என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சென்னை ஆலை உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மே 13 துவங்கி மே 16 ஆம் தேதி வரை ஆலை பணிகளை நிறுத்துகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் திருவொட்டியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் போன்ற பகுதிகளில் மூன்று ஆலைகளை ராயல் என்பீல்டு இயக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விற்பனை மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ராயல் என்பீல்டு தகவல் தெரிவித்து வருகிறது.
சென்னை மற்றும் குர்கிராம் பகுதிகளில் செயல்படும் ராயல் என்பீல்டு அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
வைட் கார்பன் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
குஜராத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான வைட் கார்பன் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் புதிய ஜிடி5 மாடலை அறிமுகம் செய்தது. புதிய வைட் கார்பன் ஜிடி5 விலை ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜிடி5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட் மற்றும் வெவ்வேறு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் 2.4 kWh பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 1.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது ஸ்கூட்டரை எளிய நிதி சலுகையில் வழங்க வைட் கார்பன் நிறுவனம் பல வங்கிகளுடன் இணைந்துள்ளது.

முதற்கட்டமாக ஜிடி5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் விற்பனை செய்ய வைட் கார்பன் திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் காஸ்மிக் பிளாக் மற்றும் மில்கிவே வைட் என இரு நிறங்களில் கிடைக்கிறது.
வைட் கார்பன் ஜிடி5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3kW போஷ் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 1.8 kWh அல்லது 2.4 kWh லித்தியம் அயன் பேட்டரியுடன் வழங்கப்படுகிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாத சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் தேர்வு செய்யப்பட்ட டொயோட்டா விற்பனையாளர்கள் மே மாதத்திற்கான சலுகையை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா யாரிஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டொயோட்டா கிளான்சா மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பார்ச்சூனர், இன்னோவா க்ரிஸ்டா, கேம்ரி மற்றும் வெல்பயர் போன்ற மாடலுக்கு எந்த சலுகையும் இம்மாதம் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் விலையை டொயோட்டா உயர்த்தியது.
கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் ரூ. 3.18 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் விநியோகம் துவங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2021 கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

புதிய நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் டிசைன் மற்றும் பவர்டிரெயின் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாமல், புதிய பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நின்ஜா 300 பிஎஸ்6 மாடலில் 296 சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு, 8 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 38.4 பிஹெச்பி பவர், 26.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்த மாடல் டைமண்ட் டைப் ஸ்டீல் பிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வழங்கிய இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கியா இந்தியா நிறுவனம் இலவச சர்வீஸ் சேவையை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை கியா இந்தியா வெளியிட்டு இருக்கிறது.

ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுக்க அனைத்து கியா விற்பனையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக சர்வீஸ் மையங்கள் மிக குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருவகிறது. சில சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை கொண்ட வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு சிரம் அற்ற சேவையை வழங்கும் நோக்கில் இலவச சர்வீஸ் சேவை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் எஸ்யுவி மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரீமியம் வாகனங்களை பல்வேறு விலை பட்டியலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி XUV500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா தனது XUV500 மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சங்யோங் டிவோலி பிளாட்பார்மில் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

டிவோலி பிளாட்பார்ம் அதிநவீன தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. டிவோலி பிளாட்பார்மை மேம்படுத்த மஹிந்திரா புதிய XUV700 மாடலை பயன்படுத்த இருக்கிறது. புதிய XUV500 மாடல் S301 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தற்போதைய XUV500 மாடலை விட அளவில் 300 எம்எம் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திராவின் புதிய XUV500 இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
டுகாட்டி நிறுவனம் தனது பிளாக்ஷிப் நேக்கட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிள் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஸ்டிரீட்பைட்டர் வி4 கடந்த ஆண்டு யூரோ5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. இதனால் இந்த மாடல் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.
2021 ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிளில் 1103சிசி, டெஸ்மோஸ்டிகி ஸ்டிராடேல் வி4 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 206 பிஹெச்பி பவர், 123 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் பை-டைரெக்ஷனல் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் செய்யப்பட்ட கிளட்ச் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருவதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிக தீவிரம் அடைந்து வருவதால், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஆலை பணிகளை நிறுத்துவிட்டன.
சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாது என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1 துவங்கி மே மாத வாக்கில் நிறைவு பெறும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூன் 20, 2021 வரை நீட்டிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்6 ரக 650NK மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புது மாடலுக்கான முன்பதிவு விவரம் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. புது 650சிசி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சிஎப் மோட்டோ 650NK மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். சிஎப் மோட்டோ வலைதளத்தில் பிஎஸ்4 மாடலுக்கான விலை பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய பிஎஸ்6 மாடலுக்கான விலை முந்தைய மாடலை விட சற்று அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய சிஎப் மோட்டோ 650NK மாடலில் மேம்பட்ட பியூவல் டேன்க் மற்றும் முன்புற பென்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் ஹெட்லைட் மாஸ்க் மற்றும் ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட்கள் வழங்கப்படுகின்றன. இவை தவிர மற்ற அம்சங்கள் பிஎஸ்4 மாடலில் உள்ளசை போன்றே வழங்கப்படுகிறது.
அதன்படி பிஎஸ்6 ரக 650NK மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் யூனிட், முன்புறம் இரட்டை ரோட்டார்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் 649சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் தனது உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தின் சூரஜ்பூர் ஆலை பணிகள் மே 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது.

உற்பத்தி பணிகள் இம்மாத இறுதி வரை நிறுத்தப்பட இருக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக யமஹா தெரிவித்து உள்ளது. கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பகுதி அலுவலக பணிகளை மேற்கொள்வோர் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர்.
தற்போதைய சூழலில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே நிறுவனத்திற்கு முக்கியமான ஒன்று. வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களுடன் இணைந்து பணியாற்றி, இதன் மூலம் ஏற்படும் பாதிப்பை முடிந்தளவு குறைக்க யமஹா முயற்சித்து வருகிறது என யமஹா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளை மே 16 ஆம் தேதி வரை மூடுவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை மே 1 துவங்கி மே 9 வரை மூடப்படுவதாக மாருதி சுசுகி இருந்தது. இந்த காலக்கட்டத்தில், ஆலையில் கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என மாருதி சுசுகி தெரிவித்தது.

தற்போது ஆலையில் உற்பத்தி பணிகளை மே 16 ஆம் தேதி வரை நிறுத்தி, இந்த காலக்கட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த மாருதி சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் என்சிஆர் பகுதியை சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
கடந்த மாதம் வாகனங்கள் விற்பனையில் சரிவடைந்த போதும் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் அதிகம் விற்பனையான பத்து கார்களில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
வோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய போலோ GTI பேஸ்ல்பிட் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் ஆறாவது தலைமுறை போலோ ஹேட்ச்பேக் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது போலோ GTI மேம்பட்ட மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் மாதத்தில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புது மாடலுக்கான வரைபடங்களை வோக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது. வரைபடங்களின் படி புதிய போலோ GTI பேஸ்லிப்ட் டூயல் எல்இடி கொண்டிருக்கிறது. இத்துடன் எல்இடி பாக் லேம்ப்கள், ரெட் ஹைலைட்கள் கொண்ட GTI பேட்ஜ் வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் போலோ GTI பேஸ்லிபிட் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும்.






