search icon
என் மலர்tooltip icon

    கார்

    87 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி - ஏன் தெரியுமா?
    X

    87 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி - ஏன் தெரியுமா?

    • இந்திய சந்தையில் சுமார் 87 ஆயிரம் கார்களை ரிகால் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது.
    • இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

    நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி. கடந்த 2021 ஜூலை 5 முதல் 2023 பிப்ரவரி 15-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் மாருதி சுசுகி தயாரித்த 87 ஆயிரத்து 599 கார்களை திரும் பெறுவதாக அறிவித்து இருக்கிறது.

    இதில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஸ்டியரிங் டை ராடு-இல் பிரச்சினை இருப்பதே, கார்களை திரும் பெறுவதற்கான காரணம் ஆகும். இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

    பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான தகவல் வழங்கப்படும். பிறகு பாதிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்து, ஸ்டியரிங் டை ராடை இலவசமாக மாற்றிக் கொடுக்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கார்களை திரும்பப்பெறும் இந்த நடவடிக்கை நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது என்று மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபகாலத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மேற்கொண்ட மிகப் பெரிய திரும்பப்பெறும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.

    Next Story
    ×