என் மலர்
இது புதுசு

ரூ. 24 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான மாருதி சுசுகி இன்விக்டோ
- மாருதி இன்விக்டோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- மாருதி இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எம்பிவி மாடல்- இன்விக்டோ காரை அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.
இன்விக்டோ எம்பிவி மாடல் ஜீட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜீட்டா பிளஸ் மாடல் எட்டு இருக்கைகள் கொண்ட வேரியண்டிலும் கிடைக்கிறது. இந்த மாடல் நெக்சா புளூ, மிஸ்டிக் வைட், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்டெல்லார் பிரவுன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி இன்விக்டோ மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் ஹைப்ரிட் வெர்ஷன் கூடுதலாக 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
காரின் வெளிப்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய கிரில், இரண்டு க்ரோம் ஸ்லாட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், பவர்டு டெயில்கேட் உள்ளது.
இத்துடன் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. பாதுகாப்பிற்கு பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
மாருதி இன்விக்டோ ஜீட்டா பிளஸ் (7 சீட்டர்) ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம்
மாருதி இன்விக்டோ ஜீட்டா பிளஸ் (8 சீட்டர்) ரூ. 24 லட்சத்து 84 ஆயிரம்
மாருதி இன்விக்டோ ஆல்பா பிளஸ் (7 சீட்டர்) ரூ. 28 லட்சத்து 42 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






