என் மலர்
கார்
- ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- அதற்குள் இந்த மாடலை வாங்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 3 ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வென்யூ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.
முன்பதிவு செய்தவர்களில் சுமார் 36 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆகும். எந்த வேரியண்ட் அதிக முன்பதிவை பெற்றது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், கார் முன்பதிவு தொடங்கிய இரண்டே வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், D-கட் ஸ்டீரிங் வீல், 2 ஸ்டெப் ரிக்லைனிங் ரியர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பத்து மொழிகளில் இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய வென்யூ மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருகிறது.
- புதிய XUV400 EV மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை சோதனை செய்யும் பணிகளை துவங்கி உள்ளது. இந்த மாடல் XUV400 என அழைக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய மஹிந்திரா XUV400 மாடல் XUV300 சப்-காம்பேக்ட் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாகும் என தெரிகிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் XUV300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஆல்-எலெக்ட்ரிக் மாடல் இல்லை. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் e20 மற்றும் e20 பிளஸ் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்களை வெளியிட்டு இறுக்கிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 'Born Electric' அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் புதிய மஹிந்திரா XUV400 மாடல் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: B Vinubalan
- லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர் கார் மாடல் வி12 என்ஜின் கொண்டு இருக்கிறது.
- இந்த மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது.
லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெண்டடார் அல்டிமே மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2021 குட்வுட் பெஸ்டிவல் ஆப் ஸ்பீடு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இது அதிக சக்திவாய்ந்த வி12 என்ஜின் கொண்ட லம்போர்கினி நிறுவனத்தின் கடைசி சூப்பர் கார் மாடல் ஆகும்.

லம்போர்கினி நிறுவனம் புதிய அவென்டடார் LP780-4 அல்டிமே மாடலை கூப் மற்றும் ரோட்ஸ்டர் என இருவித ஸ்டைல்களில் உருவாக்கி இருக்கிறது. இவற்றில் கூப் மாடல் 350 யூனிட்களும் ரோட்ஸ்டர் மாடல் 250 யூனிட்களும் விற்பனைக்கு வரவுள்ளன. புதிய லம்போர்கினி அவென்டடார் அல்டிமே மாடல் அவெண்டடார் SVJ மற்றும் அவெண்டடார் S மாடல்களின் இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
லம்போர்கினி அவெண்டடார் அல்டிமே மாடலில் சக்திவாய்ந்த வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 770 ஹெச்.பி. பவர் மற்றும் 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் புது வேரியண்ட் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
- இதில் சன்ரூப் மற்றும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஸ்கோடா குஷக் மாடலின் புது வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR (non-sunroof -NSR) என்று அழைக்கப்படுகிறது. புது மாடல் ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.
பெயருக்கு ஏற்றார் போல் புது வேரியண்டில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது.

ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR மாடலில் டிஜிட்டல் டையல்கள் நீக்கப்பட்டு வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. குஷக் ஸ்டைல் NSR மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.
புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார்கள் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் "Born Electric" பெயரில் கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல்கள் டீசரை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புது டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவை சேர்ந்த மூத்த அலுவலர் பிரதாப் போஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசரை வெளியிட்டு உள்ளார். இந்த மாடல் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோ சார்பில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புது எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தைக்கான எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. டீசர் வீடியோவின் படி புதிய எஸ்.யு.வி. மாடலை, மஹிந்திரா ஃபார்முலா இ பந்தயத்தில் கற்ற அனுபவங்களை வைத்து உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய டீசர்களில் இந்த காரின் உள்புறம் ஃபைட்டர் ஜெட் காக்பிட் போன்ற இண்டீரியர் கொண்டிருக்கும் என தெரியவந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி லண்டனில் அறிமுகம் செய்யப்படலாம். இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
- ஆடி நிறுவனத்தின் மேம்பட்ட A8 L மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
- இதே மாடல் பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ஆடி A8 L ஃபிளாக்ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும்.
முன்னதாக புதிய ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை ஆடி இந்திய ஏப்ரல் மாத வாக்கில் வெளியிட்டு இருந்தது. 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் மிக விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI V6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.
- ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்த மாதம் கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி ரெனால்ட் க்விட் ஹேச்பேக், டிரைபர் எம்.பி.வி. மற்றும் கிகர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, லாயல்டி பலன்கள், எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் கார் மாடல்களுக்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் டிரைபர்
தள்ளுபடி ரூ. 40 ஆயிரம்
லாயல்டி பலன்கள் ரூ. 44 ஆயிரம்
ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்
ஜூன் மாதம் ரெனால்ட் டிரைபர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட்
தள்ளுபடி ரூ. 35 ஆயிரம்
லாயல்டி பலன்கள் ரூ. 37 ஆயிரம்
ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்
2022 க்விட் மாடலுக்கு ரூ. 30 தள்ளுபடி உள்பட மொத்தம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜூன் மாதம் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் கிகர்
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்
லாயல்டி பலன்கள் ரூ. 55 ஆயிரம்
ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்
ஜூன் மாதம் ரெனால்ட் கிகர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
குறிப்பு: சலுகை மற்றும் தள்ளுபடி பலன்கள் ஸ்டாக் இருப்பு மற்றும் ஒவ்வொரு நகருக்கு ஏற்ப வேறுபடும்.
- சிட்ரோயன் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- இந்த கார் மூன்று கஸ்டமைசேஷன் பேக்குகளில் கிடைக்கும்.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலாக நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருவித டியூனிங்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் லைவ் மற்றும் ஃபீல் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும் இந்த கார் மொத்தத்தில் பத்து விதமமான நிறங்கள் மற்றும் மூன்று விதமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய சிட்ரோயன் C3 காருக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி துவங்குகிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.
- போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விர்டுஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த காரின் துவக்க விலை ரூ. 11 லட்சம் ஆகும்.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த விர்டுஸ் காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Comfortline டைனமிக் லைன் (MT) ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம்
போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (MT) ரூ. 12 லட்சத்து 98 ஆயிரம்
போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (AT) ரூ. 14 லட்சத்து 28 ஆயிரம்
போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (MT) ரூ. 14 லட்சத்து 42 ஆயிரம்
போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (AT) ரூ. 15 லட்சத்து 72 ஆயிரம்
போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.5 TSI GT Line பெர்பார்மன்ஸ் லைன் (AT) ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம்

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 1 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
இத்துடன் 1.5 லிட்டர் TSI 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 148 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.
மாருதி சுசுகி அரினா கார் மாடல்களுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட வடிவில் வழங்கப்படுகின்றன.
ஜூன் மாத சலுகைகள் ஆல்டோ, செலரியோ, ஸ்விப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற ஹேச்பேக் மாடல்கள், டிசையர் செடான் மற்றும் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் எர்டிகா எம்.பி.வி. அல்லது CNG மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி செலரியோ - ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருதி சுசுகி வேகன் ஆர் - ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருதி சுசுகி ஆல்டோ 800 - ரூ. 31 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருதி சுசுகி இகோ - ரூ. 24 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருதி சுசுகி டிசையர் - ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருசி சுசுகி பிரெஸ்ஸா - ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள்
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ - ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகைகள்
- லம்போர்கினி நிறுவன கார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.
- புது மைல்கல் எட்டிய லம்போர்கினி கார் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச சந்தையில் உருஸ் மாடல் உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்கள் எனும் புது மைல்கல் எட்டி உள்ளதாக லம்போர்கினி அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் லம்போர்கினி நிறுவனம் தனது உருஸ் மாடல் உற்பத்தியில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்தது.இந்த நிலையில் 12 மாதங்களில் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற மைல்கல் எட்ட ஹரிகேன் மாடல் எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
லம்போர்கினி உருஸ் 20 ஆயிரமாவது யூனிட் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புதிய பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலில் மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய தலைமுறை மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் இந்திய சந்தையில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது மாடலின் பெயரில் மாற்றம் செய்யவும் மாருதி சுசுகி முடிவு செய்து உள்ளது. அதன் படி புதிய மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் விட்டாரா என்ற பெயர் நீக்கப்படுகிறது.
சமீபத்தில் புதிய பிரெஸ்ஸா மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியானது. அந்த வகையில், புதிய பிரெஸ்ஸா மாடலின் முன்புறம் முற்றிலும் புதிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப் மற்றும் L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

உள்புறம் மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிப்டர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, சுசுகி கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 84 ஆயிரத்தில் துவங்குகிறது. அந்த வகையில் ஏராளமான அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






