search icon
என் மலர்tooltip icon

    கார்

    303 கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி மைக்ரோ EV மாடல் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    303 கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி மைக்ரோ EV மாடல் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

    • எம்ஜி நிறுவனத்தின் புதிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது.
    • இந்த காரில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த கொமெட் EV மாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மைக்ரோ EV மாடல்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஜூன் மாத விற்பனையின் படி எம்ஜி கொமெட் EV மாடல் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் இரண்டாவது மாடலாக உருவெடுத்தது. இந்த பிரிவில் எம்ஜி கொமெட் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால், இதே பிரிவில் பயனர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய EV மாடலுக்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருக்கிறது. இந்த மாடல் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் போஜூன் யெப் எலெக்ட்ரிக் மினி எஸ்யுவி மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    எம்ஜி கொமெட் EV மாடலுடன் ஒப்பிடும் போது, புதிதாக உருவாகி வரும் சிறிய EV மாடல் ரக்கட் ப்ரோபைல் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை போஜூன் யெப் மாடல் 3381mm நீளம், 1685mm அகலம், 1721mm உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2110mm அளவில் உள்ளது.

    புதிய போஜூன் யெப் மாடலில் பாக்சி டிசைன், செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள், ரக்கட் பம்ப்பர் மற்றும் பிலாட் பொனெட் வழங்கப்படுகிறது.

    புதிய எம்ஜி EV மாடலில் 28.1 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 67 ஹெச்பி பவர், 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 303 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×