search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஸ்கோடா கோடியக் 2nd Gen டீசர் வெளியானது.. இவ்வளவு அம்சங்களா?
    X

    ஸ்கோடா கோடியக் 2nd Gen டீசர் வெளியானது.. இவ்வளவு அம்சங்களா?

    • ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கோடியக் எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது. புதிய எஸ்யுவி முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புகைப்படங்களை ஸ்கோடா வெளியிட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கோடா 2nd Gen கோடியக் மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது 2024 மாடலாக விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மாடல் 2023 இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    கோடியக் மாடல் ஸ்கோடா கார்கள் பட்டியலில் புதிய மாடல்ஆகும். ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு 2021 ஆண்டு ஸ்கோடா கோடியக் மிட் பேஸ்லிப்ட் வெர்ஷன் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்கோடா கோடியக் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் வடிவில் கிடைக்கும் என்றும் பிளக்-இன் ஹைப்பிட் ஆப்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா கோடியக் மாடலில் இந்த வசதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் தவிர்த்து, மற்ற மாடல்களில் 7 ஸ்பீடு, டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2.0 TSI யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் AWD மற்றும் DSG வசதிகள் உள்ளன. டீசல் வேரியன்ட்களில் AWD மற்றும் FWD ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மைல்டு ஹைப்ரிட் 1.5 TSI யூனிட் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் நிலையில், பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 204 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய கோடியக் மாடல் எலெக்ட்ரிக் மோடில் 100 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இந்த மாடலில் 27.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×