என் மலர்tooltip icon

    கார்

    • டொயோட்டா நிறுவனம் விரைவில் புது ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் டொயோட்டா நிறுவனத்தின் ஹைப்ரிட் எஸ்.யு.வி. ஆகும்.

    டொயோட்டா நிறுவனம் புதிய ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புது கார் மட்டுமின்றி அதற்கான டீசரையும் டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி காரின் முன்புறம் தெளிவாக காட்சி அளிக்கிறது. அதன்படி டொயோட்டா ஹைரைடர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கார் மாடல்களில் இது வழக்கமான அம்சமாக மாறி விட்டது. இத்துடன் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் கிரிலின் மேல்புறத்தில் உள்ளது.


    டொயோட்டா ஹைரைடர் மாடலின் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் செண்ட்ரல் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஃபினிஷ்-இல் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய டொயோட்டா கார் பெங்களூரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் இதே காரின் சுசுகி பிராண்டிங் கொண்ட வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படலாம். 

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புது காரை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. காரின் விலை ரூ. 68 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 387 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்டிரைவ் சிஸ்டம் ஸ்டாரண்டு அம்சமாக வழங்கப்படுகிறது.


    இந்த கார் டிராவிட் கிரே மற்றும் டான்சானைட் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50 ஜாரெ எம் எடிஷன் எலிமண்ட்களான ஹை-கிளாஸ் பிளாக் கிட்னி கிரில், ஜெட் பிளாக் விண்டோ சரவுண்ட், மிரர் கேப்கள் மற்றும் 19 இன்ச் M லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் உள்புறம் சென்சடெக்/அல்காண்ட்ரா ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆந்த்ரசைட் பி.எம்.டபிள்யூ. ரூஃப் லைனர், M லெதர் ஸ்டீரிங் வீல், M சீட் பெல்ட் மற்றும் பியானோ பிளாக் நிற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் வழங்கப்படுகிறது.

    புதிய M சீரிஸ் காரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆப்ஷனல் 50 ஆண்டுகள் M பேக்கேஜ்கள் - மோட்டார்ஸ்போர்ட் பேக் மற்றும் கார்பன் ஃபைபர் பேக் வடிவில் வழங்குகிறது. இவை காரின் ஸ்போர்ட் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி காண்பிக்கிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புத்தம் புதிய பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா மாடலை வாங்க முதல் நாளிலேயே 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பழைய பிரெஸ்ஸா மாடலை வாங்க முன்பதிவு செய்து இருப்பவர்கள், முன்பதிவை புதிய மாடலுக்கு மாற்றிக் கொள்ள முடியும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல் பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும். இத்துடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.


    இதுதவிர புதிய மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கு கியா சொனெட், ஹோண்டா WR-V, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டி இருக்கிறது.
    • இந்த கார் CKD முறையில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்.

    ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் 2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 111 யூனிட்களை வினியோகம் செய்து இருக்கிறது.

    "ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அசத்தலான டிசைன், தொழில்நுட்பம், சவுகரியம் மற்றும் சிறப்பான டைனமிக்ஸ் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் இந்த கார் தனக்கான பிரிவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.


    நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 2 லிட்டர், 4 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கையை மடித்து வைக்கும் போது பூட் ஸ்பேஸ் 1555 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது 2022 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • புதிய வென்யூ மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலை வாங்க ஏற்கனவே 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையிவல், முன்பதிவு எண்ணிக்கை தற்போது 21 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பது.


    புதிய வென்யூ காரை முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒருவர் டீசல் வேரியண்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மூன்று வேரியண்ட்களில் தான் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் மிட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் தான் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 32 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • கியா இந்தியா நிறுவனத்தின் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் கியா சொனெட் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.
    • இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா சொனெட் மாடல் இந்திய சந்தையில் 1.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இந்தியாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீதம் கியா சொனெட் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை அப்போது ரூ. 6 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். விற்பனைக்கு வந்த 12 மாதங்களில் கியா சொனெட் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி அசத்தி இருந்தது.


    இந்திய சந்தையில் 2020 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் கியா சொனெட் நான்காவது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களில் டாடா நெக்சான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்கள் பிடித்தன.

    சில மாதங்களுக்கு முன் கியா நிறுவனம் தனது சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களை அப்டேட் செய்து இருந்தது. புது மாடல்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதிக உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதிய சொனெட் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்தியாவில் கியா சொனெட் மாடல் 83 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 120 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அல்லது 7 ஸ்பீடு DCT போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
    • விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய மாடலின் பெயரில் இருந்து விட்டாரா-வை நீக்கி இருக்கிறது. மேலும் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான டீசரையும் மாருதி சுசுகி வெளியிட்டு உள்ளது.


    புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை வாங்க விரும்புவோர், அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அரினா ஷோரூம் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக 2020 வாக்கில் பிரெஸ்ஸா மாடல் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், இம்முறை அதிக மாற்றங்களுடன் அறிமுகமாகிறது.

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் மேம்பட்ட என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடலில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைப்ரிட் கே சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது.

    • ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இது அந்நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    ஓலா நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் செடான் மாடல் காரின் கான்செப்ட் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் ஓலா கஸ்டமர் டே நிகழ்வின் போது வெளியானது. இந்த நிகழ்வு பெங்களூரில் உள்ள ஆலையில் நடைபெற்றது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.


    டீசர் படங்களின் படி இந்த வாகனம் லோ-ஸ்லங் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது ஸ்போர்ட் டிசைன், டபுள் பாரெல் ஹெட்லேம்ப்கள், அதனிடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் காரின் அகலம் முழுக்க எல்.இ.டி. ஸ்ட்ரிப் காணப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களின் படி ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் டாப்-டவுன் வழிமுறையை பின்பற்றுவதாக தெரிகிறது.

    ஏற்கனவே ஓலா நிறுவனம் கால் டாக்சி துறையில் இயங்கி வருவதை அடுத்து, புதிய எலெக்ட்ரிக் கார்கள் கால் டாக்சிக்களாகவும் பயன்படுத்தலாம். எனினும், இது பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கிய ஓலா நிறுவனம் இதே பானியை தனது எலெக்ட்ரிக் காரிலும் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • அதற்குள் இந்த மாடலை வாங்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 3 ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வென்யூ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    முன்பதிவு செய்தவர்களில் சுமார் 36 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆகும். எந்த வேரியண்ட் அதிக முன்பதிவை பெற்றது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், கார் முன்பதிவு தொடங்கிய இரண்டே வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.


    புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், D-கட் ஸ்டீரிங் வீல், 2 ஸ்டெப் ரிக்லைனிங் ரியர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பத்து மொழிகளில் இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய வென்யூ மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருகிறது.
    • புதிய XUV400 EV மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை சோதனை செய்யும் பணிகளை துவங்கி உள்ளது. இந்த மாடல் XUV400 என அழைக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.


    புதிய மஹிந்திரா XUV400 மாடல் XUV300 சப்-காம்பேக்ட் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாகும் என தெரிகிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் XUV300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஆல்-எலெக்ட்ரிக் மாடல் இல்லை. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் e20 மற்றும் e20 பிளஸ் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்களை வெளியிட்டு இறுக்கிறது.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 'Born Electric' அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் புதிய மஹிந்திரா XUV400 மாடல் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: B Vinubalan

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர் கார் மாடல் வி12 என்ஜின் கொண்டு இருக்கிறது.
    • இந்த மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது.

    லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெண்டடார் அல்டிமே மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2021 குட்வுட் பெஸ்டிவல் ஆப் ஸ்பீடு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இது அதிக சக்திவாய்ந்த வி12 என்ஜின் கொண்ட லம்போர்கினி நிறுவனத்தின் கடைசி சூப்பர் கார் மாடல் ஆகும்.


    லம்போர்கினி நிறுவனம் புதிய அவென்டடார் LP780-4 அல்டிமே மாடலை கூப் மற்றும் ரோட்ஸ்டர் என இருவித ஸ்டைல்களில் உருவாக்கி இருக்கிறது. இவற்றில் கூப் மாடல் 350 யூனிட்களும் ரோட்ஸ்டர் மாடல் 250 யூனிட்களும் விற்பனைக்கு வரவுள்ளன. புதிய லம்போர்கினி அவென்டடார் அல்டிமே மாடல் அவெண்டடார் SVJ மற்றும் அவெண்டடார் S மாடல்களின் இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    லம்போர்கினி அவெண்டடார் அல்டிமே மாடலில் சக்திவாய்ந்த வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 770 ஹெச்.பி. பவர் மற்றும் 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் புது வேரியண்ட் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் சன்ரூப் மற்றும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஸ்கோடா குஷக் மாடலின் புது வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR (non-sunroof -NSR) என்று அழைக்கப்படுகிறது. புது மாடல் ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.

    பெயருக்கு ஏற்றார் போல் புது வேரியண்டில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது.


    ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR மாடலில் டிஜிட்டல் டையல்கள் நீக்கப்பட்டு வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. குஷக் ஸ்டைல் NSR மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

    புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×