search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாடா நெக்சான் EV புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    டாடா நெக்சான் EV புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV மாடலை இரு வேரியண்ட்களில் விற்பனை செய்து வந்தது.
    • சமீபத்தில் நெக்சான் EV மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா நெக்சான் EV பிரைம் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்சான் EV மாடலில் சமீபத்தில் அறிமுகமான நெக்சான் EV மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்ட புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் மாடலில் மல்டி-மோட் ரிஜென், ஆட்டோமேடிக் பிரேக் லேம்ப் ஆக்டிவேஷன், குரூயிஸ் கண்ட்ரோல், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஸ்மார்ட்வாட்ச் இண்டகிரேட் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி அம்சம் உள்ளது. இந்தியாவில் நெக்சான் EV மாடலின் விலை ரூ. 60 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் EV மாடல் தான் தற்போது நெக்சான் EV பிரைம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


    "நெக்சான் EV மாடல் அறிமுகமானது முதல் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனம் வாங்க நினைப்போரின் முதல் தேர்வாக இந்த மாடல் தான் இருக்கிறது. சந்தையில் நெக்சான் EV மாடல் 65 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது."

    "நெக்சான் EV பிரைம் மாடலுடன் எங்கள் குறிக்கோளை மேலும் உறுதிப்படுத்தி தொடர்ந்து புது மாடல்களை அறிமுகம் செய்வோம். புது சாப்ட்வேர் அப்டேட் மூலம் பயனர்கள் டாடா எலெக்ட்ரிக் வாகன அனுபவத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதில் புது எல்லையை உருவாக்கி இருக்கிறோம்," என டாடா நிறுவனத்தின் விவேக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

    Next Story
    ×