என் மலர்
இது புதுசு
ஹூண்டாய் நிறுவனம் தனது புது எம்பிவி மாடலான ஸ்டாரியா புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு எம்பிவி மாடல் ஸ்டாரியா புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த எம்பிவி மாடல் 2021 அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்டாரியா மாடல் சொகுசு, சவுகரியம், அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் 18 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. பின்புறம் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் ஸ்டாரியா மாடலில் செங்குத்தான டெயில் லேம்ப்கள் உள்ளன.
புதிய ஹூண்டாய் ஸ்டாரியா மாடல் 7,9, மற்றும் 11 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 64 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. EQC 400 மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQC 400 எலெக்ட்ரிக் கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 99.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய பென்ஸ் EQC 400 மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக 50 EQC யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்றுத் தீர்ந்தன. தற்போது இரண்டாம் கட்ட EQC யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்து இருக்கிறது.
இம்முறை எத்தனை யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய EQC மாடல் பென்ஸ் GLC மாடல் உருவாகும் அதே பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. அதன்படி புது மாடலிலும் GLC மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் தனது எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் மார்ச் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளது. புதிய ஆடி கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு இதுவரை துவங்கப்படவில்லை. எனினும், வெளியீட்டை தொடர்ந்து இதன் வினியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் சிங்கில்-பிரேம் கிரில், எஸ்5 பேட்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., ஹெட்லேம்ப், காண்டிராஸ்ட் நிறத்தில் ORVMகள், பாக் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் மற்றும் ஸ்லோபிங் ரூப்-லைன் வழங்கப்படுகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 349 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது ஆட்டோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் இன்டிவிஜூவல் போன்ற டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
பென்ட்லி நிறுவனம் 2021 பென்ட்யகா பெர்பார்மன்ஸ் எஸ்யுவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
2021 பென்ட்லி பென்ட்யகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடல் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள விற்பனை குழுக்கள் மூலம் துவங்கி இருக்கிறது.
புதிய பென்ட்யகா மாடல் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு முந்தைய மாடலை போன்றே தோற்றம் கொண்டுள்ளது. முன்புறம் செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் இருபுறங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

பின்புறம் மெல்லிய ஒவல் வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய பூட் கிரீஸ், ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் 10.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளன.
புதிய பென்ட்யகா மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்தது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 6,87,386 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய சிபி500எக்ஸ் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இது கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. செமி-பேரிங் டிசைன், உயரமான விண்ட்ஸ்கிரீன், எல்இடி லைட்டிங், நெகடிவ் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இத்துடன் டூயல்-சேனல் ஏபிஎஸ், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய சிபி500எக்ஸ் மாடலில் 471சிசி, 8 வால்வு, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 பிஹெச்பி பவர், 43.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் மாடல் கவாசகி வெர்சிஸ் 650, சுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மற்றும் பெனலி டிஆர்கே 502 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷனை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விலையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய லிமிடெட் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய நச்தையில் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ததை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஹீரோ ஸ்பிலென்டர் பிளஸ் 100 மில்லியன் எடிஷன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 67,095 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 69,200 மற்றும் ரூ. 71,400 ஆகும். 100 மில்லியன் எடிஷன் ரெட் மற்றும் வைட் நிறங்கள் அடங்கிய டூயல் டோன் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிறம் தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்பிலென்டர் பிளஸ் மாடலில் 97.2 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.9 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பேஷன் ப்ரோ மாடலில் 113சசி, சிங்கில் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 9 பிஹெச்பி பவர், 9.89 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டிபென்டர் மாடலை புது என்ஜினுடன் அறிமுகம் செய்தது.
லேண்ட் ரோவர் நிறுவனம் சத்தமின்றி புதிய டிபென்டர் மாடலை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்தது. புதிய டிபென்டர் டீசல் வெர்ஷன் 90 மற்றும் 110 மாடல்களில் கிடைக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல்களின் விலை ரூ. 94.36 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
லேண்ட் ரோவர் டிபென்டர் டீசல் எஸ்இ, ஹெச்எஸ்இ, எக்ஸ்-டைனமிக் ஹெச்எஸ்இ மற்றும் எக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் 90 மற்றும் 110 மாடல்களில் கிடைக்கின்றன. டீசல் என்ஜின் கொண்ட மாடல்கள் பெட்ரோல் வேரியண்ட் போன்ற தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

டீசல் மாடலில் 3.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 298 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் டீசல் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 191 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய இ கிளாஸ் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 15 மாடல்களில் இதுவும் ஒன்று. முந்தைய திட்டத்தில் மாற்றம் செய்து புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை முன்கூட்டியே அறிமுகம் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து உள்ளது.

இ கிளாஸ் மட்டுமின்றி புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலையும் மெர்சிடிஸ் நிறுவனம் இந்த மாதமே அறிமுகம் செய்கிறது. புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் மார்ச் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. தற்போது இங்கு விற்பனையாகும் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய இ கிளாஸ் மாடலில் தடிமனான கிரில், புது ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர்கள், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேபின் பகுதியில் 10.25 இன்ச் அளவு கொண்ட இரு ஸ்கிரீன்கள் வழங்கப்படுகின்றன.
என்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இ200 மாடலில் இந்த என்ஜின் 194 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறனும், டீசல் என்ஜின் 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
வால்வோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியிடப்படுகிறது. அறிமுகம் செய்ததோடு, புதிய வால்வோ காருக்கான முன்பதிவு ஜூன் மாதத்தில் துவங்கும் என வால்வோ தெரிவித்து உள்ளது.

புதிய கார் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்கள் பிரிவில் புதுவரவு மாடலாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இருக்கும். தற்போது இந்த பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி மாடல் மட்டுமே கிடைக்கிறது.
எனினும், வால்வோ கார் வெளியீட்டின் போது ஜாகுவார் ஐபேஸ், ஆடி இ டிரான் போன்ற மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும். அந்த வகையில் புது வால்வோ கார் மூன்று மாடல்களுக்கு போட்டியாக அமையலாம். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் களமிறங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் இவி6 என அழைக்கப்படுகிறது. இது இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய கியா இவி6 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் டீசர்களின்படி இதன் முன்புறம் பிளாக்டு-அவுட் கிரில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பொனெட் மத்தியில் கியா லோகோ பொருத்தப்பட்டு உள்ளது. உள்புறம் கூப் மாடல்களில் உள்ளதை போன்று ஸ்லோபிங் ரூப்லைன் உள்ளது.

இந்த காரின் பின்புறத்தில் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இது ரூப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், டக்டெயில் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. ஸ்ப்லிட் லைட் கிளஸ்டர்கள் பார்க்க சீப்பு போன்ற டிசைன் கொண்டுள்ளது. இது பொனெட் கீழ்பகுதி வரை நீள்கிறது.
கியா இவி6 மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது அதிகபட்சம் 300 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் சார்ஜிங் வழங்ப்படகிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சூப்பர்பைக் மாடலுக்கான டீசரை சுசுகி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹயபுசா சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடலுக்கான டீசரை தற்போது சுசுகி வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஹயபுசா மாடல் இந்திய வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், புதிய சூப்பர்பைக் மாடல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய தலைமுறை சுசுகி ஹயபுசா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது.

இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் ஸ்போர்ட்பேக் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்போர்ட்பேக் மாடல் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. வெளியீட்டை உணர்த்தும் வகையில் ஆடி நிறுவனம் புது காரின் முன்புற படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறது.
டீசரின்படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் சிங்கில்-பிரேம் கிரில், எஸ்5 பேட்ஜிங், எல்இடி டிஆர்எல், ஹெட்லேம்ப், காண்டிராஸ்ட் நிற ORVMகள், பாக் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் மற்றும் ஸ்லோபிங் ரூப்-லைன் வழங்கப்படுகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது ஆட்டோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் இன்டிவிஜூவல் போன்ற டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.






