என் மலர்
கார்
- நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மேக்னைட் இருக்கிறது.
- இந்தியாவில் நிசான் மேக்னைட் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான நிசான், இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் விலை ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் XV வேரிண்டின் மூன்று ட்ரிம்களிலும் கிடைக்கிறது.
நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் விலை விவரங்கள்:
நிசான் மேக்னைட் MT XV ரெட் எடிஷன் ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500
நிசான் மேக்னைட் டர்போ XV ரெட் எடிஷன் ரூ. 9 லட்சத்து 24 ஆயிரத்து 500
நிசான் மேக்னைட் டர்போ CVT XV ரெட் எடிஷன் ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலின் கிரில், முன்புற பம்ப்பர் கிளாடிங், வீல் ஆர்ச், பக்கவாட்டில் பாடி கிளாடிங் உள்ளிட்டவைகளில் மீது ரெட் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாடி கிராபிக்ஸ், பின்புற டெயில்கேட்டில் குரோம் கார்னிஷ், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், ரெட் எடிஷன் பேட்ஜ் உள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
நிசான் மேக்னைட் XV வேரியண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஏராளமான ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., வெஹிகில் டைனமிக்ஸ் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மேனுவல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மற்றும் 999 சிசி, மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV மாடலை இரு வேரியண்ட்களில் விற்பனை செய்து வந்தது.
- சமீபத்தில் நெக்சான் EV மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா நெக்சான் EV பிரைம் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்சான் EV மாடலில் சமீபத்தில் அறிமுகமான நெக்சான் EV மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்ட புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் மாடலில் மல்டி-மோட் ரிஜென், ஆட்டோமேடிக் பிரேக் லேம்ப் ஆக்டிவேஷன், குரூயிஸ் கண்ட்ரோல், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஸ்மார்ட்வாட்ச் இண்டகிரேட் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி அம்சம் உள்ளது. இந்தியாவில் நெக்சான் EV மாடலின் விலை ரூ. 60 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் EV மாடல் தான் தற்போது நெக்சான் EV பிரைம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

"நெக்சான் EV மாடல் அறிமுகமானது முதல் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனம் வாங்க நினைப்போரின் முதல் தேர்வாக இந்த மாடல் தான் இருக்கிறது. சந்தையில் நெக்சான் EV மாடல் 65 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது."
"நெக்சான் EV பிரைம் மாடலுடன் எங்கள் குறிக்கோளை மேலும் உறுதிப்படுத்தி தொடர்ந்து புது மாடல்களை அறிமுகம் செய்வோம். புது சாப்ட்வேர் அப்டேட் மூலம் பயனர்கள் டாடா எலெக்ட்ரிக் வாகன அனுபவத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதில் புது எல்லையை உருவாக்கி இருக்கிறோம்," என டாடா நிறுவனத்தின் விவேக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
- ஹூண்டாய் நிறுவனம் 2018 வாக்கில் ஐயோனிக் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை ரிகால் செய்தது.
- இவற்றில் உள்ள கோளாறு தீ விபத்து ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஐயோனிக் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. மொத்தம் 10 ஆயிரத்து 575 யூனிட்கள் ரிகால் செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் 2017 மற்றும் 2018 வாக்கில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். பாதிக்கப்பட்ட யூனிட்கள் தீ விபத்தை ஏற்படுத்த காரணமாகி விடும் அபாயம் கொண்டுள்ளன.

முன்னதாக 2018 வாக்கில் இந்த மாடல்கள் ரிகால் செய்யப்பட்டன. எனினும், அப்போது இவை முறையாக சரி செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த யூனிட்களில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. வாகனங்களின் காண்டாக்ட்களில் லூஸ் கனெக்ஷன் இருப்பதால், எலெக்ட்ரிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஆகும். இந்த சூழல் பாகங்களை எளிதில் சூடாக்கி, தீப்பிடிக்க செய்யலாம்.
பாதிக்கப்பட்ட வாகனங்கள் நவம்பர் 16, 2016 முதல் ஆகஸ்ட் 16, 2017-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். ரிகால் செய்யப்படும் ஐயோனிக் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் ஆகஸ்ட் 10, 2017 முதல் ஆகஸ்ட் 11, 2017-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். முதன் முதலில் இந்த பிரச்சினை 2018 மார்ச் மாத வாக்கில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காலாண்டு விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- இந்த விற்பனையில் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 443 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 250 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

இதில் பயணிகள் வாகன விற்பனை 2 லட்சத்து 12 ஆயிரத்து 914 யூனிட்கள் ஆகும். இது கடந்த ஆண்டு வெறும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 780 யூனிட்களாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சியை ஒட்டி ஏற்பட்ட மாற்றங்களை குறிக்கிறது.
உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 197 தனியார் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 125 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் எஸ்.யு.வி.-க்கள் மட்டும் 68 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தன. இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 283 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் தனது ஆல்டோ ஹேச்பேக் மாடலின் மூன்று வேரியண்ட்களை நிறுத்தியது. தற்போது இந்த வரிசையில் எஸ் பிரெஸ்ஸோ மாடலும் சேர்ந்து இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் ஆறு வேரியண்ட்களின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. புது மாற்றங்களை அடுத்து மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.
எஸ் பிரெஸ்ஸோ மாடலின் LXi, VXi, VXi AMT, மற்றும் VXi CNG போன்ற வேரியண்ட்களின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி நிறுத்திவிட்டது. தற்போது ரெகுலர் வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் 8 வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் ஆட்டோமேடிக் மாடல்களின் விலை ரூ. 5 லட்சத்து 19 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.

இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் பிரிவில் எஸ் பிரெஸ்ஸா மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். எஸ் பிரெஸ்ஸோ மாடலை சிறிய எஸ்யுவி-ஆக மாற்றுவதற்கு மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டது. எனினும், இது எண்ட்ரி லெவல் பிரிவில் கிடைக்கும் மாருதி சுசுகி கார் தான்.
எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி K10B என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினின் பெட்ரோல் வேரியண்ட் 67 ஹெச்.பி. பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG பயன்படுத்தும் போது இந்த என்ஜின் 58 ஹெச்.பி. பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டக்சன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- வரும் வாரத்தில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது மேம்பட்ட டக்சன் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. 30 நொடிகள் வீடியோ வடிவில் இந்த டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசர் வீடியோவின் படி புதிய ஹூண்டாய் டக்சன் மாடலின் எக்ஸ்டீரியர் வெளியாகி உள்ளது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளியீடு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
சமீப ஆண்டுகளில் இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து புதிய தலைமுறை டக்சன் மாடல் அமோக வரவேற்பை பெறும் என ஹூண்டாய் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. புதிய டக்சன் மாடல் ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை தேடிக் கொடுத்து இருக்கிறது.

உலகம் முழுக்க இதுவரை 7 லட்சம் மாடல்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஒருபுறம் ஐரோப்பா மறுபுறம் ஜப்பான் என இரண்டு புறங்களிலும் இந்த பிரிவு வாகனங்கள் விற்பனையில் ஹூண்டாய் இத்தகைய விற்பனையை பதிவு செய்து இருப்பதாக பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 417 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஹூண்டாய் அல்கசார் புது வேரியண்ட் விலை அதன் பிரெஸ்டிஜ் வேரியண்ட்-ஐ விட ரூ. 55 ஆயிரம் குறைவு ஆகும்.
- இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அல்கசார் மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வேரியண்ட் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் என அழைக்கப்படுகிறது. புது வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது தற்போதைய எக்சிக்யுடிவ் வேரியண்டை விட ரூ. 55 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.
புதிய ஹூண்டாய் அல்கசார் விலை விவரங்கள்:
அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்
அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்
அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 77 ஆயிரம்
அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 6 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய அல்கசார் வேரியண்டில் இன்போடெயின்மெண்ட் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீனுக்கு மாற்றாக அளவில் சிறிய 8 இன்ச் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே போன்ற யூனிட் தான் புதிய ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதில் புளூ லின்க் கனெக்டெட் அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன. இவை தவிர பெரும்பாலான இதர அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் பெட்ரோல் மாடல் 7 சீட்டர் வடிவிலும், டீசல் மாடல் 7 மற்றும் 6 சீட்டர் வடிவில் கிடைக்கிறது.
- ரெனால்ட் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.
- இவை இம்மமாத இறுதி வரை வழங்கப்பட உள்ளன.
இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட ரெனால்ட் டீலர்ஷிப்களில் அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

அதன்படி ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ரூ. 44 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 55 ஆயிரம் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே காரின் 1.0 லிட்டர் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு, முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
- 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி விரைவில் ஆல்டோ K10 ஹேச்பேக் காரை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ மாடல் சில வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தியது.
2020 வாக்கில் பி.எஸ்.6 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆல்டோ K10 மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலுக்கு இன்னும் வரவேற்பு இருப்பதோடு, இதற்கு போட்டியாக அதிக மாடல்கள் இல்லாத காரணத்தால், மீண்டும் இதனை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆல்டோ மாடல்களை மாற்றியமைத்து வரும் மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி Std, LXi மற்றும் LXi CNG வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. மூன்று வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதை அடுத்து ஆல்டோ 800சிசி மாடல் விலை தற்போது ரூ. 3 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது ஆல்டோ மாடல் LXi (o) வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
ஆல்டோ K10 மாடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கும். தற்போது ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்கள் சேர்ந்து ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகின்றன. இன்று வரை மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஆல்டோ விளங்குகிறது.
இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் தலைமுறை மாடல் 2012 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் தலைமுறை ஆல்டோ மாடல் அதன் பின் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை சுமார் 43 லட்சம் ஆல்டோ ஹேச்பேக் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.
- ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் உற்பத்தி குறித்து புது அப்டேட் வெளியிட்டு உள்ளது.
- இந்த மாடல் உலகம் முழுக்க ஒன்பது பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. ரெனால்ட் கைகர் 50 ஆயிரமாவது யூனிட் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. உற்பத்தியில் புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கைகர் மாடலை புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அறிமுகமான மூன்றாவது கார் மாடலாக ரெனால்ட் கைகர் இருந்தது. இந்த மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் தான் நடைபெற்றது. தற்போது இந்த மாடல் தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா, கிழக்கு ஆப்ரிக்கா, சிச்சில்ஸ், மொரிஷியஸ், பூட்டான், பெர்முடா மற்றும் புரூனெய் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.

"தலைசிறந்த டிசைன், ஸ்மார்ட் அம்சங்கள், அதீத பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் என அனைத்து பிரிவுகளிலும் சிறந்த மதிப்பீட்டை கொண்டிருக்கும் ரெனால்ட் கைகர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் 50 ஆயிரம் யூன்ட்கள் உற்பத்தியாகி இருக்கிறது."
"இந்திய சந்தையில் எங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் மாடல்களில் ரெனால்ட் கைகர் ஒன்று. ரெனால்ட் கைகர் மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதோடு இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் பிராண்டு வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கிறோம்," என்று ரெனால்ட் இந்தியா சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பல்லே தெரிவித்தார்.
- ஜாகுவார் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது F பேஸ் SVR எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- இது ஜாகுவார் நிறுவனத்தின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.
ஜாகுவார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த F பேஸ் SVR எடிஷன் 1998 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது ஜாகுவார் ஹை பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி.-யின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலை எஸ்.வி. பிஸ்போக் வல்லுனர்கள் உருவாக்கினர் மொத்தத்தில் 394 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இவை அனைத்தும் ஜாகுவார் ரேசிங் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டு சர்வதேச ஸ்போர்ட்ஸ் ப்ரோடோடைப் சாம்பியன்ஷிப் பட்டத்தை XJR-9 மாடல் வென்றதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

லிமிடெட் எடிஷன் மாடலில் விசேஷமான பார்முலேட் செய்யப்பட்ட மிட்நைட் அம்திஸ்ட் கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் ஆப்ஷனல் ஷேம்பெயின் கோல்டு சாட்டின் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் உள்ளன.மேலும் சன்செட் கோல்டு சாட்டின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் டீடெயிலிங் 'One of 394' எஸ்.வி. பிஸ்போக் கமிஷனிங் கிராபிக் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் சன்செட் கோல்டு சாட்டின் ஜாகுவார் லீப்பர், டெயில்கேட்டில் ஸ்க்ரிப்ட், முன்புற விங் பேனல் மீது லேசர் இட்ச் செய்யப்பட்ட எடிஷன் 1998 லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் ஜாகுவார் நிறுவனத்தின் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை நான்கு நொடிகளில் எட்டி விடும்.
- டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்தது.
- இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா, நேற்று தான் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் நியோ டிரைவ் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நியோ டிரைவ் மாடல் நான்கு வேரியண்ட்கள் - E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. செல்ப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மாடல் S. G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹைப்ரிட் பவர்டிரெயினில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த என்ஜின் 87 ஹெச்.பி. பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜின் மற்றும் மோட்டார் ஒன்றிணைந்த செயல்திறன் 114 ஹெச்.பி. ஆக உள்ளது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் யூனிட் 100.5 ஹெச்.பி. திறன், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசைய வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.






