டர் என புதிய பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியானது. புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடலாக வெளியாகும் என தெரிகிறது.

இது ராயல் என்ஃபீல்டு ஹிமாலன் மாடலுக்கு மாற்றாகவோ அல்லது ஹிமாலயன் மாடலின் சிறிய வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடல் தவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பழைய மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.
முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் 250சிசி என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் வடிவமைப்பு பார்க்க டாமினர் 400 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள், ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர், லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர், 23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டாமினர் 250 மாடலில் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் பாரெல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இது டாமினர் 400 மாடலை போன்ற சவுகரியத்தை வழங்குகிறது. இதுதவிர மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல்: கேன்யான் ரெட் மற்றும் வைன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ பெட்ரோல் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மராசோ பெட்ரோல் மாடல்களை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த காரின் பி.எஸ்.6 டீசல் மாடல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா மராசோ பெட்ரோல் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் எம் ஸ்டாலியன் ரக டர்போ சார்ஜ் செய்யப்பட்ட காசோலைன் டைரெக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

எம் ஸ்டாலியன் சீரிஸ் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம் ஸ்டாலியன் ஜி15 என்ஜின் பெறும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் வாகனமாக மஹிந்திரா மராசோ இருக்கிறது. இதே என்ஜின் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மஹிந்திரா மராசோ மாடல் இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா பெட்ரோல் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய மராசோ மாடல் விலை ரூ. 7.59 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.21 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
தற்சமயம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடல்களின் விலை ரூ. 15.36 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.






