search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரி-லான்ச்-க்கு ரெடியாகும் ஆல்டோ K10 - மாருதி சுசுகி அதிரடி!
    X

    ரி-லான்ச்-க்கு ரெடியாகும் ஆல்டோ K10 - மாருதி சுசுகி அதிரடி!

    • இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு, முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.

    இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி விரைவில் ஆல்டோ K10 ஹேச்பேக் காரை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ மாடல் சில வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தியது.

    2020 வாக்கில் பி.எஸ்.6 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆல்டோ K10 மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலுக்கு இன்னும் வரவேற்பு இருப்பதோடு, இதற்கு போட்டியாக அதிக மாடல்கள் இல்லாத காரணத்தால், மீண்டும் இதனை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


    ஆல்டோ மாடல்களை மாற்றியமைத்து வரும் மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி Std, LXi மற்றும் LXi CNG வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. மூன்று வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதை அடுத்து ஆல்டோ 800சிசி மாடல் விலை தற்போது ரூ. 3 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது ஆல்டோ மாடல் LXi (o) வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    ஆல்டோ K10 மாடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கும். தற்போது ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்கள் சேர்ந்து ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகின்றன. இன்று வரை மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஆல்டோ விளங்குகிறது.

    இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் தலைமுறை மாடல் 2012 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் தலைமுறை ஆல்டோ மாடல் அதன் பின் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை சுமார் 43 லட்சம் ஆல்டோ ஹேச்பேக் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.

    Next Story
    ×