search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஜூன் மாத விற்பனை விவரங்களை அறிவித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா
    X

    ஜூன் மாத விற்பனை விவரங்களை அறிவித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா

    • ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கியது.
    • இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஜூன் 2023 மாதத்தில் 5 ஆயிரத்து 80 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 112 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 7 ஆயிரத்து 834 யூனிட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 502 யூனிட்களையும் ஏற்றுமதி செய்து இருந்தது.

    "ஜூன் மாத விற்பனை நாங்கள் எதிர்பார்த்த படி சீராக இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் எங்கள் இலக்குகளை அடைந்திருக்கிறோம். எங்களின் புதிய எஸ்யுவி ஹோண்டா எலிவேட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்ததில் இருந்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறோம். சமீபத்தில் எலிவேட் மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. பண்டிகை காலக்கட்டத்தில் இதன் வெளியீடு நடைபெறும்," என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யுச்சி முராடா தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிரான்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளியீடு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×