என் மலர்
இது புதுசு
டொயோட்டா நிறுவனத்தின் புதிய கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டொயோட்டா நிறுவனம் கேம்ரி பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய இன்டீரியர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட கேம்ரி ஹைப்ரிட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் செடான் மாடல் ஆகும். 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய பம்ப்பர், கிரில் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய செடான் மாடல் 17 இன்ச் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் டீப் மெட்டல் கிரே ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் உள்புறம் சென்ட்ரல் கன்சோல், புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது.
டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. முதற்கட்டமாக இந்த மாடல் தாய்லாந்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சிட்டி ஹேட்ச்பேக் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அந்நிறுவனத்தின் போன தலைமுறை சிட்டி செடான் உருவான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் பின்புறம் அகலமாகவும், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஹோண்டா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிட்டி ஹேட்ச்பேக் ஆர்எஸ் டர்போ குயிஸ் வேரியண்ட் ஆகும். இதில் பிளாக்டு-அவுட் கிரில், 16 இன்ச் அலாய் வீல்களில் டார்க் குரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை.
சிட்டி ஹேட்ச்பேக் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 122 பிஹெச்பி பவர், சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
தென் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற சந்தைகளில் தற்சமயம் விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு மாற்றாக புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் விலை ரூ. 16.26 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பேஸ்லிப்ட் மாடல் ஸ்பார்க்ளிங் பிளாக் மற்றும் க்ரிஸ்டல் ஷைன் என இரண்டு புதிய நிறங்கள், மூன்று ட்ரிம் மற்றும் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய இன்னோவா மாடல் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலில் புதிய முன்புற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அதன்படி புதிய 5-ஸ்லாட் முன்புற கிரில், எக்ஸ்டென்டெட் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் இன்டிகேட்டர் லைட்கள், எம்ஐடி இன்டிகேஷன் வழங்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலில் ஸ்மார்ட் பிளேகாஸ்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடல்களில் கேமல் டேன் லெதர் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 166 பிஹெச்பி, 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து, முன்பதிவையும் துவங்கி உள்ளது. புதிய மேக்னைட் மாடல் விநியோகம் டிசம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில், புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் டிசம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய நிசான் மேக்னைட் மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஜீப் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜீப் நிறுவனம் தனது 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை சீனாவில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் காம்பஸ் மாடல் மிட்-லைப் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் போதும் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அளவில் 29எம்எம் மற்றும் 17எம்எம் வரை நீளமும் உயரமும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

முன்புறம் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது. முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு ஏர் இன்லெட் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கார் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட எஸ் 1000 ஆர்ஆர் புல்லி-பேர்டு மாடலின் நேக்கட் ரோட்ஸ்டர் எடிஷன் ஆகும்.
புதிய 2021 எஸ் 1000 ஆர் மாடல் முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முன்புறம் ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், ட்வீக் செய்யப்பட்ட பியூவல் டேன்க் டிசைன், குவாட்டர் பேரிங், எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் மேம்பட்ட சேசிஸ், பிளெக்ஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் எடையை ஒட்டுமொத்தமாக குறைக்க வழி செய்கிறது. இதனால் மோட்டார்சைக்கிளை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கிறது.
2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் மோட்டார்சைக்கிளில் 999சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2015 முதல் விற்பனையாகி வரும் மேபக் எஸ் கிளாஸ் சீரிசில் மெர்சிடிஸ் பென்ஸ் இதுவரை உலகம் முழுக்க 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் முன்புற கிரில், பொனெட், அலாய் வீல் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர ஆப்ஷனல் டூ-டோன் பெயின்ட்டிங் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் இரண்டாம் தலைமுறை MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.8 இன்ச் டேப்லெட் போன்ற OLED இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் 3டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
புதிய மேபக் எஸ் கிளாஸ் மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள், 48 வோல்ட் இகியூ பூஸ்ட், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் எஸ்யுவி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பி எஸ்யுவி மாடலின் கான்செப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கைகர் எனும் பெயரில் அறிமுகமாகிறது. ரெனால்ட் கைகர் மாடல் முதற்கட்டமாக இந்தியாவிலும் அதன்பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய கைகர் மாடல் CMFA+ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது ரெனால்ட் - நிசான் - மிட்சுபிஷி கூட்டணியின் பேரில் உருவாகிறது. நிசான் மேக்னைட் மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடலில் பிரம்மாண்ட தோற்றம், ஏ பில்லர், உயர்த்தப்பட்ட பொனெட் லைன் கொண்டிருக்கிறது. முன்புறம் 2 ஸ்கேல் எல்இடி ஹெட்லைட்கள், 2 ஸ்லாட் கிரில் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட லைட்கள் பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறம் மெஷ் போன்ற ஏர் இன்டேக் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2022 ஹோண்டா சிவிக் ப்ரோடோடைப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் செடான் ப்ரோடோடைப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சிவிக் ப்ரோடோடைப் தற்போதைய சிவிக் மாடலை விட அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது.
2022 சிவிக் மாடல் மினிமலிஸ்டிக் ஸ்டைலிங், சிறு வளைவுகள், கிரீஸ்கள் இடம்பெற்று இருக்கின்றன. இவை காருக்கு நவீன தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், பியானோ-பிளாக் பினிஷ் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பரில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 19 இன்ச் அலாய் வீல்கள், கருப்பு நிற ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. இது பிளாக்டு-அவுட் பி-பில்லருடன் மேட்ச் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பின்புறம் ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள் டூயல் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய ஹோண்டா சிவிக் 11-ஆம் தலைமுறை மாடல் பல்வேறு பாடி டைப்களில் கிடைக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது செடான் மற்றும் ஹேட்ச்பேக் வடிவில் கிடைக்கும். இதுதவிர டைப் ஆர் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் கான்செப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய மாடல் காருக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசர் வீடியோவின் படி இந்த மாடல் கைகர் என கூறப்படுகிறது. மேலும் இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ரெனால்ட் கைகர் மாடல் டிரைபர் மற்றும் நிசான் மேக்னைட் உருவான பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

முன்னதாக கைகர் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதன் வெளிப்புறம் எல்இடி டிஆர்எல்கள், பம்ப்பரில் ஹெட்லேம்ப், ரூப் ரெயில்கள், ஷார்க் பின் ஆன்டெனா, இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டூயல் டோன் இன்டீரியர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மினி எஸ்யுவி மாடலை ஹெச்பிஎக்ஸ் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இதே மாடலின் கான்செப்ட் வடிவத்தை டாடா மோட்டார்ஸ் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஹெச்பிஎக்ஸ் என்கிற ஹான்பில் மாடல் 2021 மே மாத மாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு திட்டம் தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் ஸ்பை படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஸ்பை படங்களில் இந்த காரின் பெரும்பாலான அம்சங்கள் தெரியவந்து இருக்கின்றன. புதிய டாடா கார் அந்நிறுவனத்தின் ஆல்பா ஆர்கிடெக்ச்சர் மற்றும் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் டிமெரோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எபிக், ஸ்பிக் மற்றும் டாரியோ என மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த விண்ணப்பத்தை டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் சமர்பித்து இருந்த நிலையில், தற்சமயம் பெயர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
காப்புரிமை விண்ணப்பங்களின் படி புதிய பெயர்களை தனது எதிர்கால மாடல்களில் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்கள் எந்த கிளாஸ் வாகனங்களுக்கு சூட்டப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
டாடா நிறுவனம் விரைவில் கிராவிடாஸ் மறஅறும் ஹான்பில் என இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.






