என் மலர்tooltip icon

    இது புதுசு

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலக்கட்டத்தில் புது மாடல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல்கள் வரிசையில் பல்சர் 250 இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், பல்சர் 250 மாடல் பல்சர் சீரிசில் பெரும் மாடலாக இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் செமி-பேர்டு டிசைன் முன்புறம் மிட்-சைஸ் பேரிங், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், அலாய் வீல்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது.

     பஜாஜ் பல்சர் என்எஸ்200

    புதிய பல்சர் 250 மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடலில் 250சிசி, ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 28 பி.எஸ். திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கலாம்.

    ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் பிளாக் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.


    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஜாகுவார் தனது ஐ பேஸ் பிளாக் எஸ்.யு.வி.-யின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஐ பேஸ் பிளாக் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஜாகுவார் ஐ பேஸ் மாடல் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஐ பேஸ் பிளாக் மாடலில் கிளாஸ் பிளாக் நிற மிரர் கேப்கள், பிளாக் கிரில், பிளாக் சைடு விண்டோ பிரேம், 19 இன்ச் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

     ஜாகுவார் ஐ பேஸ்

    ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 394 பி.ஹெச்.பி. திறன், 696 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா பி.எஸ்.6 மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆப் ரோடு அட்வென்ச்சர் எஸ்.யு.வி. மாடல் துவக்க விலை ரூ. 13.59 லட்சம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய 2021 போர்ஸ் குர்கா மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இரண்டாம் தலைமுறை மாடலான குர்கா பி.எஸ்.6 பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     2021 போர்ஸ் குர்கா

    புதிய 2.6 லிட்டர் டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. குர்கா பி.எஸ்.6 மாடலின் சஸ்பென்ஷன் டபுள் விஷ்போன் மற்றும் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் ஜனவரி 2022 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பதாவது தலைமுறை ஆல்டோ மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ஆல்டோ மாடல் மேம்பட்ட ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்பார்மில் பல்வேறு மாடல்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. 3 சிலிண்டர் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு இருந்தாலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட என்ஜின் அதிக மைலேஜ் வழங்கும். 

     மாருதி சுசுகி ஆல்டோ

    பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி இருக்கும் ஆல்டோ மாடல் முதற்கட்டமாக ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.  

    இந்தியாவில் வெளியாக இருக்கும் மூன்றாம் தலைமுறை ஆல்டோ மாடல் ஹார்டெக்ட் கே பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் இதில் முற்றிலும் புதிய 800 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய வாகனத்திற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது வாகனம் பற்றி டி.வி.எஸ். இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இது 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது புதிய ஜூப்பிட்டர் 125 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ஆக்டிவா 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     டி.வி.எஸ். டீசர்

    புதிய இருசக்கர வாகனத்தின் டீசரில் எல்.இ.டி. டி.ஆர்.எல். தெளிவாக காணப்படுகிறது. இந்த டி.ஆர்.எல். ஸ்கூட்டரின் முன்புற அப்ரான் மீது பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டரில் 124.8சிசி சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 9.1 பி.ஹெச்.பி. திறன், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2022 ஸ்விப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலை அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் வேரியண்ட் 2017 பிரான்க்புர்ட் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2023 வாக்கில் சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மேம்படுத்தப்பட்டு 2023 வாக்கில் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலாக அறிமுகமாகும் என தெரிகிறது.

     ஸ்விப்ட் ஸ்போர்ட்

    நான்காவது தலைமுறை சுசுகி ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படலாம். 
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகுன் மாடல் துவக்க விலை ரூ. 10.49 லட்சம் ஆகும். இதன் ஜிடி லைன் மாடல் துவக்க விலை ரூ. 14.99 லட்சம் ஆகும். புதிய டைகுன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய டைகுன் மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டது என வோக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் குஷக் காரின் பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது. 

     வோக்ஸ்வேகன் டைகுன்

    டைகுன் மாடலில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட், சக்திவாய்ந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இ டிரான் ஜிடி எஸ் மற்றும் ஆர்.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    ஆடி நிறுவனம் இ டிரான் ஜிடி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் கார் துவக்க விலை ரூ. 1.80 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஆடி இ டிரான் ஜிடி எஸ் மற்றும் ஆர்.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆடி இ டிரான் ஜிடி ஆர்.எஸ். மாடல் விலை ரூ. 2.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    ஆடி இ டிரான் ஜிடி மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை 469 பி.ஹெச்.பி. திறன், 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதன் ஆர்.எஸ். மாடல் 590 பி.ஹெச்.பி. திறன், 830 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     ஆடி இ டிரான் ஜிடி

    ஆடி இ டிரான் எஸ் மற்றும் ஆர்.எஸ். மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 500 கிலோமீட்டர் மற்றும் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. 

    ஆசியாவின் முதல் பறக்கும் கார் கான்செப்ட் மாடலை மத்திய வான்வழி போக்குவரத்து துறை மந்திரி ஆய்வு செய்தார்.


    இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவன குழுவை சந்தித்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சோதனை செய்தார்.

    இது ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் என்ற பெருமையை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கான்செப்ட் உண்மையாகும் பட்சத்தில் பறக்கும் காரை போக்குவரத்து மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என சிந்தியா தெரிவித்தார். 

     பறக்கும் கார்

    மேலும் பறக்கும் கார்களை அவசர கால மருந்துகளை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். முழுமையாக தயாராகும் பட்சத்தில் இந்த ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வி.டி.ஓ.எல். வாகனம் இரண்டு பேரை சுமந்து செல்லும் என விணாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் காரில் கோ-ஆக்சியல் குவாட்-ரோட்டார் சிஸ்டம் உள்ளது.

    இத்துடன் எட்டு பி.எல்.டி.சி. மோட்டார்கள் மற்றும் எட்டு பிட்ச் ப்ரோபெல்லார்கள் உள்ளன. மோட்டார்களை இயக்க இந்த வாகனத்தில் பயோ-பியூவல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பறக்கும் காரில் அதிகபட்சம் 1300 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இந்த கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பன்ச் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    டாடா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பன்ச் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் பன்ச் மாடல் டூயல் டோன் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

    டாடா பன்ச் மாடல் இம்பேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டூயல் டோன் பம்ப்பர் உள்ளது. இதன் கீழ்புறத்தில் பாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஹெட்லேம்ப்கள் சற்றே கீழ்புறத்தில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களின் மேல்புறத்தில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன.

     டாடா பன்ச்

    தற்போதைய தகவல்களின்படி டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. ஆப்ஷன் வழங்கப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி கோல்டு எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சபாரி கோல்டு எடிஷன் விலை ரூ. 21.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யு.வி. மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள், இரண்டு பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய சபாரி கோல்டு எடிஷனிற்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது. சபாரி கோல்டு எடிஷன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23.17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

     டாடா சபாரி

    டாடா சபாரி மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் புதிய சி3 மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் 2022, முதல் அரையாண்டு வாக்கில் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    புதிய சிட்ரோயன் சி3 90 சவீத உற்பத்தி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சி3 மாடலின் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம். சிட்ரோயன் சி3 மொத்தத்தில் மூன்று கார்களை கொண்டிருக்கிறது. 

     சிட்ரோயன் சி3

    இவை பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஒரு மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிட்ரோயன் சி3 மாடல் ஐஸ் வைட், பிளாட்டினம் கிரே, ஆர்டென்ஸ் கிரே மற்றும் செஸ்டி ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.
    ×