என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ சி.என்.ஜி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. வேரியண்ட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மாடல்களில் டியாகோ சி.என்.ஜி. மாடல் முதலில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
மேலும் டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான முன்பதிவுகளை சில விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டியாகோ சி.என்.ஜி. மாடல் எக்ஸ்.இ. மற்றும் எக்ஸ்.டி. என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நிறம் ஸ்கார்லெட் ரெட் என அழைக்கப்படுகிறது. முன்புற பேனல், புளோர்போர்டு பேனல் மற்றும் முன்புற பென்டர் முழுக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.
ஸ்கூட்டரின் பின்புறம் மேட் பிளாக் நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட், புளூ மற்றும் கிரே ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் சேர்த்து மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஏழு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 110சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 8.15 பி.ஹெச்.பி. திறன், 8.75 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல் விலை ரூ. 65,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய எம்ஜி ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் விலை ரூ. 9.78 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17.38 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய எம்ஜி ஆஸ்டர் மாடலில் டூயல்டோன் டேஷ்போர்டு, பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏ.ஐ. பெர்சனல் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. 6 ஏர்பேக் கொண்டிருக்கும் ஆஸ்டர் மாடலில் இ.எஸ்.சி., ஏ.பி.எஸ்., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், 4 டிஸ்க் பிரேக், பார்கிங் சென்சார்கள், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், செக்யூரிட்டி அலாரம் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எம்ஜி ஆஸ்டர் மாடல் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் 1.3 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் புதிதாக உருவாக்கி வரும் ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் 350சிசி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஏ.டி.வி.350 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பெயருக்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.
ஹோண்டா அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பிரிவில் புதிய மாடலாக ஹோண்டா ஏ.டி.வி. இணைகிறது. தற்போது ஹோண்டா நிறுவனம் 745சிசி எக்ஸ்.ஏ.டி.வி. மற்றும் ஏ.டி.வி. 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஐரோப்பாவில் ஏ.டி.வி.350 பெயரை பயன்படுத்த ஹோண்டா நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இணையத்தில் வலம்வருகின்றன. இந்த ஆவணங்களின்படி புதிய ஸ்கூட்டர் ஹோண்டா போர்சா 350 மேக்சி ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய ஹோண்டா ஏ.டி.வி.350 ஸ்கூட்டரில் 330சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 29 பி.ஹெச்.பி. திறன் வழங்கும்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 65 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. முன்பதிவு துவங்கிய இரண்டே ஆண்டுகளில் இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய எக்ஸ்.யு.வி.700 முன்பதிவு அக்டோபர் மாத வாக்கில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்தது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் டுயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப், எலெக்ட்ரிக் பிரேக், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் வீல், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியர்பாக்ஸ்-ஐ பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முழு கட்டண வசூலை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இரு ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா ஸ்கூட்டர் மாடல்களுக்கான முழு கட்டணத்தை நவம்பர் 10 ஆம் தேதி செலுத்தினால் போதும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை நவம்பர் 10 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முழு தொகை செலுத்தியதும் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி தாமதமாகி வருவதை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இரு ஸ்கூட்டர்களின் வினியோகம் அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீபாவளிக்கு பின் வினியோகம் செய்யப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.
தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியூ யங்-வே இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்தது.

பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளிலும் அதன்பின் மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும். ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளர்களுடன் மறைமுகமாக கூட்டணி அமைக்கவும் பாக்ஸ்கான் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது.
இதுவரை இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. சமீப காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர மேம்பட்ட டிகோர் மாடலை சிப்டிரான் தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்தது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இதுவும் சிப்டிரான் தொழில்நுட்பத்திலேயே உருவாகும் என கூறப்படுகிறது.
2026 நிதியாண்டு வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய லிமிடெட் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களின் ஜி.எக்ஸ். வேரியண்டில் கிடைக்கின்றன.
லிமிடெட் எடிஷனில் 360 டிகிரி கேமரா, டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜர், இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கப் பிளேட்கள் உள்ளன.

இவைதவிர இன்னோவா க்ரிஸ்டா மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்விட்டி, ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலில் 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 150 ஹெச்.பி. திறன், 360 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 166 ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல்சர் 250 சீரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் 250 மோட்டார்சைக்கிளை அக்டோபர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த மாடலுக்கான டீசர் வீடியோவை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய பல்சர் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
பஜாஜ் பல்சர் 250 மாடல் செமி பேர்டு டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூமராங் போன்ற டி.ஆர்.எல்.கள், ட்வின் ஸ்ட்ரிப் எல்.இ.டி. டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

புதிய பல்சர் 250 மாடலில் 250சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் ஏர் / ஆயில் கூல்டு யூனிட் ஆகும். இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் யூனிட் மற்றும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக கேபின் ஏர் பில்ட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களில் புதிதாக ஆண்டிவைரஸ் கேபின் ஏர் பில்ட்டர் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த பில்ட்டர் காரினுள் இருக்கும் கிருமிகளை கொன்றுகுவிக்கும். இதனால் பயனர்களின் ஆரோக்கியம் கிருமிகளால் பாழாகாமல் இருக்கும்.
உலகம் முழுக்க நோய்த்தொற்று அபாயம் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புதிய கேபின் ஏர் பில்ட்டர் நாடு முழுவதிலும் இயங்கி வரும் ஹோண்டா விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் விற்பனை மையங்களுக்கு சென்று இவற்றை தங்களின் கார்களில் பொறுத்திக் கொள்ள முடியும். ஒருவரின் இருமலில் இருந்தே நோய் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும். காரினுள் இதற்கான சாத்தியக்கூறுகள் சற்று அதிகமே. புதிய ஏர்பில்ட்டர் நோய் கிருமி பரவுதலை கட்டுப்படுத்துகிறது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 மாடல்களை அறிமுகம் செய்தது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 பெட்ரோல் ஹைப்ரிட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 61.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 மாடல்களில் உள்ள மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் பிரேக் எனர்ஜியை கொண்டு 48 வோல்ட் பேட்டரியை சார்ஜ் செய்யும். காரில் பிரேக் பயன்படுத்தும் போது பேட்டரி சார்ஜ் ஆகும். இது கார் வெளிப்படுத்தும் காற்று மாசு அளவையும் குறைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை வால்வோ எஸ்90 மாடல் 250 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் வைட், பிளாக், கிரே மற்றும் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
எக்ஸ்.சி.90 மாடலும் 250 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் வைட், பிளாக், ஆஸ்மியம் கிரே, பைன் கிரே, ரெட் மற்றும் புளூ என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.






