search icon
என் மலர்tooltip icon

    கார்

    புது மைல்கல் கொண்டாடும் ரெனால்ட் கைகர்
    X

    புது மைல்கல் கொண்டாடும் ரெனால்ட் கைகர்

    • ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் உற்பத்தி குறித்து புது அப்டேட் வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடல் உலகம் முழுக்க ஒன்பது பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. ரெனால்ட் கைகர் 50 ஆயிரமாவது யூனிட் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. உற்பத்தியில் புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கைகர் மாடலை புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அறிமுகமான மூன்றாவது கார் மாடலாக ரெனால்ட் கைகர் இருந்தது. இந்த மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் தான் நடைபெற்றது. தற்போது இந்த மாடல் தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா, கிழக்கு ஆப்ரிக்கா, சிச்சில்ஸ், மொரிஷியஸ், பூட்டான், பெர்முடா மற்றும் புரூனெய் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.


    "தலைசிறந்த டிசைன், ஸ்மார்ட் அம்சங்கள், அதீத பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் என அனைத்து பிரிவுகளிலும் சிறந்த மதிப்பீட்டை கொண்டிருக்கும் ரெனால்ட் கைகர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் 50 ஆயிரம் யூன்ட்கள் உற்பத்தியாகி இருக்கிறது."

    "இந்திய சந்தையில் எங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் மாடல்களில் ரெனால்ட் கைகர் ஒன்று. ரெனால்ட் கைகர் மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதோடு இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் பிராண்டு வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கிறோம்," என்று ரெனால்ட் இந்தியா சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பல்லே தெரிவித்தார்.

    Next Story
    ×