search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hyundai stargazer"

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எம்.பி.வி. மாடலாக ஸ்டார்கேசர் இருந்து வந்தது.
    • இது மாருதி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்டார்கேசர் எம்பிவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மாருதி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும். முதற்கட்டமாக இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்டார்கேசர் அதன் பின் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.

    வெளிப்புறம் ஸ்டார்கேசர் மாடல் ஸ்டாரியா சார்ந்த முன்புறம் கொண்டு இருக்கிறது. ஹூண்டாய் ஸ்டாரியா மாடல் அளவில் பெரிய ஆடம்பர எம்பிவி மாடல் ஆகும். இது சர்வதேச சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டார்கேசர் மாடலில் அதிநவீன தோற்றம், பொனெட் லைன் மீது ஃபுல்-விட்த் எல்இடி டிஆர்எல் கொண்டிருக்கிறது. முன்புற கிரில் செவ்வக வடிவம் கொண்டு இருக்கிறது. இதில் எல்இடி ஹெட்லேம்ப்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு உள்ளன. பின்புறம் டெயில் லேம்ப்கள் உள்ளன.


    காரினுள் ஆறு பேர் அமரும் வகையிலான இருக்கைகள் உள்ளன. கேபின் முழுக்க அதிகளவு சவுகரியம் வழங்கும் வகையில் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன.

    இந்தோனேசிய சந்தையில் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று இருக்கிறது. இந்த என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×