என் மலர்
இது புதுசு

பானரோமிக் சன்ரூஃப் உடன் உருவாகும் மாருதி இன்விக்டோ!
- மாருதி சுசுகி இன்விக்டோ, இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
- மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் நெக்சா விற்பனை மையங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசரின் படி மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் பெரிய பானரோமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவி மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இன்விக்டோ எம்பிவி மாடல் டொயோட்டா பிடாடி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
எனினும், ஹைகிராஸ் எம்பிவி போன்றில்லாமல், மாருதி சுசுகி இன்விக்டோ எம்பிவி மாடல் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக புதிய இன்விக்டோ விலை இன்னோவா ஹைகிராஸ் மாடலை விட அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக மாருதி சுசுகி இன்விக்டோ இருக்கும் என்று தெரிகிறது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் நெக்சா விற்பனை மையங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட இருக்கிறது.






