என் மலர்
கார்
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் காத்திருப்பு காலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- நான்கு மாருதி கார்களுக்கு காத்திருப்பு காலம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு குறைந்த பட்சம் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனினும், இந்த நிலை அந்நிறுவன கார் மாடல்கள் அனைத்திற்கும் பொருந்தாது.
மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களுக்கு ஜூலை 2023 மாதத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் இந்த மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த மாடல்கள் வினியோகம், விரைவில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. செலரியோ, வேகன்ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களில் 1.0- லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல், AMT கியர்பாக்ஸ், CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
வேகன்ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் சுமார் 87 ஆயிரம் கார்களை ரிகால் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது.
- இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி. கடந்த 2021 ஜூலை 5 முதல் 2023 பிப்ரவரி 15-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் மாருதி சுசுகி தயாரித்த 87 ஆயிரத்து 599 கார்களை திரும் பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
இதில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஸ்டியரிங் டை ராடு-இல் பிரச்சினை இருப்பதே, கார்களை திரும் பெறுவதற்கான காரணம் ஆகும். இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான தகவல் வழங்கப்படும். பிறகு பாதிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்து, ஸ்டியரிங் டை ராடை இலவசமாக மாற்றிக் கொடுக்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கார்களை திரும்பப்பெறும் இந்த நடவடிக்கை நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது என்று மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபகாலத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மேற்கொண்ட மிகப் பெரிய திரும்பப்பெறும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.
- டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
- டாடா நிறுவன கார்களில், CNG கிட் பெறும் நான்காவது மாடல் இது ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்கள் வரிசையில் CNG கிட் பெறும் நான்காவது கார் மாடலாக பன்ச் மாடல் இடம்பெற்று இருக்கிறது.
அல்ட்ரோஸ் CNG மாடலில் உள்ளதை போன்றே புதிய பன்ச் CNG மாடலிலும் டூயல் சிலின்டர் செட்டப் வழங்கப்படுகிறது. இது காரின் பூட் பகுதியை அதிகளவில் ஆக்கிரமிக்காது. புதிய பன்ச் CNG மாடலிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பன்ச் CNG வேரியன்டை நேரடியாக CNG மோடிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். பல்வேறு CNG கார்களிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் வெளிப்புறம் i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றும் மேற்கொள்ளப்படலில்லை.
புதிய பன்ச் CNG மாடலின் உள்புறம் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 16 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- எம்ஜி நிறுவனத்தின் புதிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது.
- இந்த காரில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த கொமெட் EV மாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மைக்ரோ EV மாடல்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாத விற்பனையின் படி எம்ஜி கொமெட் EV மாடல் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் இரண்டாவது மாடலாக உருவெடுத்தது. இந்த பிரிவில் எம்ஜி கொமெட் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால், இதே பிரிவில் பயனர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய EV மாடலுக்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருக்கிறது. இந்த மாடல் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் போஜூன் யெப் எலெக்ட்ரிக் மினி எஸ்யுவி மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
எம்ஜி கொமெட் EV மாடலுடன் ஒப்பிடும் போது, புதிதாக உருவாகி வரும் சிறிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை போஜூன் யெப் மாடல் 3381mm நீளம், 1685mm அகலம், 1721mm உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2110mm அளவில் உள்ளது.
புதிய போஜூன் யெப் மாடலில் பாக்சி டிசைன், செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள், ரக்கட் பம்ப்பர் மற்றும் பிலாட் பொனெட் வழங்கப்படுகிறது.
புதிய எம்ஜி EV மாடலில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 67 ஹெச்பி பவர், 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 303 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.
- இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதிய அலட்ரோஸ் வேரியன்டில் கூடுதல் அம்சங்கள், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்ட்ரோஸ் மாடலின் XM மற்றும் XM(S) வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய வேரியன்ட்கள் XE மற்றும் XM+ வேரியன்ட்களின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய வேரியன்ட்களின் விலை ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய அல்ட்ரோஸ் XM வேரியன்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கூடிய ORVMகள், 16 இன்ச் வீல் மற்றும் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர டாடா அல்ட்ரோஸ் XE, XM+, XM+ (S), XT போன்ற வேரியன்ட்களில் புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. டாடா அல்ட்ரோஸ் XE மாடலில் ரியர் பவர் வின்டோ, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு உள்ளது.
அல்ட்ரோஸ் XM+ மற்றும் XM+ (S) வேரியன்ட்களில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கன்ட்ரோல், 16 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. டாடா அல்ட்ரோஸ் XT வேரியன்டில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டாடா அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) வேரியன்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் i20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டின் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மஹந்திரா XUV500 மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
- ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV500 மாடலை 2011 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மஹிந்திரா உருவாக்கிய முதல் மோனோக் எஸ்யுவி மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு மாற்றாக மஹிந்திரா XUV700 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் XUV500 பிரான்டிங் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும், இதன் அடுத்த தலைமுறை மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

அதிக பிரபலமாக இருந்த காரணத்தால், XUV500 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் இணையத்தில் வெளியானது. S301 குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த காரின் ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. டாடா நிறுவனமும் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய கர்வ் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
இதனிடையே புதிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் புதிய கார் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதே போன்ற டிசைன் XUV ஏரோ கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இதன் டிசைன் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Photo Courtesy: DANGER B via Gaadiwaadi
- அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதாக தகவல் வெளியானது.
- பிஸ்கர் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி- ஓஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். மெல்லிய எலெக்ட்ரிக் கார்கள், இருசக்கர வாகனங்கள் என இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களில், அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டன. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. டெஸ்லா நிறுவனம் டாப் என்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகன துறையில் அதிநவீன தொழில்நுட்பம், நீண்ட தூரம் பயணம் செய்யும் திறன், அதிவேக சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தானியங்கி வாகன முறை என பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் டெஸ்லா பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிஸ்கர் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் பிஸ்கர் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி-யான ஓஷன் மாடல், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் Y-க்கு போட்டியாக அமைகிறது.
பிஸ்கர் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. பிஸ்கர் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
- மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ், ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வேரியன்ட்களில் புதிய அம்சம் வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களில் "அகௌஸ்டிக் வெஹிகில் அலெர்டிங் சிஸ்டம்" எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது.
புதிய அம்சம் சாலையில் வாகனம் செல்வது பற்றிய தகவலை ஓட்டுனர் மற்றும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும். இதற்கு இந்த சிஸ்டம் பாதசாரிகளுக்கு சவுன்ட் அலெர்ட் கொடுக்கும். இது வாகனத்தில் இருந்து அதிகபட்சம் ஐந்து அடி தூரம் வரை கேட்கும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், அனைத்து ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்கள் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
- ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜீப் இந்தியா நிறுவனம், ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்தது.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது மெரிடியன் 7 சீட்டர் எஸ்யுவி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களை நிறுத்தி இருக்கிறது. ஜீப் மெரிடியன் எஸ்யுவி-இன் லிமிடெட் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டன.
இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் லிமிடெட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஜீப் மெரிடியன் மாடல் - லிமிடெட் (O), X, அப்லேன்ட் மற்றும் லிமிடெட் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் தான் ஜீப் இந்தியா நிறுவனம் ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதில் வாகன பரிசோதனை, இலவச அலைன்மென்ட், டயர் மாற்றும் சேவை வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் வென்யூ மாடல் வருடாந்திர அடிப்படையில் 12.4 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
- மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு திடீரென அதிகரித்து விட்டது. இதனை எதிர்கொள்ள அனைத்து கார் உற்பத்தியாளர்களும் புதிய எஸ்யுவி மாடல்களை உருவாக்கும் பணிகளை வேகப்படுத்தி இருக்கின்றன.
இந்திய சந்தையில் தொடர்ச்சியாக புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையிலும், எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு, அவற்றின் விற்பனையில் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. அந்த வகையில், இந்திய சந்தையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான கார்களில் டாப் 5 எஸ்யுவி மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் கிரெட்டா:
இந்திய காம்பேக்ட் எஸ்யுவி மாடல்கள் பிரிவில் பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், ஹூண்டாய் கிரெட்டா மாடல் எஸ்யுவி-க்கள் பிரிவில் தொடர்ந்து பிரபலமாக விளங்கி வருகிறது. 2023 ஜூன் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

டாடா நெக்சான்:
டாடா நெக்சான் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யுவி-யாக இருக்கிறது. இந்த மாடல் ஜூன் 2023 மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 827 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 3.2 சதவீதம் குறைவு ஆகும்.
ஹூண்டாய் வென்யூ:
ஹூண்டாய் வென்யூ மாடல் வருடாந்திர அடிப்படையில் 12.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2023 ஜூன் மாதத்தில் மட்டும் இந்த கார் 11 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

டாடா பன்ச்:
மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் 10 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 5.5 சதவீதம் அதிகம் ஆகும்.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா:
மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இந்த மாடல் கடந்த மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 578 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் வருடாந்திர அடிப்படையில் 140 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- இந்திய வாகனங்கள் சந்தையில் ஆகஸ்ட் 2019 ஆண்டு கியா இந்தியா களமிறங்கியது.
- சமீபத்தில் தான் கியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்-ஐ வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் இத்தகைய மைல்கல்-ஐ அதிவேகமாக எட்டிய நிறுவனங்களில் ஒன்றாக கியா இந்தியா இருக்கிறது.
இந்திய சந்தையில் ஆகஸ்ட் 2019 ஆண்டு கியா இந்தியா களமிறங்கியது. கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பத்து லட்சமாவது யூனிட்-ஆக கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது.

"எங்களுக்கும், எங்களது ஊழியர்கள், நாட்டில் எங்களது பயணத்திற்கு ஆதரவு கொடுத்து, இந்திய நுகர்வோர் மத்தியில் கியா பிரான்டை கொண்டு சேர்த்த அனைவருக்கும் இது மிகப் பெரிய தருணம் ஆகும். அவர்களின் ஆதரவு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அனுப்புக்கு நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். கியா இந்தியா நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உணர முடிகிறது."
"இந்திய சந்தையில் ஆட்டோமோடிவ் பிரிவில் சிறந்து விளங்கும் நோக்கில், புதிய தொடக்கமாக புதிய செல்டோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதுமைகளை புகுத்துவது, எல்லைகளை கடந்து, இந்திய ஆட்டோமொபைல் எதிர்காலத்தை வடிவமைத்தலில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்," என்று கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் தெரிவித்துள்ளார்.
- சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது.
- சமீபத்தில் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் கிராஸ்ஒவர், C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலன்கள் 2022 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு பொருந்தும், இவை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல்- ஷைன் என்று அழைக்கப்படும் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. சமீபத்தில் தான் சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் நான்காவது கார் மாடல் ஆகும்.
சிட்ரோயன் C3 மாடலை போன்ற ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் C3 ஏர்கிராஸ் மாடல் ஸ்டைலிங் அதன் முந்தைய மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய காரின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.






