search icon
என் மலர்tooltip icon

    கார்

    அசத்தல் அம்சங்களுடன் ஸ்கோ குஷக் ஸ்பெஷல் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம்
    X

    அசத்தல் அம்சங்களுடன் ஸ்கோ குஷக் ஸ்பெஷல் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம்

    • குஷக் மேட் எடிஷன் மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இந்த மாடல் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மேட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் டாப் எண்ட் ஸ்டைல் மற்றும் மான்ட் கர்லோ வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இந்த மாடல் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேட் எடிஷன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கார்பன் ஸ்டீல் ஃபினிஷ் மற்றும் கிளாசி பிளாக், க்ரோம் எலிமென்ட்கள் உள்ளன.

    பவர்டிரெயினை பொருத்தவரை குஷக் மேட் எடிஷன் மாடல் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவற்றில் 1.0 லிட்டர் யூனிட் 113 ஹெச்பி பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் யூனிட் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.0 லிட்டர் மேனுவல் ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.0 லிட்டர் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 79 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.5 லிட்டர் மேனுவல் ரூ. 18 லட்சத்து 19 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.5 லிட்டர் ஆட்டோமேடிக் ரூ. 19 லட்சத்து 39 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×