என் மலர்

  கார்

  தீப்பிடித்து எரிந்து விடும் - கிடுகிடுவென எலெக்ட்ரிக் கார்களை ரிகால் செய்யும் ஹூண்டாய்
  X

  தீப்பிடித்து எரிந்து விடும் - கிடுகிடுவென எலெக்ட்ரிக் கார்களை ரிகால் செய்யும் ஹூண்டாய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹூண்டாய் நிறுவனம் 2018 வாக்கில் ஐயோனிக் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை ரிகால் செய்தது.
  • இவற்றில் உள்ள கோளாறு தீ விபத்து ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளது.

  ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஐயோனிக் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. மொத்தம் 10 ஆயிரத்து 575 யூனிட்கள் ரிகால் செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் 2017 மற்றும் 2018 வாக்கில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். பாதிக்கப்பட்ட யூனிட்கள் தீ விபத்தை ஏற்படுத்த காரணமாகி விடும் அபாயம் கொண்டுள்ளன.


  முன்னதாக 2018 வாக்கில் இந்த மாடல்கள் ரிகால் செய்யப்பட்டன. எனினும், அப்போது இவை முறையாக சரி செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த யூனிட்களில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. வாகனங்களின் காண்டாக்ட்களில் லூஸ் கனெக்‌ஷன் இருப்பதால், எலெக்ட்ரிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஆகும். இந்த சூழல் பாகங்களை எளிதில் சூடாக்கி, தீப்பிடிக்க செய்யலாம்.

  பாதிக்கப்பட்ட வாகனங்கள் நவம்பர் 16, 2016 முதல் ஆகஸ்ட் 16, 2017-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். ரிகால் செய்யப்படும் ஐயோனிக் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் ஆகஸ்ட் 10, 2017 முதல் ஆகஸ்ட் 11, 2017-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். முதன் முதலில் இந்த பிரச்சினை 2018 மார்ச் மாத வாக்கில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×