என் மலர்
இது புதுசு
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 890சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 115 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்போதைய எம்டி 09 மாடலில் 847சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 111 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் புதிய யமஹா எம்டி 09 எஸ்பி மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் யூனிட், ஸ்லைடு கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், 3.5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
தற்சமயம் யமஹா எம்டி 09 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய 2021 எம்டி 09 எஸ்பி எடிஷன் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா புத்தம் புதிய டைகர் 850 ஸ்போர்ட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலை நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அட்வென்ச்சர் டூரர் ரக மாடல்களில் புதிய மாடலாக டைகர் 850 ஸ்போர்ட் அறிமுகமாக இருக்கிறது. புதிய டைகர் 850 ஸ்போர்ட் டைகர் 900 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய மாடலில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

டீசரில் புதிய மாடலின் அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வடிவமைப்பு டைகர் 1050 மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் டைகர் 900 மாடலை விட இது வித்தியாச தோற்றம் பெற்று இருக்கும் என தெரிகிறது.
முதற்கட்டமாக டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும். பின் இந்தியாவில் 2021 வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இது என்ட்ரி லெவல் டைகர் சீரிஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலாக இருக்கும்.
லேண்ட் ரோவர் நிறுவனம் அசத்தல் அப்டேட்கள் நிறைந்த டிஸ்கவரி மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2021 மாடல் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இதுவரை இல்லாத அளவு மிகவும் சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. தோற்றத்தில் புதிய மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் எஸ், எஸ்இ, ஹெச்எஸ்இ மற்றும் ஆர் டைனமிக் என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் ஆர் டைனமிக் மாடல் பல்வேறு ஸ்போர்டி அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
புதிய டிஸ்கவரி மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 300 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது. இது 360 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பென்ட்லி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பென்ட்லி நிறுவனம் பியாண்ட்100 திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பென்ட்லி நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது கிரீவ் ஆலை தற்சமயம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 75 சதவீதம் வரை குறைக்க இருக்கிறது.
பியாண்ட்100 திட்டத்தை நிறைவேற்றி உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனம் என்ற பெருமையை எட்டுவோம் என பென்ட்லி நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்தார்.

மேலும் 2030-க்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 2021 வாக்கில் பெண்ட்யகா ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
2025 வாக்கில் பென்ட்லி தனது முழுமையான எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹை-ரைடிங் கிராஸ்ஒவர் செடான் மாடல் ஆகும். இது வழக்கமான எஸ்யுவி மற்றும் வழக்கமான கார் மாடலாக இருக்கும்.
மினி நிறுவனம் இந்தியாவில் சந்தையில் கூப்பர் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் ஜெசிடபிள்யூ ஜிபி இன்ஸ்பையர்டு எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கூப்பர் மாடல் விலை ரூ. 46.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரேசிங் கிரெ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்பெஷல் எடிஷன் வெறும் 15 யூனிட்களே விற்பனைக்கு வர இருக்கின்றன. இது சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.

தோற்றத்தில் இந்த மாடல் சற்று பிரம்மாண்டமாகவும், ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற கிரில், டோர் ஹேண்டில்கள், பியூவல் பில்லர் கேப், வெளிப்புறம் மற்றும் ஹெட்லைட், டெயில் லைட்களின் உள்புறம் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின் பவர்டு டர்போ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
டாடா நெக்சான் மாடல் கார் உற்பத்தியில் 1,50,000 யூனிட்களை கடந்துள்ளது. இந்த யூனிட் டாடா மோட்டார்ஸ் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
காம்பேக்ட் எஸ்யுவி மாடல் 2018 செப்டம்பர் வாக்கில் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்தது. பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில், புதிய மைல்கல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 2020 வாக்கில் டாடா நெக்சான் அதிக விற்பனையை பதிவு செய்தது. 2018 ஆண்டு வாக்கில் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் பெற்றது.
இதைத் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் டிகோர் போன்ற மாடல்கள் அதிக பாதுகாப்பான மாடல் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கின்றன.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடாலன ஜாகுவார் ஐ பேஸ் முன்பதிவை துவங்கி உள்ளது. ஜாகுவார் ஐ பேஸ் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மாடல் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, இகெய்ர் கிரே, போர்டோபினோ புளூ, பரலூன் பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்சி 43 ஏஎம்ஜி கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி 4மேடிக் கூப் மாடல் இந்திய சந்தையில் ரூ. 76.70 லட்சம், எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஏஎம்ஜி மாடல் ஆகும்.
இந்த மாடல் பூனேவின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் மற்ற ஏஎம்ஜி மாடல்கள் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. புதிய மெர்சிடிஸ் மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடலில் பேன்னமெரிக்கா கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் ஏஎம்ஜி ஸ்பெக் அலாய் வீல்கள், புதிய எல்இடி லைட்கள், குவாட் டிப் ஏஎம்ஜி பெர்பார்மன்ஸ் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 எம் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்3 எம் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் உயர் ரக மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் துவக்க விலை ரூ. 99.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். புதிய மாடலை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என பிஎம்டபிள்யூ அறிவித்து இருக்கிறது.

இந்த எஸ்யுவி மாடல் சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. எம் மாடல் என்பதால், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் பல்வேறு தனித்துவ அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடலில் 3.0 லிட்டர் எம் ட்வின்பவர் டர்போ இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 473 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.
ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் மாடல் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியிடப்படும் என தெரிகிறது.

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஹெச்ஆர்10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இந்த என்ஜின் நிசான் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது ஆகும். இது 1.3 லிட்டர், 4-பாட் ஹெச்ஆர்13 டர்போ பெட்ரோல் யூனிட்டின் 3 சிலிண்டர் யூனிட் ஆகும்.
இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படுகிறது.
2021 டிரையம்ப் டிரைடென்ட் 660 ரோட்ஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புத்தம் புதிய டிரெடன்ட் 660 ரோட்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 விலை இந்திய மதிப்பில் ரூ. 6.97 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.
டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலில் புத்தம் புதிய டியுபுலர் ஸ்டீல் சேசிஸ், 41எம்எம் ஷோவா யுஎஸ்டி மற்றும் ஷோவா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 310எம்எம் ட்வின் டிஸ்க் பிரேக், இரண்டு பிஸ்டன் நிசிலன் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் இகேயுவி100 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது இகேயுவி100 மாடலை இந்திய சந்தையில் 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா தெரிவித்தார்.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இகேயுவி100 மாடலின் விலை விவரங்களை மஹிந்திரா அறிவித்தது. எனினும், தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக இகேயுவி100 வெளியீட்டு திட்டங்களில் தவிர்க்க முடியாத மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

எனினும், தற்சமயம் வெளியீட்டு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த துவங்கி உள்ளதாக மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.
மஹிந்திரா இகேயுவி100 மாடலில் 40 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 15.9 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 53 பிஹெச்பி பவர், 120 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






