என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் வாகனங்களில் பொது மக்களுக்கு டாக்சி சேவை துவங்கப்பட இருக்கிறது.
எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தகவலை ஐரோப்பாவுக்கான வான்வெளி பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த பறக்கும் வாகனங்கள் செங்குத்தாக (Vertical Take Off) வான்வெளிக்கு கிளம்பும் திறன் கொண்டிருக்கும். இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்தலாம் என ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கி தெரிவித்தார்.

தானியங்கி முறையில் செயல்படும் டிரோன்கள் பயன்பாட்டிற்கு வர மேலும் ஐந்து ஆண்டுகள் கூடதலாக ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இதனை சாத்தியப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் 2021 ஸ்கோடா அக்டேவியா முன்பதிவு கார் அறிமுகத்தின் போதே துவங்கும் என்றும், விநியோகம் இதன் வெளியீட்டை தொடர்ந்து உடனடியாக துவங்கும் என அவர் தெரிவித்தார். புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் துவங்கிவிட்டது. மேலும் இதன் முதல் யூனிட் ஔரங்காபாத் நகரில் இயங்கும் ஸ்கோடா ஆலையில் இருந்து வெளியானது. 2021 ஆக்டேவியா மாடல் முற்றிலும் புது டிசைன், அம்சங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்த சுமார் 2 லட்சம் யூனிட்களை ரீகால் செய்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2.3 லட்சம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்கள் இதில் அடங்கும். இக்னிஷன் காயிலில் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவை ரீகால் செய்யப்படுகின்றன.
இந்த கோளாறு மோட்டார்சைக்கிள் திறனை குறைப்பதோடு, வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. கிளாசிக் 350, Meteor 350 மற்றும் புல்லட் மாடல்கள் என மொத்தத்தில் 2,36,966 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.

இதில் Meteor 350 மாடல்கள் டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதேபோன்று கிளாசிக் மற்றும் புல்லட் மாடல்கள் ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
பாதிக்கப்பட்ட யூனிட்களில் சுமார் 10 சதவீதத்திற்கு மட்டுமே இக்னிஷன் காயிலை மாற்ற வேண்டிய நலை ஏற்படும் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. ரீகால் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற சந்தைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் (O2W) திட்டத்தை ஏழு நகரங்களில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டம் சென்னை நகருக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மஹிந்திரா நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனை மற்றும் இதர மருத்துவ நிறுவனங்களுக்கு சென்றடைய உதவுகிறது.
தற்போது 100-க்கும் அதிகமான மஹிந்திரா வாகனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை மும்பை, பூனே, நாஷிக், நாக்பூர், ஐதராபாத், பஞ்சாப் மற்றும் டெல்லி-என்சிஆர் போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மஹிந்திரா பொலிரோ பிக்கப் டிர்க் வாகனங்கள் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை சுமார் 1000-க்கும் அதிக ட்ரிப்களின் மூலம் 23 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. O2W சேவைகளை பெற பயனர்கள் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக மஹிந்திரா தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இத்துடன் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடியை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி புது வேரியண்ட் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி 5 கதவுகள் கொண்ட வேரியண்ட் உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப் ரோடு எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஜிம்னி 5 கதவுகள் கொண்ட மாடலின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஜிம்னி 5 கதவுகள் கொண்ட மாடலில் முற்றிலும் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகளில் புதிய புகை விதிகள் அமலானதை தொடர்ந்து ஜிம்னி மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புது மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட டர்போ சார்ஜிங் யூனிட் வழங்கப்படலாம்.
தற்போது சுசுகி 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை சர்வதேச சந்தையில் வழங்கி வருகிறது. எனினும், இதே என்ஜின் புதிய ஜிம்னி மாடலிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது மராசோ மாடல் புது வேரியண்ட்டை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ ஏஎம்டி வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்போது, மராசோ ஏஎம்டி வேரியண்ட் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது மஹிந்திரா நிறுவனம் XUV700 மற்றும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ என இரு மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்6 மராசோ மாடலில் முதலீடு செய்து இருப்பதாக மஹிந்திரா சமீபத்தில் அறிவித்தது. மேலும் இந்த காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
பிஎஸ்6 மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.1 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவில்லை. இதில் வழங்கப்பட இருக்கும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆட்டோஷிப்ட் என அழைக்கபடலாம்.
கியா இந்தியா நிறுவனத்தின் 2021 சொனெட் மாடல் இரண்டு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் மேம்பட்ட 2021 சொனெட் மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
2021 கியா சொனெட் மாடலில் கியா இந்தியாவின் புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் இரண்டு புது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடி ஏடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

இத்துடன் புது சொனெட் மாடலில் பேடில் ஷிப்டர்கள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட சன்ரூப், ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பேடில் ஷிப்டர்கள் HTX 7DCT, GTX+ 7DCT பெட்ரோல், HTX AT, GTX + AT டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.
வாய்ஸ் அசிஸ்ட் சன்ரூப் வசதி டாப் எண்ட் மாடல்களான HTX+, GTX+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரியர் வியூ விண்டோ சன்ஷேட்கள் HTX, HTX+ மற்றும் GTX+வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி சூப்பர்பைக் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது. இந்த சூப்பர்பைக் விநியோகமும் துவங்கிவிட்டது. புதிய ஸ்டிரீட்பைட்டர் வி4 மாடலின் முதல் யூனிட் பூனேவை சேர்ந்த வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் வி4 சூப்பர்பைக் மே 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூப்பர்பைக் மாடல் துவக்க விலை ரூ. 19.99 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 22.99 லட்சம் ஆகும். மேலும் இதன் டார்க் ஸ்டெல்த் நிற வேரியண்ட் விலை ரூ. 23.19 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் பேனிகேல் வி4 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டெஸ்மோசெடிசி ஸ்டிரேடேல் வி4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 1103சிசி, வி-4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் 205 பிஹெச்பி பவர், 123 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், குவிக் ஷிப்டர் போன்ற வசதிகள் உள்ளன. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 42 ஆண்டுகள் பழைய கார் மாடல் ஏல விற்பனைக்கு வந்தடைந்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் W123 மாடல் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த மாடல் 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. எனினும், இந்த கார் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்குகிறது. இது 42 ஆண்டுகள் பழைய மாடல் ஆகும்.

மெர்சிடிஸ் W123 உலகின் தலைசிறந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 42 ஆண்டுகள் பழைய மாடல் என்பதால், இது 12,58,507 கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்படும் கார் போன்றே காட்சியளிக்கிறது.
1979 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் செல்ப்-லெவலிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சரி செய்யப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சிடி பிளேயர், எலெக்ட்ரிக் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், சன்ரூப், குரூயிஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஏப்ரல் மாத விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. பலேனோ மாடலை தொடர்ந்து டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்சா மற்றும் வோக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மாருதி சுசுகி பலேனோ மாடல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16,384 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதை தொடர்ந்து டாடா அல்ட்ரோஸ் மாடல் 6649 யூனிட்களும், ஹூண்டாய் ஐ20 மாடல் 5002 யூனிட்களும், டொயோட்டா கிளான்சா மாடல் 2182 யூனிட்களும், வோக்ஸ்வேகன் போலோ மாடல் 1197 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.
இந்தியாவில் வோக்ஸ்வேகன் போலோ மாடல் துவக்க விலை ரூ. 6,16,500 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஹோண்டா நீட்டித்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு நாடு முழுக்க அனைத்து ஹோண்டா விற்பனையகங்களுக்கும் பொருந்தும். நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஏப்ரல் 1, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுபெறும் வாகனங்களுக்கு பொருந்தும். வாடிக்கையாளர்கள் நலன் கருதி வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா இந்தியா பவுன்டேஷன் சார்பில் ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் என ஐந்து மாநிலங்களுக்கு ரூ. 6.5 கோடி தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் EQS எலெக்ட்ரிக் மாடலை இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் EQS மாடலினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மாடலுக்கான உற்பத்தி பேக்டரி 56 ஆலையில் துவங்கி இருக்கிறது. இந்த ஆலை ஜெர்மனியில் அமைந்துள்ளது.
பென்ஸ் ICE, எஸ் கிளாஸ் மாடல்களுடன் புதிய எலெக்ட்ரிக் EQS மாடலும் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பேக்டரி 56 ஆலையில் உற்பத்தி பணிகள் துவங்கின. இந்த ஆலையில் எஸ் கிளாஸ் மற்றும் மேபேக் எஸ் கிளாஸ் போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த ஆலைக்கு தேவையான மின்திறனில் 30 சதவீத மின்சாரம் ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட போட்டோவோல்டிக் சிஸ்டம்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதிய பென்ஸ் EQS 450 பிளஸ் மற்றும் 580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவை முறையே 328 பிஹெச்பி பவர், 568 என்எம் டார்க் மற்றும் 516 பிஹெச்பி பவர், 855 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த கார் மெர்சிடிஸ் இந்தியா வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.






