search icon
என் மலர்tooltip icon

    கார்

    முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹிந்திரா XUV700 - எத்தனை யூனிட்கள் தெரியுமா?
    X

    முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹிந்திரா XUV700 - எத்தனை யூனிட்கள் தெரியுமா?

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV700 அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் சில நகரங்களில் ஒரு ஆண்டு வரை அதிகரித்து இருக்கிறது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் முன்பதிவில் 1.5 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் மஹிந்திரா XUV700 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா XUV700 மாடலுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் துவங்கியது.

    தற்போது XUV700 மாடலுக்கான ஓபன் புக்கிங் 80 ஆயிரம் யூனிட்களாக இருக்கிறது. இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் ஒரு வருடம் வரை நீண்டு இருக்கிறது. மஹிந்திரா XUV700 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 189 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டூயல் ஸ்கிரீன் செட்டப், 6/7 சீட்டர் ஆப்ஷன்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ADAS அம்சங்கள், ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், கனெக்டெட் கார் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.


    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×