என் மலர்tooltip icon

    கார்

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என இருவித வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் G-Slf, GX, VX ஹைப்ரிட், VX(O) ஹைப்ரிட், ZX ஹைப்ரிட் மற்றும் ZX(O) ஹைப்ரிட் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் அதிக பிரபலமடைந்த இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி-யின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை வாங்குவோர் அதன் ஹைப்ரிட் வெர்ஷன்களை டெலிவரி எடுக்க 100 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களை பெற முன்பதிவு செய்ததில் இருந்து 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை சார்ந்து புதிய எம்பிவி மாடலை உருவாக்கி இருக்கிறது. மாருதி சுசுகி எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது. விலை மற்றும் வினியோக விவரங்கள் ஜூலை 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    • ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4.8 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.
    • ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை உலகின் 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    ரெனால்ட் நிறுவனம் இந்திய உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. பத்து லட்சமாவது யூனிட்-ஆக ரெனால்ட் கைகர் ரேடியன்ட் ரெட் நிற மாடல் அமைந்தது. இந்த கார் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் குவிட், கைகர் மற்றும் டிரைபர் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    மேலும் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை SAARC, ஆசிய பசிபிக், இந்திய பெருங்கடல், தென்னாப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா என 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    "இந்திய சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தி எனும் மைல்கல் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய சந்தைக்கு நாங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது."

    "எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து சுவார்ஸயம் நிறைந்த வாகனங்களை அறிமுகம் செய்து, எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்வோம்," என்று ரெனால்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பலே தெரிவித்தார்.

    • மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புற, பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் வழங்கப்படலாம்.
    • இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய XUV700 எலெக்ட்ரிக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. XUV700 எலெக்ட்ரிக் வேரியண்ட், XUV.e8 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கார் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பை படங்களில் உள்ள மஹிந்திரா XUV.e8 மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய கான்செப்ட் வெர்ஷனின் படி, புதிய XUV.e8 மாடல் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனில் உள்ளதை போன்ற வெளிப்புற தோற்றம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் முன்புறம் மற்றும் பின்புறம் மாற்றப்பட்டு புதிய டிசைன் மற்றும் லைட்டிங் வழங்கப்படும் என்று தெரிகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில் XUV.e8 மாடல் உருவாக்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யுவிக்களில் முதல் மாடலாக புதிய XUV.e8 மாடல் இருக்கும் என்று தெரிகிறது.

    இதே பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற மாடல்களை போன்றே, இந்த காரிலும் லெவல் 2 பிளஸ் தானியங்கி முறை, OTA அப்டேட்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய மஹிந்திரா XUV.e8 மாடலின் பேட்டரி மற்றும் செயல்திறன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது.

    எனினும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் 60-80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் 335-389 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் 7 சீட்டர் எலெக்ட்ரிக் மாடல் அளவீடுகளில் 4740mm நீளமும், 1900mm அகலம், 1760mm உயரம், 2762mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    • மாருதியின் புதிய இன்விக்டோ எம்பிவி மாடலின் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
    • மாருதி இன்விக்டோ மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கும் என தகவல்.

    மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படும் என உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய இன்விக்டோ மாடலுக்கான முன்பதிவு ஜூன் 19-ம் தேதியும், வெளியீடு ஜூலை 5-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

    இன்னோவா ஹைகிராஸ் போன்று இல்லாமல், மாருதி இன்விக்டோ மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இத்துடன் e-CVT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் ஹைப்ரிட் மோட்டார் கூடுதலாக 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிசைனை பொருத்தவரை மாருதி இன்விக்டோ மாடலில் முன்புற பம்ப்பர் டுவீக் செய்யப்பட்டு, புதிய கிரில் மற்றும் 2 க்ரோம் ஸ்லாட்கள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. புதிய இன்விக்டோ மாடலின் இன்டீரியர் பற்றி மாருதி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், இந்த மாடலில் பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் மற்றும் பவர்டு முன்புற இருக்கைகள், இரண்டாம் அடுக்கில் ஒட்டோமேன் இருக்கைகள், ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    • மாருதி சுசுகி எம்பிவி மாடல் என்கேஜ் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
    • மாருதி சுசுகி நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய எம்பிவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் புதிய மாருதி சுசுகி எம்பிவி மாடல் என்கேஜ் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களின் படி புதிய எம்பிவி மாடலின் முன்புறம் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் டுவின் பார் கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், அளவில் பெரிய ஏர் இன்டேக், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    Photo Courtesy: MotorBeam

    Photo Courtesy: MotorBeam

    சர்வதேச அளவில் டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், ரிபேட்ஜ் செய்யப்பட்ட ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் கர்நாடக மாநிலத்தின் பிடாடியில் உள்ள டொயோட்டா ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இரு நிறுவனங்கள் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியானது.

    அதன்படி இருநிறுவனங்கள் கூட்டணி அமைத்ததில் இருந்து, சுசுகி பேட்ஜிங்கில் வெளியாகும் முதல் டொயோட்டா கார் இது ஆகும். இதுவரை மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் கிளான்சா பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அர்பன் குரூயிசர் பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன. இரு நிறுவனங்கள் இணைந்து மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களை உருவாக்கின.

    இதில் இரு மாடல்களையும் டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஹைகிராஸ் மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக டாப் எண்ட் ZX மற்றும் ZX (o) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    • டெஸ்டிங் செய்யப்படும் மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.
    • மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தகவல்.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிஃப்ட் மாடலினை டெஸ்டிங் செய்ய துவங்கி இருக்கிறது. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டெஸ்டிங் செய்யப்படும் மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட டிசைன் வழங்கப்படுகிறது. இதே போன்று காரின் உள்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.

    மஹிந்திரா XUV300 பேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்பகட்ட டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த மாலில் தற்காலிக ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடலில் XUV700 தழுவிய C-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. தோற்றத்தில் இவை XUV.e போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    இதன் மூலம் காரின் முன்புறம் முற்றிலும் புதிய தோற்றம் பெறும். இதில் இரண்டு பாகங்களில் கிரில், நடுவில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது. புதிய XUV300 பேஸ்லிஃப்ட் மாடலில் முற்றிலும் புதிய டெயில்கேட், பம்ப்பர், டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    • புதிய லெக்சஸ் GX மாடல் பாடி-ஆன்-ஃபிரேம் YNGA-F பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லெக்சஸ் GX மாடலில் 3.4 லிட்டர் வி6 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லெக்சஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் முற்றிலும் புதிய GX மாடலை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான லெக்சஸ் தனது மூன்றாம் தலைமுறை GX எஸ்யுவி மாடலை உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய GX மாடல் பாடி-ஆன்-ஃபிரேம் YNGA-F பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் மற்றும் லெக்சஸ் LX போன்ற மாடல்களும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எஸ்யுவி மாடல்- பிரீமியம், பிரீமியம் பிளஸ், லக்சரி, லக்சரி பிளஸ், ஒவர்டெயில் மற்றும் ஒவர்டெயில் பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஆஃப் ரோடிங் பயன்பாட்டிற்காக உயரமான ஸ்டான்ஸ், கூர்மையான கேரக்டர் லைன் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இந்த காரின் முன்புறம் ஸ்பிண்டில் கிரில் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட்கள் மெல்லிய டிசைன் கொண்டிருக்கின்றன. இத்துடன் எல் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பின்புறம் ஃபிலாட் டெயில்கேட் மற்றும் எல்இடி டெயில்லைட்கள், ரியர் வைப்பர், இன்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, ரூஃப் ரெயில்கள் மற்றும் பெரிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய லெக்சஸ் GX மாடலில் 3.4 லிட்டர் வி6 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10-ஸ்டெப் டைரக்ட்ஷிஃப்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் உள்ளது. இந்த எனிஜின் 345 ஹெச்பி பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4x4 சிஸ்டம் மற்றும் லோ-ரேன்ஜ் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • நிசான் மேக்னைட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. நிசான் மேக்னைட் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    இந்திய சந்தையில் அறிமுகமான 30 மாதங்களில் இந்த மைல்கல்லை நிசான் நிறுவனம் எட்டியுள்ளது. தற்போது நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV, டர்போ, பிரீமியம், பிரீமியம் டர்போ (O), மற்றும் கெசா எடிஷன் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் மர்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 ஹெச்பி பவர், 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மாருதி ஜிம்னி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜிம்னி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜிம்னி மாடல் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என்றும் அதன் பிறகு ரூ. 25 ஆயிரம் என்றும் மாற்றப்பட்டது. முற்றிலும் புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான வினியோகமும் இன்றே (ஜூன் 7) துவங்குகிறது. மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் சிஸ்லிங் ரெட், நெக்சா புளூ, கிரானைட் கிரே, பியல் ஆர்க்டிக் வைட், புளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஜிம்னி மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ப்ரோஜெக்டர் யூனிட், ஐந்து ஸ்லாட்கள் கொண்ட கிரில், பிரமாண்ட் வீல் கிளாடிங், கிரே நிற அலாய் வீல்கள், செவ்வக வடிவம் கொண்ட ஹாலோஜன் டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய மாருதி ஜிம்னியின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்கு வகிக்கிறது.
    • உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. விற்பனைக்கு வந்த 46 மாதங்களில் இந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில், கியா செல்டோஸ் எஸ்யுவி-யின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி வியாபாரத்திலும் செல்டோஸ் மாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்குகளை பிடித்து அசத்தி இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி யூனிட்களும் அடங்கும்.

     

    இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகள் என்று உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கியா செல்டோஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    • கியா நிறுவனம் இதுவரை உருவாக்கியதிலேயே, அளவில் நீண்ட பயணிகள் வாகனம் இது ஆகும்.
    • கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய EV9 மாடல் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். ஆறு மற்றும் ஏழு இருக்கை வடிவில் இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது WLTP பரிசோதனையில் கிடைத்த முடிவுகள் ஆகும். அன்றாட பயன்பாடுகளின் போது, வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் காரின் ரேன்ஜ் வேறுப்படும்.

    இத்துடன் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 239 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். அளவீடுகளை பொருத்தவரை கியா EV9 மாடல் 5 மீட்டர்கள் நீளமாக இருக்கிறது. கியா நிறுவனம் இதுவரை உருவாக்கியதிலேயே நீண்ட பயணிகள் வாகனம் இது ஆகும். HMG-யின் பிரத்யேக பேட்டரி எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கார் இது.

    இதன் அகலம் 1980mm, உயரம் 1750mm மற்றும் வீல்பேஸ் 3100mm அளவில் உள்ளது. இதன் பூட் பகுதியில் 828 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வசதியை வழங்குகின்றன. இதன் 6/7 சீட்டர் மாடலில் இருக்கைகள் நேராக இருக்கும் போது 333 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ரியர் வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலுடன் 150 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.4 நொடிகளில் எட்டிவிடும்.

    கியா EV9 மாடலை 800-வோல்ட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ரியர் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சம் 239 கிலோமீட்டர்களும், ஆல் வீல் டிரைவ் வெர்ஷன் 219 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

    • மெர்சிடிஸ் EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் அறிமுகம்.
    • மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் EQB 350 4மேடிக் மாடலை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இதே EQB காரின் 300 4மேடிக் மாடல் இந்தியாவில் ரூ. 74 லட்சத்து 50 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்கள் 288 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. 300 4மேடிக் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய 350 4மேடிக் மாடல் 130 நியூட்டன் மீட்டர் டார்க் அளவுக்கு அதிக இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்கிறது.

    இதில் உள்ள பேட்டரியை 100 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் 10-ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களே ஆகும். இதனுடன் வழங்கப்படும் 11 கிலோவாட் வால் பாக்ஸ் சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 25 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இந்த காரில் MBUX டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 64 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், பவர்டு முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லைட்கள், 18-இன்ச் டுவின் ஸ்போக் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×