என் மலர்tooltip icon

    இது புதுசு

    மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இரு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கன்ட்ரிமேன் மாடல் கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 39.50 லட்சம் மற்றும் ரூ. 43.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய கன்ட்ரிமேன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் கார் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

     மினி கன்ட்ரிமேன்

    வெளிப்புறம் புது கன்ட்ரிமேன் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் கிலாஸ் பிளாக் மெஷ்-ரக கிரில், சிறிய வட்ட வடிவம் கொண்ட பாக் லேம்ப், சில்வர் பேஷ் பிளேட் உள்ளது. பக்கவாட்டில் சில்வர் ரூப் ரெயில்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய கன்ட்ரிமேன் இரு மாடல்களிலும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட், ஸ்பெஷல் எடிஷனில் 7 ஸ்பீடு டிசிடி ஸ்போர்ட் யூனிட் வழங்கப்படுகிறது.

    மினி கன்ட்ரிமேன் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் லாக் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மினி கன்ட்ரிமேன் ஸ்போர்ட் மற்றும் கிரீன் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.
    லெக்சஸ் நிறுவனத்தின் புதிய எல்சி 500ஹெச் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டொயோட்டாவின் ஆடம்பர பிரிவாக செயல்படும் லெக்சஸ் இந்திய சந்தையில் எல்சி 500ஹெச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட்ஸ் கூப் மாடல் விலை ரூ. 2,15,60,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் பந்தய விமானி யோஷிடி முரோயா மற்றும் லெக்சஸ் பொறியாளர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது.

    புதிய லெக்சஸ் எல்சி 500ஹெச் மாடலின் கார்னிஷ், கிரில், ரியர் விங் மற்றும் 21 இன்ச் அலாய் வீல்கள் பிளாக் நிறம் கொண்டுள்ளது. புது லிமிடெட் எடிஷன் மாடல் வைட் நோவா கிளாஸ் பிளேக், சோனிக் சில்வர் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

     லெக்சஸ் எல்சி 500ஹெச் லிமிடெட் எடிஷன்

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை லெக்சல் எல்சி 500ஹெச் மாடலில் 3.5 லிட்டர், 6 சிலிண்டர் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 354 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஜாகுவார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஜாகுவார் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை மார்ச் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்கியது.

     ஜாகுவார் ஐ பேஸ்

    ஜாகுவார் ஐ பேஸ் மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த கார் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, போர்டோபினோ புளூ, பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
    போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    போர்டு மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது வேரியண்ட் வெளியீட்டை உணர்த்தும் வகையில் போர்டு நிறுவனம் இகோஸ்போர்ட் எஸ்இ மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.

    டீசரின்படி புது வேரியண்ட் டெயில் கேட் பகுதியில் ஸ்பேர் டையர், பின்புறம் புது வடிவமைப்பு, குரோம் கார்னிஷ் மற்றும் பாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. புது இகோஸ்போர்ட் மாற்றங்கள் பற்றி போர்டு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     போர்டு இகோஸ்போர்ட்

    இவைதவிர புது வேரியண்ட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்று சில்வர் ரூப் ரெயில்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் பாக் லேம்ப்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    கடந்த மாதம் போர்டு தனது இகோஸ்போர்ட் விலைகள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் வி8 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    லேண்ட் ரோவர் நிறுவனம் சக்திவாய்ந்த டிபென்டர் வி8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் வி8 மாடல் 518 பிஹெச்பி பவர் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் இதுவரை உருவானதிலேயே அதிக திறன் கொண்ட டிபென்டர் வேரியண்ட் ஆகும். 

     லேண்ட் ரோவர் டிபென்டர் வி8

    புதிய டிபென்டர் மாடலின் உள்புறம் 11.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் பூஸ்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட ஏஜெ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 518 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ புது வேரியண்ட் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் விலை ரூ. 11.67 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த வேரியண்ட் ஸ்கார்பியோ எஸ்யுவியின் புதிய பேஸ் மாடல் ஆக அறிமுகமாகி இருக்கிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. விற்பனையகம் வந்துள்ள மாடல் நபோலி பிளாக் நிறம், 17 இன்ச் ஸ்டீல் வீல்களை கொண்டுள்ளது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேஸ் மாடலில் எஸ்5 வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எனினும், சைடு-ஸ்டெப், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், வினைல் சீட், பம்ப்பரில் பாடி கிளாடிங் உள்ளிட்டவை புது வேரியண்ட்டில் இடம்பெறவில்லை. புதிய மாடலில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீரிங், மேனுவல் HVAC, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்டார் சிட்டி மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மாடல் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டீசரின்படி புதிய மாடல் பிஎஸ்6 வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடல் 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 வேரியண்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், புதிய மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

     2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

    2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பிளாக்டு-அவுட் மிரர், க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர், கிராப் ரெயில், உயரமான விண்ட்ஸ்கிரீன், பியூவல் டேன்க் மீது டிவிஎஸ் பிராண்டிங் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்போதைய பிஎஸ்6 மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், இகோ-திரஸ்ட் பியூவல்  இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 சி கிளாஸ் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் சர்வதேச சந்தையில் புதிய சி கிளாஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 சி கிளாஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய சி கிளாஸ் மாடல் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஏ கிளாஸ் மற்றும் இ கிளாஸ் மாடல்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கிரில், பொனெ்ட், மேம்பட்ட லைட் கிளஸ்டர் மற்றும் குறைந்த ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

    காரின் வெளிப்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், வீல்பேஸ் முந்தைய மாடலை விட 25எம்எம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த நீளம் முந்தைய மாடலை விட 65 எம்எம் அதிகமாக இருக்கிறது. உள்புறம் புதிய மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் செங்குத்தாக தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் பல்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதல் முறையாக சி கிளாஸ் மாடலில் 48V பெல்ட் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினை பொருத்தவரை இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்கள் வெவ்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இதன் சி180 யூனிட் 169 பிஹெச்பி பவர், 263 என்எம் டார்க் செயல்திறனும், சி200 யூனிட் 203 பிஹெச்பி, 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    டாப் எண்ட் 1.5 லிட்டர் யூனிட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். பெட்ரோல் தவிர 2.0 லிட்டர் யூனிட் சி300 வேரியண்டில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 259 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் சி300 வேரியண்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 2019 சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் ஹூண்டாய் அறிமுகம் செய்த கான்செப்ட் 45 மாடல் தற்சமயம் ஐயோனிக் 5 எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

    வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐயோனிக் 5 மாடலில் பிக்சல் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கிளாம்ஷெல் பொனெட் கான்செப்ட் மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20 இன்ச் ஏரோடைனமிக் டிசைன் செய்யப்பட்ட டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பின்புறம் பிக்சலேட் செய்யப்பட்ட டெயில் லைட்கள், பிளாக் ஸ்டிரைப் உள்ளிட்டவை அசத்தல் தோற்றத்தை வழங்குகிறது. இதன் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் அதிக இடவசதி கொண்டுள்ளது. காரின் இருக்கைகளை பயனர் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடலை 58kWh மற்றும் 72.6 kWh என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் பெற முடியும்.

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    இவற்றுடன் ரியர் மோட்டார் அல்லது முன்புறம் மற்றும் பின்புறம் என இரு மோட்டார்களை பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் 72.6 kWh பேட்டரி ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டுள்ளது. இது 301 பிஹெச்பி பவர், 605 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டூ-வீல் டிரைவ் 214 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    சிறிய 58kWh பேட்டரி, AWD 232 பிஹெச்பி பவர் / 605 என்எம் டார்க் மற்றும் 2WD 168 பிஹெச்பி பவர் / 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வழங்கப்படும் 350 kW அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இது மற்ற அடாப்டர்களின் தேவையின்றி 400V அல்லது 800V சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.
    போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, பிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் போன்ற மாடல்களை மாற்றியமைத்தது. அதன்படி இவற்றின் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு தற்சமயம் இரண்டு அல்லது மூன்று வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. 

    இதே முறையை தற்சமயம் இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவியிலும் பின்பற்ற போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் போர்டு தனது இகோஸ்போர்ட் விலைகள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

     போர்டு இகோஸ்போர்ட்

    புகைப்படங்களின் படி புது வேரியண்ட் மேம்பட்ட டெயில்கேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. நம்பர் பிளேட் ஸ்லாட் பம்ப்பரில் இருந்து டெயில்கேட் நடுவில் மாற்றப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட் பகுதியும் குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு, பின்புறம் பம்ப்பர் சில்வர் பாக்ஸ் பிளேக் மற்றும் பிளாக் கிளாடிங் பெறுகிறது.

    இவைதவிர புது வேரியண்ட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்று சில்வர் ரூப் ரெயில்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் பாக் லேம்ப்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ மாடல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எம்பிவி மாடல் மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா நிறுவனம் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட்டை வரும் வாரங்களில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதில் 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     மஹிந்திரா மராசோ

    இந்த ஏஎம்டி யூனிட் எக்ஸ்யுவி300 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் கிராஸ்-பேடென் ஷிப்டர் மற்றும் கிரீப் மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட்டில் பவர் மற்றும் எகானமி என இரண்டு டிரைவ் மோட்களை கொண்டிருக்கும். 

    இதன் பவர் மோட் 122 பிஎஸ் பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இதன் எகாமி மோட் 100 பிஎஸ் பவர் வழங்கும் என தெரிகிறது. ஏஎம்டி யூனிட் மராசோ பெட்ரோல் மாடல்களிலும் வழங்கப்படலாம்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது முதல் ஆல்-எலெக்ட்ரிக் மிட்-சைஸ் கிராஸ் ஒவர் மாடலை பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐயோனிக் 5 என அழைக்கப்படும் புதிய கார் சில ஆண்டுகளுக்கு முன் 45 கான்செப்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டது.

    பின் கடந்த மாதம் புதிய ஐயோனிக் 5 படங்களும் வெளியிடப்பட்டன. ஐயோனிக் 5 மாடலில் புதிய எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்ம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராஸ் ஒவர் மாடலின் முன்புற இருக்கை மற்றும் சென்டர் கன்சோல் இருக்கும் கேபின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது. இந்த காரின் உள்புறம் மறுசுழற்சி செய்யப்பட்ட பைபர், பயோ பெயின்ட், இகோ-பிராசஸ் செய்யப்பட்ட லெதர் கொண்டு உருவாக்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஐயோனிக்5 மாடலில் வெஹிகில் டு லோட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது 110/220V திறன் வினியோகம் செய்யும். இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ளன.
    ×