என் மலர்
இது புதுசு
டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், விரைவில் இந்த மாடல் இங்கு அறிமுகமாகிறது.
டீசர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த மாடலுக்கான சரியான வெளியீட்டு தேதியை டுகாட்டி அறிவிக்கவில்லை. இந்த மாடலில் 937சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா 11-டிகிரி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

இத்துடன் 6 ஸ்பீடு யூனிட் மற்றும் டுகாட்டி குயிக் ஷிப்ட் அப்/டவுன் குயிக்ஷிப்டர் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் எடை முன்பை விட 2.5 கிலோ குறைவாக இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆட்டோனோமஸ் லெவல் 2 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
எம்ஜி ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆஸ்டர் மாடல் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஐந்தாவது கார் ஆகும். இதன் வெளிப்புற தோற்றம் எம்ஜி இசட்.எஸ். இ.வி. போன்றே காட்சியளிக்கிறது.
எம்ஜி ஆஸ்டர் மாடல் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இதில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரியர் ஏ.சி. வெண்ட்கள், டிஜிட்டல் கீ, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் உள்ளன.

புதிய ஆஸ்டர் மாடலில் ப்ரிட் டைனமிக் 220 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.எஸ். பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் வி.டி.ஐ. டெக் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 பி.எஸ். பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு சி.வி.டி. யூனிட் உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஆஸ்டர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆஸ்டர் மாடலில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் சிஸ்டம், ஆட்டோனோமஸ் லெவல் 2 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் சிசி21 எனும் குறியீட்டு பெயர் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் செப்டம்பர் 16 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. புது கார் அறிமுகம் பற்றிய விவரங்களை சிட்ரோயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.
புதிய சிட்ரோயன் எஸ்.யு.வி. மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டது என சிட்ரோயன் தெரிவித்து உள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சி3 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. முதற்கட்டமாக ஆசிய நாடுகளில் அறிமுகமாகி அதன்பின் லத்தீன் அமெரிக்காவில் சி3 மாடல் அறிமுகமாக இருக்கிறது.
Made In India for Indians.
— Citroën India (@CitroenIndia) September 14, 2021
See you on September 16th.#ExpressYourStyle#CitroenInIndiapic.twitter.com/uJ26zXkrDT
இந்தியாவில் 2022 சி3 எஸ்.யு.வி. மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான பன்ச் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
"டாடா பன்ச், புதிய 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. 2021 பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும்," என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய டாடா கார் நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய டாடா பன்ச் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இவற்றில் சில அம்சங்கள் இந்த பிரிவு மாடல்களில் இதுவரை வழங்கப்படாதவைகளாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் எந்த குறையும் இருக்காது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
போர்டு நிறுவனத்தின் மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
போர்டு இந்தியா நிறுவனம் தனது மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளது. முன்னதாக போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவித்தது.

மஸ்டாங் கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மஸ்டாங் மேக் இ 68 கிலோவாட் ஹவர் மற்றும் 88 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்க சந்தையில் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக போர்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த நிலையில், போர்டு தனது விலை உயர்ந்த மஸ்டாங் மேக் இ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் முன்பதிவுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் கொளத்தூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள விற்பனை மையங்களிலும், ஐதராபாத்தில் குகட்பள்ளி மற்றும் கச்சிக்குடா விற்பனை மையங்களிலும் முன்பதிவு நடைபெறுகிறது.
தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2022 ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க 22 இந்திய நகரங்களில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.42 லட்சம் மற்றும் ரூ. 1.44 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்டை அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடல் இ பைலென் என அழைக்கப்படுகிறது. இந்த மாடல் முனிச் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த அர்பன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வழக்கமான 125சிசி மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வில் ஹஸ்க்வர்னா வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய இ பைலென் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வழக்கமான ஹஸ்க்வர்னா மாடல்களில் உள்ளதை போன்ற பாடி மற்றும் பேனல்கள் உள்ளன. எனினும், பியூவல் டேன்கிற்கு மாற்றாக இ பைலென் மாடலில் கழற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ விஷன் சர்குலர் கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் முனிச் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முனிச் ஆட்டோ விழாவில் ஐ விஷன் சர்குலர் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2040 வாக்கில் சாலைகளில் வலம்வரும் என எதிர்பார்க்கலாம். அப்போது வெளியாகும் மாடல் தற்போதைய கான்செப்ட் வடிவத்தை விட வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ஐ விஷன் சர்குலர் மாடல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த அளவு 4 மீட்டர்களுக்குள் இருக்கும். இந்த கார் செக்கண்டரி அலுமினியம் மற்றும் லைட் கோல்டு அனோடைஸ்டு பினிஷ் கொண்டிருக்கிறது.

கான்செப்ட் மாடலில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி கிரில் முழுக்க முழுக்க எல்.இ.டி. விளக்குகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விண்ட்ஷீல்டு ரூப் போன்று விரியும் தன்மை கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இ.கியூ.பி. இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐ.ஏ.ஏ. ஆட்டோ விழாவில் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இ.கியூ.பி. மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.
இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு இதே மாடல் இ.கியூ.பி. 300 மற்றும் இ.கியூ.பி. 350 என இரண்டு வேரியண்ட்களில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. புதிய இ.கியூ.பி. ஏழு இருக்கைகள் கொண்ட முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

புதிய எலெக்ட்ரிக் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 66.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கி இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் எலெக்ட்ரிக் மோட்டார் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 சூப்பர்ஸ்போர்ட் 950 மோட்டார்சைக்கிளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 சூப்பர்ஸ்போர்ட் 950 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. 2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சூப்பர்ஸ்போர்ட் மாடலில் மேம்பட்ட பேரிங், இரட்டை ஏர் டக்ட்கள், ட்வின் எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன. இதன் முன்புறம் மாற்றப்பட்டு இருப்பதால், சிறப்பான ஏரோடைனமிக் வழங்குகிறது. இந்த மாடலில் 4.3 இன்ச் புல் டி.எப்.டி. டில்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 மாடலில் 937சிசி, டெஸ்டாஸ்டிரெட்டா, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
தானியங்கி டாக்சிக்களை உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் இரு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்காலத்தில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் தானியங்கி டாக்சி வாகனமாக வீதிகளில் வலம்வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய், ஆப்டிவ் மற்றும் மோஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தானியங்கி ரோபோ டாக்சியை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி டாக்சிக்கள் 2023 வாக்கில் சாலைகளில் எதிர்பார்க்க முடியும்.

தானியங்கி டாக்சிக்கள், முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாகி இருக்கும் ஐயோனிக் 5 மாடலை தழுவி எஸ்.ஏ.ஐ. லெவல் 4 ஆட்டோனோமஸ் வெஹிகில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தானியங்கி வாகனத்தில் பல்வேறு சென்சார்கள், ரிமோட் வெஹிகில் அசிஸ்டன்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஆடி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 750 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் கிராண்ட்ஸ்பியர் கான்செப்ட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. புதிய ஆடி கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் லெவல் 4 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது லெவல் 4 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் கொண்ட ஆடியின் இரண்டாவது கான்செப்ட் மாடல் ஆகும்.
புதிய கிராண்ட்ஸ்பியர் ஆடம்பர செடான் மாடல் ஆகும். இதன் முன்புறம் எல்.இ.டி. லைட்டிங், பி-ஸ்போக் இண்டீரியர், தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் உள்ளது. வீல் மற்றும் கண்ட்ரோல் அம்சங்கள் டேஷ் பேனலின் பின் மறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 120 கிலோவாட் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இ டிரான் ஜி.டி. மற்றும் போர்ஷ் டேகேன் போன்றே கிராண்ட்ஸ்பியர் மாடலிலும் 800 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது.






