என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் R7 மோட்டார்சைக்கிள் நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் புதிய YZF-R7 மோட்டார்சைக்கிள் நாளை (மே 18) அறிமுகமாகிறது. இந்த நிலையில், புதிய YZF-R7 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படங்கள் புது மோட்டார்சைக்கிள் டிசைன் மற்றும் இதர விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன் யமஹா புதிய YZF சீரிஸ் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டது. பின் இந்த மாடலின் வெளியீட்டு தேதியை டீசர் வீடியோ வடிவில் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

     யமஹா YZF-R7

    கடந்த ஆண்டு வரை யமஹா தனது YZF-R6 மோட்டார்சைக்கிளை உலகின் சில நாடுகளில் விற்பனை செய்து வந்தது. எனினும், புதிய யூரோ 5 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் இந்த மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் இதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டும் இந்த மாடல் உருவாக்கப்பட்டது. அவை பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 

    முன்னதாக 1999 ஆண்டு யமஹா R7 மோட்டார்சைக்கிளை உற்பத்தி செய்தது. எனினும், அது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இது மொத்தத்தில் 500 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் தொடருக்காக உருவாக்கப்பட்டது. இதில் உள்ள 749சிசி, இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் 106 பிஹெச்பி பவர் வழங்கியது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காரின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் இவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 16 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     டாடா நெக்சான் இவி

    விலை உயர்வு தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. விலை உயர்வு நெக்சான் இவி துவக்க விலையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எனினும், நெக்சான் இவி XZ+ மற்றும் XZ+ LUX வேரியண்ட்களின் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வை தொடர்ந்து நெக்சான் இவி XZ+ விலை ரூ. 15.56 லட்சம் என்றும்,  XZ+ LUX வேரியண்ட் விலை ரூ. 16.56 லட்சம் என மாறி இருக்கிறது. நெக்சான் இவி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.99 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி விரைவில் தனது பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, இந்திய சந்தையில் தனது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. மார்க் 2 எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிளாக்ஷிப் மாடல் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.

     சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சிம்பிள் எனர்ஜி தெரிவித்து இருக்கிறது. மார்க் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.1 லட்சத்தில் துவங்கி ரூ. 1.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக மார்க் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரூவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் சென்னை, ஐதராபாத் மற்றும் இதர தென்னிந்திய நகரங்களில் விற்பனைக்கு வருகிறது.
    சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 650சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    சிஎப்மோட்டோ நிறுவனத்தின் 650சிசி மாடலான, 650MT விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    விரைவில் சிஎப்மோட்டோ 650MT, 650NK மற்றும் 650GT என மூன்று மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மூன்று மாடல்களுக்கான டீசர் வெளியாகி, முன்பதிவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இவற்றின் வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

     சிஎப்மோட்டோ 650MT

    சிஎப்மோட்டோ 650MT மாடல் அந்நிறுவனத்தின் மிடில்-வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இது லிக்விட் கூல்டு இன்-லைன் பேரலெல் ட்வின் 649சிசி யூனிட் ஆகும்.

    இந்த என்ஜின் பிஎஸ்4 டியூனிங்கில் 66.68 பிஹெச்பி பவர், 56 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பிஎஸ்6 யூனிட்டும் இதே செயல்திறன் வழங்கலாம் என கூறப்படுகிறது. சிஎப்மோட்டோ 650MT மாடல் மணிக்கு அதிகபட்சம் 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது இரு மாடல்களின் விற்பனை செய்வது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ மற்றும் கேயுவி100 மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இரு மாடல்களின் விற்பனை நிறுத்தப்படாது என மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    விற்பனை சார்ந்த அறிவிப்பு மட்டுமின்றி, மராசோ மாடலுக்கான மிக முக்கிய அப்டேட் வழங்கப்பட இருப்பதையும் மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் புது அப்டேட் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

     மஹிந்திரா மராசோ

    முன்னதாக வெளியான தகவல்களில் மஹிந்திரா மராசோ மாடலின் ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. முன்னதாக மராசோ டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருந்தது. இந்த மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. முன்னதாக ஆக்டிவா 6ஜி, கிரேசியா 125 மற்றும் டியோ பிஎஸ்6 போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது இதேபேன்ற சலுகை ஷைன் பிஎஸ்6 மாடலுக்கும் அறிவித்து இருக்கிறது.

     ஹோண்டா ஷைன்

    புது அறிவிப்பின் படி ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடலுக்கு 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் கார்டு ஒன்றிற்கு ரூ. 3500 வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

    இது மாத தவணை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை மே 1 துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் குறைந்த பட்சம் ரூ. 40 ஆயிரத்திற்கான பரிவர்த்தனையின் போது கேஷ்பேக் பெறலாம்.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான இந்திய காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வகையில் ஹோண்டாவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஹோண்டா PCX

    முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹோண்டா PCX ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதே ஸ்கூட்டர் 20177 டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 41 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஏசி மோட்டார் 18 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் களமிறங்கியது. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், விற்பனை சில நகரங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    சமீபத்தில் இதன் விற்பனை டெல்லிக்கு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த மாடலின் விற்பனை இந்தியா முழுக்க 20 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. இதில் மும்பை, சென்னை, பூனே, ஐதராபாத், ஆமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    விரைவில் மற்ற நகரங்கள் பட்டியலை டிவிஎஸ் வெளியிட இருக்கிறது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் ஐகியூப் விற்பனை நடைபெற இருப்பதாக டிவிஎஸ் நிறுவன இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2021 டி ராக் மாடலின் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டி ராக் மாடலை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. டி ராக் எஸ்யுவி மாடல் இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. 

    இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி புதிய எஸ்யுவி மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் MQB பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

     2021 வோக்ஸ்வேகன் டி ராக்

    ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் டி ராக் எஸ்யுவி 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 
    ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.  இந்த வசதி வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை ஏப்ரல் 1 துவங்கி மே 31 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவு பெறும் வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும். 

     ரெனால்ட் கார்

    சேவை நீட்டிப்பு ஜூலை 31 வரை வழங்கப்படுகிறது. இதுதவிர ரெனால்ட் நிறுவனத்தின் 24x7 ரோட்சைட் அசிஸ்டண்ஸ் சேவை ஆபத்து காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ரெனால்ட் தனது சேவைகளை டிஜிட்டல் தளங்களில் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஆன்லைன் மட்டுமின்றி மை ரெனால்ட் செயலி மூலம் அனைத்து மாடல்கள் பற்றி அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் க்விட், டஸ்டர், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பிளாக்ஷிப் நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 19.99 லட்சம் என்றும் ஸ்டிரீட்பைட்டர் வி4 எஸ் வேரியண்ட் விலை ரூ. 22.99 லட்சம் ஆகும். 

     2021 டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் வி4

    இரு மாடல்களிலும் பேனிகேல் வி4 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டெஸ்மோசெடிசி ஸ்டிரேடேல் வி4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 1103சிசி, வி-4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் 205 பிஹெச்பி பவர், 123 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், குவிக் ஷிப்டர் போன்ற வசதிகள் உள்ளன. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் டார்க் ஸ்டெல்த் மற்றும் டுகாட்டி ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. டார்க் ஸ்டெல்த் நிறம் கொண்ட மாடலின் விலை ரூ. 23.19 லட்சம் ஆகும்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 2020 மோட்டார்சைக்கிள் மாடல்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. அதன்படி பேட் பாய் 107, பேட் பாய் 114, லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்

    தள்ளுபடி செய்யப்பட்ட புது விலை பட்டியல்

    பேட் பாய் 107 ரூ. 14,49,000
    பேட் பாய் 114 ரூ. 19,09,000
    லோ ரைடர் ரூ. 11,25,000
    லோ ரைடர் எஸ் ரூ. 11,75,000

    இந்த சிறப்பு விலை MY2020 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகைகள் மிக குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  

    இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் MY2021 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐயன் 883, பார்டி எய்ட், சாப்டெயில் ஸ்டான்டர்டு, ஸ்டிரீட் பாப், பேட் பாப் 114, பேன் அமெரிக்கா 1250, பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல், பேட் பாய் 114, ஹெரிடேஜ் கிளாசிக், எலெக்ட்ரா கிளைட் ஸ்டான்டர்டு, ரோட் கிங், ஸ்டிரீட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் ரோட் கிளைட் ஸ்பெஷல் போன்ற மாடல்கள் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    ×