search icon
என் மலர்tooltip icon

    கார்

    எஸ் பிரெஸ்ஸோ மாடலின் ஆறு வேரியண்ட்களை திடீரென நிறுத்திய மாருதி சுசுகி
    X

    எஸ் பிரெஸ்ஸோ மாடலின் ஆறு வேரியண்ட்களை திடீரென நிறுத்திய மாருதி சுசுகி

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் தனது ஆல்டோ ஹேச்பேக் மாடலின் மூன்று வேரியண்ட்களை நிறுத்தியது. தற்போது இந்த வரிசையில் எஸ் பிரெஸ்ஸோ மாடலும் சேர்ந்து இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் ஆறு வேரியண்ட்களின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. புது மாற்றங்களை அடுத்து மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    எஸ் பிரெஸ்ஸோ மாடலின் LXi, VXi, VXi AMT, மற்றும் VXi CNG போன்ற வேரியண்ட்களின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி நிறுத்திவிட்டது. தற்போது ரெகுலர் வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் 8 வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் ஆட்டோமேடிக் மாடல்களின் விலை ரூ. 5 லட்சத்து 19 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.


    இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் பிரிவில் எஸ் பிரெஸ்ஸா மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். எஸ் பிரெஸ்ஸோ மாடலை சிறிய எஸ்யுவி-ஆக மாற்றுவதற்கு மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டது. எனினும், இது எண்ட்ரி லெவல் பிரிவில் கிடைக்கும் மாருதி சுசுகி கார் தான்.

    எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி K10B என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினின் பெட்ரோல் வேரியண்ட் 67 ஹெச்.பி. பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG பயன்படுத்தும் போது இந்த என்ஜின் 58 ஹெச்.பி. பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×