என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஆடி நிறுவனம் புதிய கியூ5 பேஸ்லிப்ட் மாடலுக்கான இந்திய முன்பதிவை துவங்கி இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் 2021 ஆடி கியூ5 பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய கியூ5 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகமாகிறது.
பேஸ்லிப்ட் மாடலை ஆடி நிறுவனம் 2020 ஜூன் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் தயாரிப்பு பணிகள் இந்திய ஆலையில் துவங்கியது.

2021 ஆடி கியூ5 பேஸ்லிப்ட் மாடலில் புல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புது வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ5 மாடலில் 2 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது.
இத்துடன் 7 ஸ்பீடு எஸ் டிரானிக் ஆட்டோமேடிக் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஆர்.சி.200 மோட்டார்சைக்கிள் 199.5சிசி என்ஜின் கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தையை தொடர்ந்து 2022 கே.டி.எம். ஆர்.சி.200 இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது. இந்தியாவில் புதிய 2022 கே.டி.எம். ஆர்.சி.200 விலை ரூ. 2.09 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது அறிமுக விலை தான், விரைவில் இது மாற்றப்படும்.
2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், பெரிய எல்.சி.டி. கன்சோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., முற்றிலும் புதிய சேசிஸ், மேம்பட்ட எர்கோனமிக், எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் கிராண்ட் ப்ரிக்ஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் 199.5சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 19.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டாடா பன்ச் விலை ரூ. 5.49 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அறிமுக விலை தான், டிசம்பர் 31, 2021 வரை மட்டுமே இந்த விலை பொருந்தும்.
புதிய டாடா பன்ச் மாடலுக்கான முன்பதிவு டாடா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். இந்த மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
அப்ரிலியா இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 முழுமையான எல்.இ.டி. லைட்டிங் கொண்டிருக்கிறது.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் புத்தம் புதிய ஆர்.எஸ்660 மோட்டார்சைக்கிளை செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி ஒரு மாதம் கழித்து இந்த மோட்டார்சிக்கிளின் வினியோகம் துவங்கி இருக்கிறது. இதுபற்றிய தகவல் அப்ரிலியா இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 விலை ரூ. 13.39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடலில் பாதுகாப்பிற்கு குரூயிஸ் கண்ட்ரோல், 3-லெவல் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஆர்.எஸ்.660 மாடலில் டூயல்-பாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப், புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா நிறுவனம் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பணிகளை குறைக்கிறது.
டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது சர்வதேச கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது. முன்னதாக நவம்பர் மாதம் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 8.5 லட்சம் முதல் 9 லட்சம் யூனிட்களாக குறைக்கிறது.
கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜப்பானில் 50 ஆயிரம் யூனிட்கள், வெளிநாட்டு சந்தைகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் வரை குறையும்.

முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் டொயோட்டா கார் உற்பத்தியை மூன்று சதவீதம் வரை குறைத்தது. சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாகவும் கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்து இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் கோடியக் பி.எஸ்.6 மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்கோடா நிறுவனம் பி.எஸ்.6 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்கிறது. இந்த தகவலை ஸ்கோடா ஆட்டோ இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்ட ஸ்கோடா கோடியக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

இந்தியாவில் பி.எஸ்.6 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் சி.கே.டி. முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள் உள்ளன.
கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது.
கியா சொனெட் ஆனிவர்சரி எடிஷன் இந்தியாவில் அறிமுகமானது. இதன் விலை ரூ. 10.79 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.89 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்திய சந்தையில் ஒரு வருடத்தை நிறைவு செய்ததை அடுத்து செல்டோஸ் மாடலுக்கும் இதேபோன்ற காரை கியா இந்தியா அறிமுகம் செய்தது. இதுதவிர, கியா சொனெட் மாடலும் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

கியா சொனெட் ஆனிவர்சரி எடிஷன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் உற்பத்தி இந்த நிதியாண்டு முடியும் வரை நடைபெறும். சொனெட் ஆனிவர்சரி எடிஷன் ஹெச்.டி.எம். மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் அரோரா பிளாக் பியல், கிராவிட்டி கிரே, சில்வர் ஸ்டீல் மற்றும் கிளேசியர் வைட் பியல் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
இருசக்கர வாகனங்களை அதன் உற்பத்தியாளர்கள் ஆலோசனைப்படி சீரான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவ்வப்போது அதனை பராமரித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதால், வாகனம் அடிக்கடி பழுதாகாது. ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் அல்லது மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை பராமரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பெட்ரோல், ரிசர்வ் நிலையில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் பின் டயர்களில் சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். டயர்களில் உள்ள சிறு சிறு கற்களை அகற்ற வேண்டும்.
ஆயிலுக்கு தனியாக டேங்க் இருந்தால் அதையும் சரி பார்க்க வேண்டும். பிரேக், கிளட்ச் ஆக்சிலேட்டர் சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஹாரன், லைட் ஆகியவை சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

வண்டியை உற்பத்தியாளர்களின் ஆலோசனைப்படி சர்வீஸ் செய்ய வேண்டும். பொதுவாக 2 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியதும் சர்வீஸ் செய்வது நல்லது. இதேபோல் உற்பத்தியாளர்கள் கொடுத்த ஆலோசனைப்படி என்ஜினிலும், கியர் பாக்சிலும் ஆயில் மாற்றம் செய்ய வேண்டும்.
எந்த சிறு பிரச்சினையையும் உடனடியாக கவனித்து ரிப்பேர் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். இது அதிக சேதத்தை தவிர்க்க உதவும். அங்கீகாரம் பெற்ற டீலர் மற்றும் சர்வீஸ் நிலையங்களில் வாகனத்தை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்யவும் வேண்டும்.
உதிரி பாகங்களை மாற்றும் போது போலியானவைகளை உபயோகிக்க கூடாது. தரமானவைகளையே பயன்படுத்த வேண்டும். மோட்டார்சைக்கிள், மொபட் ஸ்கூட்டர்களில் 2டி ஆயில்களை உபயோகிக்க வேண்டும். அவை தான் என்ஜின் ஆயுளை நீட்டிக்க செய்யும். லூஸ் ஆயில் உபயோகிப்பது என்ஜினுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
ரெவோல்ட் நிறுவனத்தின் புதிய ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலான ஆர்.வி.400 முன்பதிவுகளை மீண்டும் துவங்க இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 முன்பதிவு அக்டோபர் 21 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்தியா முழுக்க 70 நகரங்களில் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு நடைபெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேலும் 64 புதிய நகரங்களில் ரெவோல்ட் தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளது. தற்போது டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ரெவோல்ட் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

புதிய ரெவோல்ட் ஸ்டோர்களில் விற்பனை மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு, சார்ஜிங் செட்டப் நிறுவும் முறை மற்றும் இதர விவரங்கள் வழங்கப்பட இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிராஜக்ட் ஒன் ஹைப்பர்கார் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் 2017 ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.ஏ. மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்1 சார்ந்த ஹைப்ரிட் பவர்டிரெயின் போன்று உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால், மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஹைப்பர்கார் உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பிராஜக்ட் ஒன் பார்முலா 1 மாடல்களில் உள்ளதை போன்ற பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.

மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் மாடலில் ஒரு ஹைப்ரிட், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட கம்பஷன் என்ஜின் வழங்கப்படுகிறது. இதில் மொத்தத்தில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இதில் இரு மோட்டார்கள் முன்புற சக்கரங்களில் மவுண்ட் செய்யப்படுகிறது. மற்றொரு மோட்டார் நேரடியாக கம்பஷன் என்ஜினில் வழங்கப்படுகிறது.
ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட 1.6 லிட்டர் டர்போ வி6 என்ஜின் 1000-க்கும் அதிக ஹார்ஸ்பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 350 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது ஆகும். மொத்தத்தில் இந்த கார் 275 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே விற்றுத்தீர்ந்தன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் விலை ரூ. 1,16,660 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
ஸ்டெல்த் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடலில் மேட் பிளாக் நிற பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3டி சின்னம் மற்றும் ஸ்டெல்த் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.

புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ. 53.50 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 54.90 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கிடைக்கும். 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஐகானிக் எடிஷன் மினரல் வைட், கார்பன் பிளாக் மற்றும் கஷ்மிரி சில்வர் போன்ற பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலின் கிரில் பகுதியில் எல்.இ.டி. லைட்கள் உள்ளன. இவை முன்புற தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






