search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M காம்படிஷன் மாடல்கள் அறிமுகம்
    X

    2023 பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M காம்படிஷன் மாடல்கள் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M சீரிஸ் மாடல்களில் முதல் முறையாக 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
    • புதிய சக்திவாய்ந்த எஸ்யுவி மாடல்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் விற்பனைக்கு வருகின்றன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்பட்ட X5 மற்றும் X6 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் X5 M மற்றும் X6 M காம்படிஷன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனையும் இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்குகிறது.

    தற்போதைய அப்டேட் மூலம் இரு எஸ்யுவி மாடல்களிலும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், அதிகளவில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறும் முதல் M சீரிஸ் மாடல்களாக இவை உள்ளன.

    இரு எஸ்யுவிக்களிலும் 4.4 லிட்டர், வி8 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இவை 617 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் திறனை 12 ஹெச்பி வரை அதிகப்படுத்துகிறது.

    புதிய எஸ்யுவிக்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. இந்த கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் ஆகும். M டிரைவர் பேக் தேர்வு செய்யும் பட்சத்தில் கார்களின் வேகம் மணிக்கு 290 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது.

    இவை தவிர ரியர் ஆக்சிலில் ஆக்டிவ் M டிஃபெரன்ஷியல், X டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கார்களில் பிரமாண்ட தோற்றம், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய பிளாக்டு-அவுட் கிட்னி கிரில், ஆம்பியண்ட் லைட் பார், உள்புறம் M லோகோ, M லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் பேடில் ஷிஃப்டர்கள், செண்டர் கன்சோலில் M மோட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×