என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ரஷ்ய நாட்டை சேர்ந்த ராப் பாடகர் தனது மகனுக்கு அளித்திருக்கும் பிறந்த நாள் பரிசு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த ராப் பாடகர் தனது 2 வயது மகனுக்கு லம்போர்கினி காரை பரிசளித்து இருக்கிறார். தற்போது தனது மகனால் சூப்பர் காரை ஓட்ட முடியாது என்பதால், சூப்பர் காருடன் லம்போர்கினி காரின் பொம்மையை பரிசாக வழங்கி இருக்கிறார்.
என் மகனுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்ட பின், லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜெ மாடலை பயன்படுத்தலாம் என டிமேட்டி என அழைக்கப்படும் 37 வயதான திமுர் டரோவிச் யுனுசோவ் தெரிவித்து இருக்கிறார். பரிசு வழங்கும் எடுக்கப்பட்ட வீடியோவை டிமேட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

டிமேடிக்கு ஏழு வயதான மகளும் இருக்கிறார். இவர் பல்வேறு விலை உயர்ந்த கார் மாடல்களை வைத்திருக்கிறார். தனது இரு குழந்தைகளும் இந்த வாகனங்களை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார். குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் பெறும் வரை இந்த கார்களை டிமேட்டி பயன்படுத்துகிறார்.
போர்டு நிறுவனத்தின் புதிய எப் 150 லைட்னிங் பிக்கப் டிரக் முதல் நாள் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
போர்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் எப் 150 பிக்கப் டிரக் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.
இந்த தகவலை போர்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அமெரிக்க சந்தையில் எப் 150 லைட்னிங் மாடல் விலை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குஷக் எஸ்யுவி மாடல் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன அறிமுகம் மற்றும் வெளியீட்டு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்கோடா தனது புதிய கார் மாடலை ஜூன் மாத இறுதியில் வெளியிட இருக்கிறது.
மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா குஷக் MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் - ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இதன் மான்ட் கார்லோ வேரியண்ட் அறிமுகமாகலாம்.

புதிய ஸ்கோடா குஷக் மாடல் 115பிஎஸ் / 175 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் மற்றும் 150 பிஎஸ் / 250 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இருவித என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜினுடன் ஆப்ஷனல் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 1.5 லிட்டர் என்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது அல்காசர் எஸ்யுவி மாடலை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடலை சார்ந்து உருவாகி இருக்கும் அல்காசர் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எஸ்யுவி மாடல் வெளியீடு மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில், இகன் வெளியீடு தற்போது ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் காட்டி வருவதால், புதிய கார் வெளியீட்டை ஹூண்டாய் ஒத்திவைத்து இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் ஹூண்டாய் அல்காசர் பிரீ-புரோடெக்ஷன் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய அல்காசர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யுவியின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ஆகும். எனினும், கிரெட்டா மாடலுடன் ஒப்பிடும் போது அல்காசர் மாடலில் ஹூண்டாய் பல்வேறு மாற்றங்களை செய்து இறுக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் 2022 ஹைப்பர்மோட்டர்ட் 950 சூப்பர்பைக் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தாலை நாட்டை சேர்ந்த சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி, 2022 ஹைப்பர்மோட்டர்ட் 950 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹைப்பர்மோட்டர்ட் 950 புது டிசைன் மற்றும் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹைப்பர்மோட்டர்ட் 950 மாடல்- ஸ்டான்டர்டு, RVE மற்றும் SP என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஹைப்பர்மோட்டார்டு இந்திய விலை ரூ. 12.5 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது.

புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலில் முந்தைய வேரியண்டில் வழங்கப்பட்ட என்ஜினின் மேம்பட்ட வெர்ஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் டெஸ்மோடிரோமிக் டெஸ்டாஸ்டிரெட்டா 11°, எல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு 937சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 112.6 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் RVE மற்றும் SP வேரியண்ட்களில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் டுகாட்டி குவிக் ஷிப்ட் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அதிவேகமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டெஸ்லா எலெக்ட்ரிக் மாடல்கள் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இதிலும் டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ரோட்ஸ்டர் மாடலின் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரோட்ஸ்டர் மாடலின் ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இது உண்மையில் சாத்தியமாகும் பட்சத்தில் இத்தகைய வேகத்தில் செல்லும் உலகின் முதல் கார் என்ற பெருமையை ரோட்ஸ்டர் பெறும்.
முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என தெரிவித்து இருந்தது. எனினும், 1.1 நொடிகளில் இந்த வேகத்தை எட்டும் பட்சத்தில் இது உலகின் அதிவேகமான கார் என்ற பெருமையை பெறும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை ஹூண்டாய் பவுன்டேஷன் நிதி வழங்கியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றை எதிர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிவாரண உதவி தொகையில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 5 கோடி கொண்டு பிபிஐ கிட் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X3 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பிஎம்டபிள்யூ X3 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. சர்வதேச வெளியீட்டுக்கு முன் இந்த மாடலின் ஸ்பை படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படத்தில் இருப்பது சீன அம்சங்கள் நிறைந்த மாடல் ஆகும்.
ஸ்பை படத்தில் புது பிஎம்டபிள்யூ காரின் வெளிப்புற டிசைன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புது X3 பேஸ்லிப்ட் மாடலில் பெரிய கிட்னி கிரில் உள்ளது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. ஒற்றை பிரேம் கிரிலுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

முன்புற பம்ப்பர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக செங்குத்தான வென்ட்கள் உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள், புது எல்இடி டெயில் லைட்கள், பின்புறம் மேம்பட்ட பம்ப்பர், ட்வீக் செய்யப்பட்ட டிப்யூசர் வழங்கப்பட்டு உள்ளது. காரின் உள்புற அம்சங்கள் ரகசியமாகவே இருக்கிறது.
இந்த மாடலின் இந்திய வெர்ஷன் 2.0 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சி கிளாஸ் செடான் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் சி கிளாஸ் மாடல் மூன்று வேரியண்ட்கள் - சி200 புரோகிரெசிவ், சி220டி புரோகிரெசிவ் மற்றும் டாப் எண்ட் சி300டி ஏஎம்ஜி லைன் கிடைக்கிறது.
இவற்றில் சி200 புரோகிரெசிவ், சி220டி புரோகிரெசிவ் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், சி300டி ஏஎம்ஜி லைன் மாடல் இந்திய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சி200 புரோகிரெசிவ் வேரியண்ட் விலை ரூ. 59,863 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 201 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் சி220சி புரோகிரெசிவ் வேரியண்ட் விலை ரூ. 59,237 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பெனலி நிறுவனம் சத்தமின்றி புதிய 250சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பெனலி நிறுவனத்தின் புதிய 250சிசி மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் பேர்டு ரக ஸ்போர்ட்ஸ்பைக் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர்310 மற்றும் கேடிஎம் ஆர்சி390 போன்றே காட்சியளிக்கிறது.
முன்புறம் எட்ஜி டூயல் ஹெட்லேம்ப் செட்டப், ஆங்குலர் பேரிங், மஸ்குலர் பியூவல் டேன்க், டெயில் பகுதி மிக மெல்லியதாக இருக்கிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டில்பார், ஸ்ப்லிட் ரக சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடல் 249சிசி என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 27 பிஹெச்பி பவர் வழங்கும் என தெரிகிறது. எடையை பொருத்தவரை புது பெனலி மாடல் 159 கிலோ வரை இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதன் டாப் எண்ட் மாடலில் அலுமினியம் சிங்கில்-சைடு ஸ்விங்-ஆர்ம் வழங்கப்படும் என்றும் பேஸ் வேரியண்டில் ஸ்டீல் டபுல்-சைடு ஸ்விங்-ஆர்ம் வழங்கப்படலாம்.
போர்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் 563 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எப்-150 லைட்னிங் என அழைக்கப்படுகிறது. புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
போர்டு எப் 150 லைட்னிங் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த பிக்கப் டிரக் 563 பிஹெச்பி பவர், 1050 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிவிடும்.

இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.
புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் டிரக் மாடல் துவக்க விலையை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்துள்ளது.
நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இவற்றில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.
எனினும், கூடுதல் பலன்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மே 31 வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு நகரம் மறஅறும் விற்பனையாளருக்கு ஏற்ப மாறுபடும்.

இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் மொத்தம் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் - 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மறஅறும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 154 பிஹெச்பி, 254 என்எம் டார்க் மற்றும் 105 பிஹெச்பி, 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. நிசான் கிக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.50 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.65 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






