என் மலர்
ஆட்டோமொபைல்
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
- ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- மற்ற அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஹோண்டா நிறுவனத்தின் CB200X மோட்டார்சைக்கிள் மாடல் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் வழங்கப்படுவதால், பைக்கின் கிளட்ச் லீவரை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும்.
அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் பைக்கை ஓட்டும் போது இந்த சிஸ்டம் உதவிகரமாக இருக்கும். இத்துடன் ஸ்லிப்பர் வசதி மூலம், பைக்கின் கியரை குறைக்கும் போது வீல் லாக் ஆவதை தடுக்கும். CB200X மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா CB200X மாடல் ஹார்னெட் 2.0 பைக்கின் அட்வென்ச்சர் வெர்ஷன் ஆகும். இந்த பைக்கின் முன்புறம் சற்றே உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கை ஓட்டுவோருக்கு சவுகரியமான வசதியை வழங்குகிறது. இவைதவிர இந்த பைக்கின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பைக்கில் புதிய ஃபேரிங், உயரமான வின்ட்-ஸ்கிரீன் உள்ளிட்டவை வழக்கமான அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹோண்டா CB200X மாடலில் 184.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- போர்ஷே 911 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் உள்ளது.
போர்ஷே நிறுவனத்தின் புதிய 911 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் கரெரா மற்றும் கரெரா 4 GTS என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2024 போர்ஷே 911 கரெரா மாடலின் விலை ரூ. 1 கோடியே 99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கார் மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த வேரியண்டில் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட், 4 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட் சீட்கள், ஹீட்டிங் வசதி, 6 பிஸ்டன்கள் கொண்ட அலுமினியம் மோனோ-பிலாக் பிரேக் கேலிப்பர்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரிவர்ஸ் கேமரா, 2-ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
2024 போர்ஷே 911 கரெரா 4 GTS வேரியண்டின் விலை ரூ. 2 கோடியே 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புதிய T-ஹைப்ரிட் பவர்டிரெயிடன் அதாவது 3.6 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் டர்போசார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 541 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த காரில் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் அனலாக், டிஜிட்டல் ஸ்டாப் வாட்ச், ஸ்போர்ட் க்ரோனோ கிளாக், பிளாக் ஷிப்ட் பேடில்கள், ஸ்போர்ட் பிளஸ் மோட், PSM ஸ்போர்ட் மோட், போர்ஷே டிராக் பிரெசிஷன் ஆப், டயர் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
- மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.
- இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் eVX மாடலுடன் களமிறங்க உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாருதி eVX மாடல் அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வெளியீட்டுக்கு முன் மாருதி eVX மாடல் இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகின. அதில் இந்த காரின் அளவீடுகள் கிராண்ட் விட்டாராவுக்கு இணையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எனினும், முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், இந்த கார் அதிக இடவசதியை வழங்கும் என்று தெரிகிறது.

மாருதி eVX எலெக்ட்ரிக் கார் மாடலில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதே காரின் குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், குறைந்த பேட்டரி திறன் கொண்ட மாடலின் விலை சற்றே குறைவாக இருக்கும்.
- ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- சில மாடல்களுக்கு ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், ஓலா S1 X மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 74 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் வாங்கிட முடியும். மேலும், பயனர்கள் தங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ. 40 ஆயிரம் வரை வழங்குகிறது.

ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. ஓலா S1 X பிளஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை வழங்கப்படும்.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓலா S1 மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
- அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்தலாம்.
- இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது முதல் 180 கிலோவாட் டி.சி. பாஸ்ட் சார்ஜிங் மையத்தை திறந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் இந்த சார்ஜிங் மையம் அமைந்துள்ளது. இதில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் டி.சி. திறன் கொண்ட முனைகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இவற்றை ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்த முடியும்.
முன்னதாக மும்பை, பூனே, ஆமதாபாத், ஐதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு என நாடு முழுக்க பத்து இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் திறந்து வைத்தது. இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.
- அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது முற்றிலும் புதிய கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. R20 என அழைக்கப்படும் புதிய பைக் Concorso d'Eleganza Villa d'Este நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் 2000சிசி ஏர்-ஆயில்-கூல்டு பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த பைக் அதிநவீன கிளாசிக் மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது.

இந்த மாடலில் அலுமினியம் ஃபியூவல் டேன்க் "ஹாட்டர் தன் பின்க்" நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன் பாலிஷ் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் அதிநவீன எல்.இ.டி. ஹெட்லைட், 3D முறையில் அச்சிடப்பட்ட அலுமினியம் ரிங் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் முன்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல், பின்புறம் 17 இன்ச் பிளாக் டிஸ்க் வீல் வழங்கப்படுகிறது.

சஸ்பென்ஷனுக்கு இருபுறமும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆலின்ஸ் பிளாக்லைன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
- இவற்றின் விலை பெருமளவு குறையும்.
- வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார் உற்பத்தி பிரிவாக ஜாகுவார் லேண்ட் ரோவர் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களை அசெம்பில் செய்யும் போது, இவற்றின் விலை பெருமளவு குறையும்.
மேலும், பிரிட்டனின் சொலிஹல் ஆலையை தவிர்த்து வேறொரு பகுதியில் ரேஞ்ச் ரோவர் கார்கள் அசெம்பில் செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். புதிய முன்னெடுப்பின் மூலம், ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை கிட்டத்தட்ட ரூ. 56 லட்சம் வரை குறையும் வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. மேலும், இவற்றை டெலிவரி எடுக்க காத்திருக்கும் காலமும் பெருமளவு சரிந்துவிடும்.

உள்நாட்டில் அசெம்பில் செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வேரியண்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், HSE வேரியண்டில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. டீசல் எஞ்சின் 346 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் டைனமிக் SE வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.
விலை விவரங்கள்:
ரேஞ்ச் ரோவர் ரூ. 2 கோடியே 36 லட்சம்
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 40 லட்சம்
ரேஞ்ச் ரோவர் வெலர் ரூ. 87 லட்சத்து 90 ஆயிரம்
ரேஞ்ச் ரோவர் இவோக் ரூ. 67 லட்சத்து 90 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.
- இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் 100 மோட்டார்சைக்கிள் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. அறிமுகமான முதல் ஆண்டில் ஷைன் 100 மோட்டார்சைக்கிள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. புதிய மைல்கல்லை ஒட்டி ஹோண்டா நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.
இந்த மைல்கல் மூலம் ஹோண்டா நிறுவனம் 2024 நிதியாண்டின் 100 முதல் 110சிசி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது. அதிக மைலேஜ் மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவை இந்த மாடல் அதிவேக பிரபலம் அடைய காரணமாக அமைந்தது. இத்துடன் நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக டச் பாயிண்ட்கள் மூலம் ஹோண்டா நிறுவனம் விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை வழங்கி வருகிறது.

ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 66 ஆயிரத்து 600 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி, 4 ஸ்டிரோக், SI எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 5.43 கிலோவாட் பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இவுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த காரில் அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.
- இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கியா EV3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கியா EV3 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் GT லைன் என இரண்டு வேரியண்ட்களிலும், ஒன்பது விதமான நிறங்களிலும் கிடைக்கிறது.
தோற்றத்தில் கியா EV3 மாடல் EV9 போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், இந்த காரில் போதுமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கியா EV3 வெளிப்புறத்தில் பிளான்க்டு-ஆஃப் கிரில், L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.

பின்புறத்தில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், அளவில் பெரிய பம்ப்பர், பிளாக் கிளாடிங், ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரிவர்ஸ் பார்கிங் கேமரா சென்சார்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஆஃப் செட் கியா லோகோ, இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்த காரில் 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த கார் 58.3 கிலோவாட் ஹவர் மற்றும் 81.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 283 டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும்.
- 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
- ரைடர், எக்ஸ்டிரீம் 125 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. டி.வி.எஸ். மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் எக்ஸ்டிரீம் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பஜாஜ் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு இந்த பைக் வழக்கமான 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.

இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்.இ.டி. ஹெட்லைட் வித்தியாசமான வடிவம், தடிமனான டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளன. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, இந்த பைக் 125சிசி பிரிவில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அந்த வரிசையில், இந்த பைக் 125 சிசி பிரிவில் டி.வி.எஸ். ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய பைக் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படலாம்.
- கெசா எடிஷனின் ஆண்டு விழாவை ஒட்டி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.
- இந்த காரில் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் மேக்னைட் கெசா எடிஷனின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், கெசா ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ. 9 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஜெ.பி.எல். மியூசிக் சிஸ்டம், ரியர் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது.
புதிய மேக்னைட் கெசா ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 99 ஹெச்.பி. பவர், 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.






