என் மலர்
கார்

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய ஹூண்டாய் ஐயோனிக் 5
- ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 ஆகும்.
- ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஐயோனிக் 5 மாடல் 500-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் அறிமுக நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியானது. ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஐயோனிக் 5 மாடல் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும். இதே பிளாட்ஃபார்மில் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள மோட்டார் 215 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
அம்சங்களை பொருத்தவரை ஐயோனிக் 5 மாடலில் எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ADAS, பல்வேறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த காரை கொண்டு லேப்டாப், ஸ்மர்ட்போன் போன்ற சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இத்துடன் 8 ஸ்பீக்கர் பிரீமியம் போஸ் சவுன்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் சவுன்ட் வழங்கப்படுகிறது.






