என் மலர்tooltip icon

    இது புதுசு

    • மாருதி இன்விக்டோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • மாருதி இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எம்பிவி மாடல்- இன்விக்டோ காரை அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

    இன்விக்டோ எம்பிவி மாடல் ஜீட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜீட்டா பிளஸ் மாடல் எட்டு இருக்கைகள் கொண்ட வேரியண்டிலும் கிடைக்கிறது. இந்த மாடல் நெக்சா புளூ, மிஸ்டிக் வைட், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்டெல்லார் பிரவுன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     

    மாருதி இன்விக்டோ மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் ஹைப்ரிட் வெர்ஷன் கூடுதலாக 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    காரின் வெளிப்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய கிரில், இரண்டு க்ரோம் ஸ்லாட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், பவர்டு டெயில்கேட் உள்ளது.

    இத்துடன் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. பாதுகாப்பிற்கு பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    மாருதி இன்விக்டோ ஜீட்டா பிளஸ் (7 சீட்டர்) ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம்

    மாருதி இன்விக்டோ ஜீட்டா பிளஸ் (8 சீட்டர்) ரூ. 24 லட்சத்து 84 ஆயிரம்

    மாருதி இன்விக்டோ ஆல்பா பிளஸ் (7 சீட்டர்) ரூ. 28 லட்சத்து 42 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பேஸ்லிப்ட் செய்யப்பட்ட செல்டோஸ் மாடல் புதிய கிரில், எல்இடி டிஆர்எல்களை கொண்டுள்ளது.
    • செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவு ஜூலை 14-ம் தேதி துவங்க இருக்கிறது. இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் X லைன், GT லைன் மற்றும் டெக் லைன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் மேட் கிராஃபைட் எனும் பிரத்யேக நிறம் உள்பட மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது.

     

    பேஸ்லிப்ட் செய்யப்பட்ட செல்டோஸ் மாடலில் புதிய கிரில், எல்இடி டிஆர்எல்கள், டுவீக் செய்யப்பட்ட டிஆர்எல் டிசைன், புதிய பம்ப்பர்கள், 18 இன்ச் க்ரிஸ்டல் கட் கிளாசி பிளாக் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், ஃபாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், எல்இடி லைட் பார் உள்ளது.

    இந்த காரின் உள்புறம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 ADAS சூட், 17 இன்ச் அடாப்டிவ் டிரைவிங் வசதிகள், பானரோமிக் சன்ரூஃப், சென்டர் கன்சோல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன.

     

    இத்துடன் 360 டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் புதிய ஏசி வென்ட்கள் உள்ளன.

    புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு iMT யூனிட், CVT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது விர்டுஸ் செடான் மாடலின் புதிய GT DSG வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விர்டுஸ் மாடல் தற்போது கம்பர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய விர்டுஸ் GT DSG வேரியண்ட் டாப்லைன் AT மற்றும் GT பிளஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆக்டிவ் சிலிண்டர் கட்-ஆஃப் தொழில்நுட்பம், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 19.62 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் GT DSG மாடல்: வைல்டு செர்ரி ரெட், சர்குமா எல்லோ, கார்பன் ஸ்டீல் கிரே, ரைசிங் புளூ, கேன்டி வைட், லாவா புளூ மற்றும் ரிப்லெக்ஸ் சில்வர் என்று ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய விர்டுஸ் GT DSG வேரியண்டில் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய வேரியண்ட் அதன் முந்தைய வேரியண்ட்களை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள முன்புற கிரில், ஃபென்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் GT பேட்ஜ் கொண்டிருக்கின்றன. இத்துடன் GT அனுபவம் வழங்கும் வகையில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், GT-தீம் இருக்கை மேற்கவர்கள், குரோம் விங்ஸ், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஹோண்டா எலிவேட் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தகவல்.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எஸ்யுவி மாடலின் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவித்து இருக்கிறது. மேலும் வினியோகமும் அதே மாதத்தில் துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நீண்ட கால இடைவெளிக்கு பின், ஹோண்டா அறிமுகம் செய்யும் புதிய கார் மாடல் இது ஆகும். புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் அழகிய டிசைன் கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் பிரீமியம் தோற்றம், ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆறு ஏர்பேக், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா எலிவேட் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே காரின் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    • மாருதி சுசுகி இன்விக்டோ, இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் நெக்சா விற்பனை மையங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசரின் படி மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் பெரிய பானரோமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவி மாடல் ஆகும்.

    இந்திய சந்தையில் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இன்விக்டோ எம்பிவி மாடல் டொயோட்டா பிடாடி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

     

    எனினும், ஹைகிராஸ் எம்பிவி போன்றில்லாமல், மாருதி சுசுகி இன்விக்டோ எம்பிவி மாடல் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக புதிய இன்விக்டோ விலை இன்னோவா ஹைகிராஸ் மாடலை விட அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக மாருதி சுசுகி இன்விக்டோ இருக்கும் என்று தெரிகிறது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் நெக்சா விற்பனை மையங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் உள்ளது.
    • கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என தகவல்.

    ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் பலிசேட் சார்ந்த முகப்பு மற்றும் ADAS சூட் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சாலைகளில் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    இந்தியாவில் அறிமுகமாகும் கிரெட்டா மாடல் மற்ற ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் டக்சன் சார்ந்து உருவாக்கப்பட்ட கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் இல்லை. மாறாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    மேலும் புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. 18 இன்ச் அலாய் வீல்களுடன் ஒருங்கிணைந்து இயங்குவதற்கு ஏதுவாக டிரைவ்டிரெயின் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் டியூன் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த மாடலில் செங்குத்தாக இருக்கும் ஹெட்லைட் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் முற்றிலும் புதிய எல்இடி டிஆர்எல் லைட்கள், பாராமெட்ரிக் கிரில், முன்புறம் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. அந்த வகையில் புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்சென்ஸ் ADAS சூட் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது.

    இவைதவிர 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், 60:40 முறையில் ஸ்ப்லிட் செய்யப்பட்ட ரியர் இருக்கைகள், 2-ஸ்டெப் ரிக்லைன் வசதி கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ரியர் வின்டோ ஷேட்கள், ரியர் ஏசி வென்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வென்டிலேஷன், அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது.

    கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    Photo Courtesy: Rushlane 

    • போர்ஷே மற்றும் ஆடி நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி இருக்கின்றன.
    • போர்ஷே உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 718 கிமீ ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    போர்ஷே நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மக்கன் EV மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பதை தெரிவிக்கும் வரைபடங்களை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் தான், ஆஸ்த்ரிய பிராஷர் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் படகw உற்பத்தி செய்வதாக போர்ஷே அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் மக்கன் எலெக்ட்ரிக் வரைபடங்கள் வெளியாகி இருக்கிறது.

    புதிய மக்கன் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் பவர்டிரெயின் தான் போர்ஷே நிறுவனத்தின் அதிவேக படகிலும் வழங்கப்பட இருக்கிறது. டீசர்களின் படி புதிய மக்கன் மாடல் தோற்றத்தில் டக்கன் போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் கூப் போன்ற ரூஃப் மற்றும் ஃபுலோயிங் பாடிலைன்கள் உள்ளது.

     

    பின்புறம் லைட்பார் டிசைன் உள்ளது. இந்த காரின் டெஸ்டிங் சர்வதேச சந்தையில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி போர்ஷே மக்கன் எலெக்ட்ரிக் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், பம்ப்பரில் இரண்டாவது லைட் கிளஸ்டர் உள்ளது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q6 இ டிரான் மாடலை தழுவி உருவாகும் புதிய மக்கன் மாடல் முற்றிலும் புதிய PPE EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆர்கிடெக்ச்சர் ஆடி மற்றும் போர்ஷே இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இதே ஆர்கிடெக்ச்சர் எதிர்காலத்தில் போக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    புதிய மக்கன் எலெக்ட்ரிக் மாடல் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் தவிர போர்ஷே உருவாக்கி வரும் புதிய ஆல்-எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் முழு சார்ஜ் செய்தால் 718 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    Photo Courtesy - Motor1

    • ஃபெராரி ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் உள்ள மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன.

    ஃபெராரி நிறுவனம் SF90 ஹைப்ரிட், SF90 XX ஸ்டிராடேல் மற்றும் ஸ்பைடர் மாடல்களின் ப்ரோடக்ஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் முறையே 799 மற்றும் 599 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்ப்பட்ட XX மாடல்களில் புதிய வேரியண்ட் இது ஆகும்.

    முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், புதிய மாடல்கள் சாலையில் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்று இருக்கின்றன. இதுதவிர முற்றிலும் புதிய XX சீரிஸ் மாடல்களில் ஏரோடைனமிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் திறன் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த காரின் பின்புறம் மெல்லிய லைட்பார், பம்ப்பரில் டிஃப்யுசர் மற்றும் பல்வேறு வென்ட்கள் வழங்கப்படுகிறது. இவை கார் என்ஜினில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கார் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 14 நொடிகளில் திறந்து, மூட முடியும்.

    இதன் ஹைப்ரிட் என்ஜின் 1016 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. வி8 என்ஜின் 786 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன. இந்த யூனிட் உடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • டாடா பன்ச் EV மாடல் ALFA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
    • டாடா பன்ச் EV மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தனது பெட்ரோல், டீசல் வாகனங்களை எலெக்ட்ரிக் வடிவில் விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ், புதிய எலெக்ட்ரிக் கார்களின் டெஸ்டிங்கை தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி டாடா பன்ச் EV மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்பை படங்களில் டாடா பன்ச் EV மாடலின் வெளிப்புற தோற்றம் அதன் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் வேரியன்டை போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முன்புற பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்டு, கனெக்டெட் லைட் பார் காரின் முன்புறம் முழுக்க நீளும் என்று தெரிகிறது. இத்துடன் EV காருக்கான அலாய் வீல்கள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

     

    காரின் உள்புறம் 2 ஸ்போக், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் காணப்படுகிறது. இதே போன்ற டிசைன் டாடா கர்வ் கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் ஸ்டீரிங் வீல் பின்புறத்தில் பேடில் ஷிஃப்டர்களும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர மற்ற அம்சங்கள் டாடா பன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அதன்படி 7 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், 6 ஏர்பேக், ISOFIX மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. டாடா பன்ச் EV மாடல் ALFA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கொண்டிருக்கும்.

    Photo Courtesy : Rushlane 

    • புதிய தலைமுறை பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
    • டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமும் செய்ய இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இவை 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் அதே வேளையில், டொயோட்டா நிறுவனம் தனது லித்தியம் நிக்கல் கோபால்ட் மங்கனீசு (NCM) பேட்டரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை பேட்டரி பேக்குகள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி இவை தற்போதைய பேட்டரிகளை விட கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பேக் அதிக திறன் வெளிப்படுத்துவதோடு, bZ4X மாடலில் உள்ளதை விட மேம்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

    புதிய தலைமுறை NCM பேட்டரிகள் தவிர, டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பைபோலார் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இவை எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் ரேன்ஜ்-ஐ 20 சதவீதம் அதிகப்படுத்துவதோடு, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களை விட 40 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று டொயோட்டா நிறுவனம் கருதுகிறது. 

    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.

    டொயோட்டா நிறுவனம் பல்வேறு விலை பிரிவுகளில், ஏராளமான மாடல்களை விற்பனை செய்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் வழக்கமான டொயோட்டா பிரான்டு, லெக்சஸ் பிரீமியம் பிரான்டு, சீன மற்றும் வட அமெரிக்க சந்தைக்கென முற்றிலும் புதிய கிரவுன் பிரான்டு என டொயோட்டா நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு பிரான்டிங்கில் பலதரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    எனினும், அல்ட்ரா டாப் என்ட் வாகனங்கள் பிரிவில் டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. தற்போது வரை செஞ்சுரி பிரான்டு ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     

    மேலும் இந்த பிரான்டில் ஒரே மாடல் மட்டுமே உள்ளது. தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி மாடல்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் பென்ட்லி பென்ட்யகா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    செஞ்சுரி மாடலின் இன்டீரியர்கள் மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி வாகனங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஆடம்பர சவுகரிய அனுபவத்தை வழங்கி வருகின்றன. இதன் காரணமாகவே டொயோட்டா செஞ்சுரி மாடல் ஜப்பான் மன்னர், அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கிறது.

     

    முதல் முறையாக டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு எஸ்யுவி மாடலை உருவாக்குகிறது. மேலும் முதல் முறையாக செஞ்சுரி மாடல் ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா செஞ்சுரி மாடல் வட அமெரிக்க ஹைலேன்டர் மோனோக் எஸ்யுவி வடிவில் உருவாக்கப்படுகிறது.

    அதன்படி இந்த எஸ்யுவி எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த கார் தோற்றத்தில் 3-பாக்ஸ் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினனை விட சிறப்பான ஆடம்பர எஸ்யுவி-ஆக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடலில் 5.0 லிட்டர் ஹைப்ரிட் வி8 என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 425 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 3-rd Gen டொயோட்டா செஞ்சுரி செடான் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Photo Courtesy: CarScoops 

    • ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கோடியக் எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது. புதிய எஸ்யுவி முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புகைப்படங்களை ஸ்கோடா வெளியிட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கோடா 2nd Gen கோடியக் மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது 2024 மாடலாக விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மாடல் 2023 இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    கோடியக் மாடல் ஸ்கோடா கார்கள் பட்டியலில் புதிய மாடல்ஆகும். ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு 2021 ஆண்டு ஸ்கோடா கோடியக் மிட் பேஸ்லிப்ட் வெர்ஷன் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    இந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்கோடா கோடியக் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் வடிவில் கிடைக்கும் என்றும் பிளக்-இன் ஹைப்பிட் ஆப்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா கோடியக் மாடலில் இந்த வசதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் தவிர்த்து, மற்ற மாடல்களில் 7 ஸ்பீடு, டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2.0 TSI யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் AWD மற்றும் DSG வசதிகள் உள்ளன. டீசல் வேரியன்ட்களில் AWD மற்றும் FWD ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மைல்டு ஹைப்ரிட் 1.5 TSI யூனிட் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் நிலையில், பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 204 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய கோடியக் மாடல் எலெக்ட்ரிக் மோடில் 100 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இந்த மாடலில் 27.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

    ×