என் மலர்
இது புதுசு
- ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தனது சூப்பர் மீடியோர் 650 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்தது.
- இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஷாட்கன் 650 மாடல் உருவாக்கி வருகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் சூப்பர் மீடியோர் 650 மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 துவக்க விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய குரூயிசர் மாடலில் பல்வேறு அம்சங்கள் முதல்முறையாக ராயல் என்பீல்டு மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 EICMA நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட சூப்பர் மீடியோர் 650 அதன் பின் ரைடர் மேனியா நிகழ்விலும் பயனர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ப்ரோடக்ஷன் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சூப்பர் மீடியோர் 650 அறிமுகம் செய்யப்பட்டது. சூப்பர் மீடியோர் 650 மற்றும் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஷாட்கன் 650 சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய அட்வென்ச்சர் டூரர் மாடல் புதிய பிளாட்பார்மில் உருவாகி வருவதாகவும், இதில் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைய ஸ்பை படங்களில் இந்த மாடல் புதிய கிராப் ரெயில், அளவில் பெரிய ரியர் டிஸ்க் பிரேக் கொண்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்த மாடலில் 648சிசி பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பிஎஸ் பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
Photo Courtesy: Powerdrift
- இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை விவரங்கள் வெளியீடு.
- புதிய சிட்ரோயன் eC3 மாடலில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிட்ரோயன் eC3 மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய சிட்ரோயன் eC3 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
சிட்ரோயன் eC3 மாடலில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 57 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.

தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மற்றும் அதன் IC என்ஜின் வெர்ஷன் ஒரே மாதரியே காட்சியளிக்கிறது. இரு கார்களிலும், செவ்ரன் லோகோ முன்புற கிரில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களை போன்று, eC3 மாடலில் க்ளோஸ்டு கிரில் அல்லது பெட்ரோல் மாடலில் இருப்பதை விட முற்றிலும் புது முன்புறத்தை பெறவில்லை.
இரு கார்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசமாக காரின் வெளிப்புறம் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் eC3 பேட்ஜ்கள் உள்ளன. இந்த காரில் சார்ஜிங் போர்ட் முன்புறம் வலதுபுற ஃபெண்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் மோனோக்ரோம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. டச் ஸ்கிரீன், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஒட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை ஃபீல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சஃபாரி மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.
- புதிய 2023 டாடா சஃபாரி மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஹேரியர் மாடலுடன் சஃபாரி மாடலையும் அறிமுகம் செய்தது. புதிய 2023 டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாடா சஃபாரி XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய 2023 டாடா சஃபாரி மாடலில் உள்ள என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ADAS அம்சங்களுடன், கூடுதலாக புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி ரெட் டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

2023 சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் 2.0 லிட்டர் பிஎஸ்6 2 டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
வேரியண்ட்களை பொருத்து புதிய சஃபாரி மாடலில் 10.24 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்னிங் வசதி வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு 2023 டாடா சஃபாரி மாடலில் ஆறு ஏர்பேக், எலெக்டிரானிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, மேம்பட்ட ESP மற்றும் 17 அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ADAS அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சஃபாரி மாடல் டாப் எண்ட் விலை ரூ. 24 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சீரிஸ் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.
- புதிய மாடல்கள் எல்இடி லைட், 18-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களின் ஆல்-பிளாக் வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் ராயல் என்பீல்டு லண்டன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் பிளாக்-அவுட் ஃபினிஷ் தவிர இரு மாடல்களிலும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆல் பிளாக் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களின் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் புதிய பெயிண்ட் தீம்கள் பிளாக்டு-அவுட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் ஃபோர்க் டியூப்கள் மற்றும் ரியர் வியூ மிரர்களும் பிளாக்டு-அவுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இண்டர்செப்டார் 650 மாடல் பார்சிலோனா புளூ மற்றும் பிளாக் ரே என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

காண்டினெண்டல் ஜிடி650 மாடல் அபெக்ஸ் கிரே மற்றும் ஸ்லிப்ஸ்டிரீம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. காஸ்மடிக் மாற்றங்கள் தவிர இரு மாடல்களின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் டிசைன் மற்றும் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு வெர்ஷன்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதோடு ஹெட்லைட்டில் எல்இடி யூனிட் உள்ளது. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஹாலோஜன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்விட்ச் கியர் மாற்றப்பட்டு புதிய மாடல்களில் சுழலும் ரக ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்ற யூனிட்கள் சூப்பர் மீடியோர் 650 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. காக்பிட் பகுதி, எலெக்ட்ரிக் ரைடர் அம்சங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடல்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

புதிய ஆல் பிளாக் வேரியண்ட்களில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை ஸ்டாண்டர்டு மாடல்களில் உள்ளதை போன்றே 18 இன்ச் அளவு கொண்டுள்ளன. ஆல் பிளாக் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
என்ஜினும் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே 648சிசி, பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M சீரிஸ் மாடல்களில் முதல் முறையாக 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
- புதிய சக்திவாய்ந்த எஸ்யுவி மாடல்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் விற்பனைக்கு வருகின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்பட்ட X5 மற்றும் X6 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் X5 M மற்றும் X6 M காம்படிஷன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனையும் இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்குகிறது.
தற்போதைய அப்டேட் மூலம் இரு எஸ்யுவி மாடல்களிலும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், அதிகளவில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறும் முதல் M சீரிஸ் மாடல்களாக இவை உள்ளன.

இரு எஸ்யுவிக்களிலும் 4.4 லிட்டர், வி8 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இவை 617 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் திறனை 12 ஹெச்பி வரை அதிகப்படுத்துகிறது.
புதிய எஸ்யுவிக்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. இந்த கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் ஆகும். M டிரைவர் பேக் தேர்வு செய்யும் பட்சத்தில் கார்களின் வேகம் மணிக்கு 290 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது.

இவை தவிர ரியர் ஆக்சிலில் ஆக்டிவ் M டிஃபெரன்ஷியல், X டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கார்களில் பிரமாண்ட தோற்றம், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய பிளாக்டு-அவுட் கிட்னி கிரில், ஆம்பியண்ட் லைட் பார், உள்புறம் M லோகோ, M லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் பேடில் ஷிஃப்டர்கள், செண்டர் கன்சோலில் M மோட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒகாயா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 55 கிமீ வேகத்தில் செல்லும்.
- புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 80 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஒகாயா இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஃபாஸ்ட் F2 சீரிசில் மூன்றாவது வேரியண்ட் ஆக ஃபாஸ்ட் F2F அறிமுகமாகி இருக்கிறது.
ஹார்டுவேரை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ஸ்ப்ரிங் லோடெட் ஹைட்ராலிக் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் யூனிட்கள் உள்ளன. இத்துடன் ரிமோட் கீ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மூன்று வித டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலில் 800 வாட் BLDC ஹப் மோட்டார் மற்றும் 60V36Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்று் மோட்டார் உடன் இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
புதிய ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடல் - மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சியான், மேட் கிரீன், மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் வைட் என ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய இ-ஸ்பேஸ் மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை லே-அவுட்களில் கிடைக்கும்.
- சர்வதேச சந்தையில் புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஆறாவது தலைமுறை மாடலாக உருவாகி வரும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.

புதிய இ-ஸ்பேஸ் மாடல் எம்பிவி பாடி ஸ்டைல் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் 4.72 மீட்டர் நீளம், உள்புறம் 2.48 மீட்டர் நீளமாக உள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இ-ஸ்பேஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் சி வடிவ டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர இந்த எஸ்யுவி மாடல் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், ஃபிளாட் ரூஃப்லைன், ஷார்க் ஃபின் ஆண்டெனா கொண்டிருக்கிறது.
ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் மைல்டு அல்லது ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை முறையே 140 ஹெச்பி பவர், 200 ஹெச்பி என வெவ்வேறு செயல்திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது.
- ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2023 ID.3 மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள், புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழ்கப்படுகிறது.
- புதிய ID.3 மாடலின் வினியோகம் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என ஃபோக்ஸ்வேகன் அறிவித்து இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய மேம்பட்ட ID.3 மாடலின் டிசைன் வரைபடங்களை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டு இருந்தது. இந்த மாடல் 2023 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் ID.3 மாடல் மார்ச் 1 ஆம் தேதி சர்வேதச சந்தையில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
புதிய ஃபோக்ஸ்வேகன் கார் - ID.3 ப்ரோ எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ID.3 மாடல்- ID.3 ப்ரோ லைஃப், ID.3 ப்ரோ பிஸ்னஸ், ID.3 ப்ரோ ஸ்டைல் மற்றும் ID.3 ப்ரோ மேக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. டீசர் வீடியோவில் புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக்-இன் டெயில் லைட் டிசைன் இடம்பெற்று இருக்கிறது.

தற்போதைய டீசரில் புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் டிசைன் சற்றே மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் ID.3 இரண்டாம் தலைமுறை மாடல் என்ற போதிலும், இதன் டிசைன் வரைபடங்கள் மூலம் இது மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.
வரைபடங்களில் புதிய கார் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபின் பகுதியில் புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ID.3 மாடல் அதிநவீன மென்பொருள் கொண்டிருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்கிறது.
- புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்களில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கார்களின் டீசரை வெளியிட்டு உள்ளது. வரும் வாரங்களில் புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
டாடா நெக்சான், சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் இதே கார்களின் டார்க் எடிஷனை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கார்களில் முழுக்க முழுக்க ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய கார்களில் சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஒபெரான் பிளாக் நிறத்தில் கிடைக்கும் புதிய கார்களில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், முன்புற கிரில் பகுதியில் காண்டிராஸ்ட் நிற ஹைலைட்கள் செய்யப்படுகின்றன. இவைதவிர அலாய் வீல்கள் பிளாக்-ஸ்டோன் ஃபினிஷ் மற்றும் முன்புற ஃபெண்டர்களில் டார்க் பேட்ஜ் மற்றும் சிவப்பு நிற டிடெயிலிங் செய்யப்படுகிறது. காரின் கேபின் பகுதியில் ரெட் தீம் செய்யப்பட்டு இருக்கும்.
இந்த எடிஷன்களில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. சஃபாரி மற்றும் ஹேரியர் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டாடா நெக்சான் மாடலும் ரெட் டார்க் எடிஷனாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அட்லஸ் பிளாக் பெயிண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல்கள் சார்கோல் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. நெக்சான் ரெட் டார்க் மாடலில் ADAS அம்சங்கள் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் 2023 வெர்னா மாடலுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது.
- 2023 ஹூண்டாய் வெர்னா மாடலில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் 2023 வெர்னா மாடலுக்கான டீசரை வெளியிட்டது. தற்போது புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வெர்னா காரை வாங்க விரும்புவோர் அருகாமையில் உள்ள ஹூண்டாய் விற்பனையகம் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் ஏழு மோனோடோன் மற்றும் இருவித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.
இதுதவிர 1.5 MPi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 6MT மற்றும் இண்டெலிஜண்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் RDE விதிகளுக்கு உட்பட்டு E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய i20 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
- தற்போது விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் i20 காரின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நீக்கப்படுகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய பிஎஸ்6 2 மற்றும் RDE புகை விதிகளுக்கு பொருந்தும் வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கசார் மாடல்களை தொடர்ந்து விரைவில் புதிய i20 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் படி புதிய ஹூண்டாய் i20 மாடலில் பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i20 மாடல் மேம்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 82 ஹெச்பி பவர் மற்றும் 118 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

இவற்றில் 1.2 என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜினுடன் DCT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய ஹூண்டாய் i20 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நிறுத்தப்படும் என தெரிகிறது. இதே போன்ற அப்டேட் i20 N லைன் மாடலிலும் மேற்கொள்ளப்படலாம்.
புதிய பிஎஸ்6 2 மாற்றங்களின் படி ஹூண்டாய் i20 விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். இத்துடன் புதிய கார் அம்சங்களிலும் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் அதிகளவு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx எஸ்யுவி மாடல் பலேனோ, கிராண்ட் விட்டாரா மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- புதிய Fronx எஸ்யுவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx கிராஸ்ஒவர் மாடல் இந்திய விற்பனையகங்களை வரத்துவங்கி இருக்கிறது. புதிய Fronx மாடலின் இந்திய விலை விவரங்கள் மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. சப்காம்பேக்ட் கிராஸ்ஒவர் எஸ்யுவி மாடலான மாருதி Fronx மாருதி பலேனோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய Fronx மாடல் நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் மாருதி Fronx மாடல் மாருதியின் பிரீமியம் நெக்சா ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய மாருதி Fronx மாடல் தேர்வு செய்யப்பட்ட நெக்சா ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறம் புதிய Fronx மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட்கள், கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்ற கிரில் டிசைன் கொண்டிருக்கிறது.

காரின் பின்புறம் கனெக்டெட் எல்இடி டெயில்லைட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் பம்ப்பரின் கீழ்புறத்தில் உள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. பலேனோ போன்றே Fronx மாடலிலும் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆர்கமிஸ் டியூன் செய்யப்பட்ட பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய மாருதி Fronx மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கிடைக்கும் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் 100 பிஎஸ் பவர், 148 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






