என் மலர்
இது புதுசு
புகாட்டி நிறுவனத்தின் 1824 பிஹெச்பி பவர் கொண்ட ஹைப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான புகாட்டி சர்வதேச சந்தையில் தனது புதிய ஹைப்பர்கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹைப்பர்கார் பொலைடு என அழைக்கப்படுகிறது. இது பந்தய களத்திற்கென உருவாக்கப்பட்ட கார் ஆகும்.
புகாட்டி பொலைடு என்றால் மிகவும் வேகமான கார் என அர்த்தமாகும். இது ஹைப்பர்கார் கான்செப்ட் உடன் ஒத்துப்போகும் என்பதால் சூட்டப்பட்டு இருக்கிறது.

புதிய பொலைடு மாடலில் புகாட்டியின் பிரபலமான 8.0 லிட்டர் குவாட்-டர்போ டபிள்யூ16 என்ஜினின் மேம்பட்ட வெர்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 1824 பிஹெச்பி பவர், 1850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.17நொடிகளிலும், மணிக்கு 0 முதல் 500 கிலோமீட்டர் வேகத்தை 20.16 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அிகபட்சமாக மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஜீப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஜீப் காம்பஸ் மாடல் 2016 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். எனினும், வெளிப்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதன் ஹெட்லேம்ப், எல்இடி யூனிட்கள் மெல்லியதாக இருக்கின்றன.

மேலும் கிரில் கூர்மையான தோற்றம் கொண்டு இருக்கும். முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், மேம்பட்ட அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காரின் வெளிப்புற தோற்றத்தில் செய்யப்படும் மாற்றங்களாக இருக்கின்றன.
புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அதிநவீன எல்2 ஆட்டோனோமஸ் டிரைவிங் சிஸ்டம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹைவே அசிஸ்ட், டிராபிக் ஜாம் அசிஸ்ட், டிராபிக் சைன் ரெகக்னீஷன், லேண் கீப் அசிஸ்ட் போன்றவை வழங்கப்படலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் சிடி100 கேஎஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 46,432, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 1542 வரை அதிகம் ஆகும்.
புதிய மாடலின் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பியூவல் காஜ் இடம்பெற்று உள்ளது. இத்துடன் ரப்பர் டேன்க் பேட்கள், ஹேன்டிள்பாரில் கிராஸ்டியூப், மேம்பட்ட சீட் குஷன்கள், பெரிய கிராப் ரெயில், நீண்ட மிரர் ஸ்டெம், லென்ஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 102சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.79 பிஹெச்பி பவர், 8.34 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் கிளாஸ் எபானி பிளாக் மற்றும் புளூ டீகல்கள், மேட் ஆலிவ் கிரீன் மற்றும் எல்லோ டீகல்கள், கிளாஸ் பிளேம் ரெட் மற்றும் பிரைட் ரெட் டீகல்கள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய மல்டிஸ்டிராடா 950 எஸ் மாடல் முன்பதிவு துவங்கி உள்ளது. இதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலின் பிஎஸ்6 வெர்ஷனுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்பதிவு மட்டுமின்றி பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் மாடல் இந்தியாவில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விநியோகம் நவம்பர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது.

இந்த மாடல் டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை என அனைத்து டுகாட்டி விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.
பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலில் 937சிசி டெஸ்டாஸ்டிரெட்டா எல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் டிசைன் ஸ்கெட்ச் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய காரின் டிசைன் ஸ்கெட்ச் இடம்பெற்று இருக்கிறது.
தற்போதைய டீசரின் படி புதிய மாடலில் எலைட் எனும் பெயர் நீக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. சர்வதேச மாடல் என்பதால், புதிய ஐ20 ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சஸ்நஸ் ஸ்போர்டினஸ் வடிவமைப்பு முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பி பிரிவு ஹேட்ச்பேக் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புறம் கொண்டிருக்கிறது. இதில் கூர்மையான ஹெட்லேம்ப்கள், பிளாக்டு-அவுட் கிரில், பம்ப்பர், பின்புறம் இசட் வடிவ எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது. இதன் அலாய் வீல்களும் அசத்தல் தோற்றம் கொண்டிருக்கின்றன.
புதிய ஐ20 மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதே மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்250 மோட்டார்சைக்கிள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனம் 2021 இசட்250 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் பியல் நைட் ஷேட் டியல் எக்ஸ் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி கார்டினல் ரெட் எக்ஸ் மெட்டாலிக் பிளாட் ஸ்பா்ர்க் பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

இதன் தோற்றம் பெரிய இசட் சீரிஸ் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 248சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு எனஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 36.5 பிஹெச்பி பவர், 22.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஎம்ஜி ரக கார்களை உற்பத்தி செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடல் நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து உள்ளது.

புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடல் விலை ரூ. 80 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலில் 3.0 லிட்டர் வி6 பை-டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கேயுவி100 என்எக்ஸ்டி மாடலை சத்தமின்றி அப்டேட் செய்து உள்ளது. அந்த வகையில் புதிய மாடல் தற்சமயம் டூயல் டோன் பெயின்ட்டிங்கில் கிடைக்கிறது. புதிய மேம்பட்ட கேயுவி100 டூயல் டோன் மாடல் துவக்க விலை ரூ. 7.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கார் விவரங்கள் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் அப்டேட் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் புதிய கார் சில்வர் \ பிளாக் மற்றும் ரெட் \ பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. டூயல்-டோன் ஆப்ஷன் டாப் எண்ட் கே8 மாடலில் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கேயுவி100 டூயல் டோன் வேரியண்ட் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 7500 வரை விலை அதிகம் ஆகும். மஹிந்திரா மோனோ டோன் மாடல் பியல் வைட், டேஸ்லிங் சில்வர், பிளேம்பொயன்ட் ரெட், பியரி ஆரஞ்சு, டிசைனர் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா கேயுவி100 கே2 பிளஸ், கே4 பிளஸ், கே6 பிளஸ் மற்றும் கே8 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் எம்பால்கன் ஜி80 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 82 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்னைட் மாடல் கார் அசத்தல் தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
நிசான் நிறுவனம் சர்வதேச சந்தையில் புத்தம் புதிய மேக்னைட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
நிசான் மேக்னைட் மாடல் சர்வதேச சந்தையில் இந்த பிராண்டின் புதிய பி-எஸ்யுவி மாடல் ஆகும். மேக்னைட் மாடல் விற்பனை முதற்கட்டமாக இந்திய சந்தையில் துவங்கும் என நிசான் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் புதிய நிசான் மேக்னைட் மாடல் நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி நிசான் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் கடந்த வாரம் கியூ2 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாடல் அறிமுக நிகழ்விலேயே மற்றொரு புதிய மாடல் வெளியீட்டு விவரங்களை ஆடி தெரிவித்தது.
அந்த வகையில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டீசரும் வெளியிடப்பட்டு உள்ளது.

டீசர்களின் படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெரிய சிங்கிள் பிரேம் கிரில், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப்கள், பெரிய அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூப்-லைன் மற்றும் பிளாக்டு-அவுட் ORVMகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துட் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
நிசான் மேக்னைட் மாடலுக்கான அசத்தல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் நாளை (அக்டோபர் 21) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 18 மாதங்களில் 12 புதிய மாடல்களை வெளியிடும் நிசான் நெக்ஸ்ட் திட்டத்தின் கீழ் புதிய மேக்னைட் மாடல் அறிமுகமாகிறது.
புதிய கார் அறிமுக நிகழ்வை ஒட்டி, நிசான் தனது மேக்னைட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் மேக்னைட் மாடல் மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பம்ப்பரில் எல் வடிவ டிஆர்எல்கள், ஹாலோஜன் வடிவ கிரில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

காரின் பின்புறம் ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் டிசிஇ 100 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 160என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மாடலின் லிமிட்டெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்விப்ட் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. லிமிட்டெட் எடிஷன் அம்சங்களை ரூ. 24,990 விலையில் பெற முடியும்.
மாற்றங்களை பொருத்தவரை மாருதி சுசுகி ஸ்விப்ட் லிமிட்டெட் எடிஷன் கிரில், டெயில் லைட்கள் மற்றும் பாக் லைட்களில் முழுமையான பிளாக் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பாடி கிட், சைடு மோல்டிங், டோர் வைசர்கள் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவைகளில் கிளாஸி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

உள்புறம் புதிய சீட் கவர்கள் தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.






