என் மலர்
கார்
- பி.எம்டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்தது.
- இந்த மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் 6 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் காரை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தான் இந்த ஸ்பெஷல் ஜாரெ எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக பி.எம்டபிள்யூ. 3 சீரிஸ் ஜாரெ எம் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஜாரெ ஸ்பெஷல் எடிஷனில் இரண்டாவது மாடலாக பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஜாரெ எம் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் 50 ஜாரெ எம் எடிஷனில், பி.எம்.டபிள்யூ. பாரம்பரிய மோட்டார் ஸ்போர்ட் லோகோவை தழுவிய M சின்னம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது வழக்கமான பி.எம்.டபிள்யூ. லோகோவுக்கு பதிலாக காரின் இருபுறங்களிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் டான்சனைட் புளூ மெட்டாலிக், M கார்பன் பிளாக், பெர்னினா கிரே ஆம்பர் எபெக்ட் மற்றும் மினரல் வைட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டி விடும்.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 பிரெஸ்ஸா மாடல் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.
- 2022 பிரெஸ்ஸா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா இருந்து வருகிறது. தற்போது இதன் மேம்பட்ட மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனைாகி உள்ளன. புதிய 2022 பிரெஸ்ஸா மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறம் அழகிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் புல் பார் எபெக்ட், பக்கவாட்டுகளில் புதிய அலாய் வீல்கள் உள்ளன. ரூஃப் பகுதியில் புளோட்டிங் எபெக்ட் உள்ளது.

இதன் டெயில்கேட் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய விட்டாரா பிரெஸ்ஸாவை விட சற்றே பெரியதாக காட்சியளிக்கிறது. கேபின் பகுதியில் 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஏ.சி. வெண்ட்கள் டேஷ்போர்டின் கீழ் மாற்றப்பட்டு இருக்கிறது.
புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் K12C பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக மைல்டு ஹைப்ரிட் மோட்டார் உள்ளது. இது 3 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யு, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது மாடல்களின் எண்ணிக்கையை குறைக்கும் சூழல் ஏற்படலாம் என தெரிவித்து இருக்கிறது.
- இதற்கான காரணம் பற்றியும் புது தகவல் வெளியாகி உள்ளது.
அரசு திட்டங்கள் காரணமாக சிறிய கார்கள் பயனற்று போகும் பட்சத்தில் அவற்றின் விற்பனை நிறுத்தப்படும் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற விதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.

இது போன்ற திட்டங்கள் சிறு கார்களை பயனற்று போகச் செய்யும் பட்சத்தில் அவற்றின் விற்பனையை மாருதி சுசுகி நிறுத்தி விடும். இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என கூறப்பட்டது. எனினும், மாருதி சுசுகி நிறுவன லாபம் சிறிய கார்களின் விற்பனையை சார்ந்து இருக்கவில்லை என தெரிவித்தார்.
"எங்களின் லாபம் சிறிய கார்களை நம்பி இருக்கவில்லை. மக்கள் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளனர். நாங்கள் ஆல்டோ போன்ற மாடல்களை லாபம் இன்றி தான் விற்பனை செய்கிறோம். கார் சந்தையில் இருந்து சிறிய கார்கள் மறையும் பட்சத்தில் இந்த துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும்," என ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11.99 லட்சம் என துவங்குகிறது. இந்த மாடலின் முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் மற்றும் மஹிந்திரா விற்பனை மையங்களில் துவங்க இருக்கிறது. வினியோகம் பண்டிகை காலக்கட்டத்தில் துவங்க இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என மொத்தம் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் டாடா ஹேரியர், டாடா சஃபாரி, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமைகிறது.

விலை விவரங்கள்:
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 பெட்ரோல் மேனுவல் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 டீசல் மேனுவல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 பெட்ரோல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 டீசல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z6 டீசல் மேனுவல் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 பெட்ரோல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 டீசல் மேனுவல் ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L பெட்ரோல் மேனுவல் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L டீசல் மேனுவல் ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம்
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - டார்மேக், ஸ்னோ, மட் மற்றும் டெசர்ட் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் மூன்றாம் தலைமுறை பாடி ஆன் ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு ஆஃப் ரோடிங் வசதி மற்றும் அதிவேகமாக பயணிக்கும் போதும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது.
இந்த மாடலில் எம் ஸ்டேலியன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எம் ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 பி.எஸ். பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ், ஷிப்ட் பை வயர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் விரைவில் புது ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடல் டொயோட்டா நிறுவனத்தின் ஹைப்ரிட் எஸ்.யு.வி. ஆகும்.
டொயோட்டா நிறுவனம் புதிய ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புது கார் மட்டுமின்றி அதற்கான டீசரையும் டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி காரின் முன்புறம் தெளிவாக காட்சி அளிக்கிறது. அதன்படி டொயோட்டா ஹைரைடர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கார் மாடல்களில் இது வழக்கமான அம்சமாக மாறி விட்டது. இத்துடன் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் கிரிலின் மேல்புறத்தில் உள்ளது.

டொயோட்டா ஹைரைடர் மாடலின் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் செண்ட்ரல் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஃபினிஷ்-இல் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய டொயோட்டா கார் பெங்களூரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் இதே காரின் சுசுகி பிராண்டிங் கொண்ட வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படலாம்.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புது காரை அறிமுகம் செய்தது.
- இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. காரின் விலை ரூ. 68 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 387 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்டிரைவ் சிஸ்டம் ஸ்டாரண்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இந்த கார் டிராவிட் கிரே மற்றும் டான்சானைட் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50 ஜாரெ எம் எடிஷன் எலிமண்ட்களான ஹை-கிளாஸ் பிளாக் கிட்னி கிரில், ஜெட் பிளாக் விண்டோ சரவுண்ட், மிரர் கேப்கள் மற்றும் 19 இன்ச் M லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் உள்புறம் சென்சடெக்/அல்காண்ட்ரா ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆந்த்ரசைட் பி.எம்.டபிள்யூ. ரூஃப் லைனர், M லெதர் ஸ்டீரிங் வீல், M சீட் பெல்ட் மற்றும் பியானோ பிளாக் நிற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் வழங்கப்படுகிறது.
புதிய M சீரிஸ் காரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆப்ஷனல் 50 ஆண்டுகள் M பேக்கேஜ்கள் - மோட்டார்ஸ்போர்ட் பேக் மற்றும் கார்பன் ஃபைபர் பேக் வடிவில் வழங்குகிறது. இவை காரின் ஸ்போர்ட் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி காண்பிக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புத்தம் புதிய பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா மாடலை வாங்க முதல் நாளிலேயே 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பழைய பிரெஸ்ஸா மாடலை வாங்க முன்பதிவு செய்து இருப்பவர்கள், முன்பதிவை புதிய மாடலுக்கு மாற்றிக் கொள்ள முடியும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மாடல் பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும். இத்துடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

இதுதவிர புதிய மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கு கியா சொனெட், ஹோண்டா WR-V, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டி இருக்கிறது.
- இந்த கார் CKD முறையில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்.
ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் 2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 111 யூனிட்களை வினியோகம் செய்து இருக்கிறது.
"ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அசத்தலான டிசைன், தொழில்நுட்பம், சவுகரியம் மற்றும் சிறப்பான டைனமிக்ஸ் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் இந்த கார் தனக்கான பிரிவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 2 லிட்டர், 4 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கையை மடித்து வைக்கும் போது பூட் ஸ்பேஸ் 1555 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.
- ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது 2022 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய வென்யூ மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலை வாங்க ஏற்கனவே 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையிவல், முன்பதிவு எண்ணிக்கை தற்போது 21 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பது.

புதிய வென்யூ காரை முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒருவர் டீசல் வேரியண்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மூன்று வேரியண்ட்களில் தான் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் மிட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் தான் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 32 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கியா இந்தியா நிறுவனத்தின் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் கியா சொனெட் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.
- இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா சொனெட் மாடல் இந்திய சந்தையில் 1.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இந்தியாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீதம் கியா சொனெட் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை அப்போது ரூ. 6 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். விற்பனைக்கு வந்த 12 மாதங்களில் கியா சொனெட் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி அசத்தி இருந்தது.

இந்திய சந்தையில் 2020 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் கியா சொனெட் நான்காவது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களில் டாடா நெக்சான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்கள் பிடித்தன.
சில மாதங்களுக்கு முன் கியா நிறுவனம் தனது சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களை அப்டேட் செய்து இருந்தது. புது மாடல்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதிக உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதிய சொனெட் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்தியாவில் கியா சொனெட் மாடல் 83 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 120 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அல்லது 7 ஸ்பீடு DCT போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
- விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய மாடலின் பெயரில் இருந்து விட்டாரா-வை நீக்கி இருக்கிறது. மேலும் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான டீசரையும் மாருதி சுசுகி வெளியிட்டு உள்ளது.

புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை வாங்க விரும்புவோர், அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அரினா ஷோரூம் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக 2020 வாக்கில் பிரெஸ்ஸா மாடல் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், இம்முறை அதிக மாற்றங்களுடன் அறிமுகமாகிறது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் மேம்பட்ட என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடலில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைப்ரிட் கே சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது.
- ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
- இது அந்நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.
ஓலா நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் செடான் மாடல் காரின் கான்செப்ட் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் ஓலா கஸ்டமர் டே நிகழ்வின் போது வெளியானது. இந்த நிகழ்வு பெங்களூரில் உள்ள ஆலையில் நடைபெற்றது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

டீசர் படங்களின் படி இந்த வாகனம் லோ-ஸ்லங் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது ஸ்போர்ட் டிசைன், டபுள் பாரெல் ஹெட்லேம்ப்கள், அதனிடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் காரின் அகலம் முழுக்க எல்.இ.டி. ஸ்ட்ரிப் காணப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களின் படி ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் டாப்-டவுன் வழிமுறையை பின்பற்றுவதாக தெரிகிறது.
ஏற்கனவே ஓலா நிறுவனம் கால் டாக்சி துறையில் இயங்கி வருவதை அடுத்து, புதிய எலெக்ட்ரிக் கார்கள் கால் டாக்சிக்களாகவும் பயன்படுத்தலாம். எனினும், இது பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கிய ஓலா நிறுவனம் இதே பானியை தனது எலெக்ட்ரிக் காரிலும் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.






