என் மலர்
கார்

ஹோண்டா எலிவேட் முன்பதிவு மற்றும் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன தகவல்!
- ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் எஸ்யுவி பிரிவில் ஹோண்டா எலிவேட் நிலை நிறுத்தப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவுகளை ஜூலை 3-ம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலிவேட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியிலோ, செப்டம்பர் மாத துவக்கத்திலோ ஹோண்டா எலிவேட் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து வேரியன்ட்களிலும் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும்.
ஹோண்டா எலிவேட் மாடலில் 121 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் வெளியீட்டுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.
அந்த வகையில், இந்தியவில் வெளியாகும் போது புதிய ஹோண்டா எலிவேட் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.






