என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர் RXT (O) காரை அறிமுகம் செய்தது. கைகர் மாடலின் புது வேரியண்ட் விலை ரூ. 7.37 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் டாப் எண்ட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய கைகர் RXT (O) 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் டாப் எண்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 16 இன்ச் அலாய் வீல்கள், PM 2.5 AC பில்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள என்ஜின் 72 பி.எஸ். திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்குகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

"இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி துவங்கி விட்டது! ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்படுகிறது. முதல் நாளில் இருந்தே நாடு முழுக்க வினியோகம், சர்வீஸ் உள்ளிட்டவை துவங்கும். விவரங்கள் ஆகஸ்ட் 15-இல். இந்த புரட்சியை நாம் ஒன்றிணைந்து நிகழ்த்துவோம்," என அவர் தெரிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரின் பெரும்பாலான விவரங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்று வருகிறது. ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து வித நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு புது சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புது அறிவிப்பின்படி பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு சான்று பெறவும், புதுப்பிக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இதை சார்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய அறிவிப்பின்படி இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரத்தாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் Xtra எடிஷன் VXi வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் வேகன்ஆர் Xtra எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய Xtra எடிஷன் வேகன்ஆர் VXi வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வேகன்ஆர் Xtra எடிஷனில் பம்ப்பர் ப்ரோடெக்டர்கள், பக்கவாட்டில் ஸ்கர்ட்கள், வீல் ஆர்ச் கிளாடிங், முன்புற கிரில், பின்புற கதவு மற்றும் நம்பர் பிளேட்களின் மீது குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்டீரியர் ஸ்டைலிங் கிட் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி Xtra எடிஷனில் 68 ஹெச்.பி. பவர் வழங்கும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 83 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கிய முதல் ஆண்டிலேயே 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்தது.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தியாளராக கியா இந்தியா இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக கியா இந்தியா உருவெடுத்து இருக்கிறது.

கொரியாவை சேர்ந்த கியா இந்தியா விற்பனை துவங்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இரண்டே ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
கியா செல்டோஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஒட்டுமொத்த விற்பனையில் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா சொனெட் மாடல் 32 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் 7310 கியா கார்னிவல் எம்.பி.வி. யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது அபாச்சி சீரிஸ் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி RTR 160 4V மற்றும் அபாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு துவங்கியது முதல் இந்த மாடல்கள் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத வாக்கில் இரு மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அறிவிப்பின்படி அபாச்சி RTR 160 4V மாடலுக்கு ரூ. 3 ஆயிரமும், அபாச்சி RTR 200 4V மாடலுக்கு ரூ. 3,750 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய விலை விவரம்
டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V
டிரம் பிரேக் ரூ. 1,11,565
டிஸ்க் பிரேக் ரூ. 1,14,615
டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V
சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,33,065
டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,38,115
முன்னதாக அபாச்சி RTR 200 4V மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டது. இந்த அப்டேட் மோட்டார்சைக்கிளில் மூன்று ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா முன்புற சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டன.
அபாச்சி RTR 160 4V மாடலில் உள்ள 160சிசி, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் 17.4 பி.ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. முன்னதாக இந்த என்ஜின் 15.6 பி.ஹெச்.பி. பவர், 14.12 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக 2021 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இதே காரணத்திற்காக நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்டா வேரியண்ட் அச்சம் காரணமாக இந்த ஆண்டிற்கான விழாவையும் ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

"அனைத்து அறிகுறிகளும் சாதகமாகவே இருந்தன, விழா இதுவரை இல்லாத அளவு உறுதியாக ஒருங்கிணைந்தது, ஆனால் இன்று கதை முற்றிலும் மாறிவிட்டது" என நியூ யார்க் ஆட்டோ விழா தலைவர் மார்க் ஸ்கெயின்பர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஆட்டோ விழாவில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என மன்ஹாட்டன் நகர மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளும் விழா ரத்து செய்யப்பட காரணிகளாக கூறப்படுகின்றன. இந்த ஆண்டின் நியூ யார்க் ஆட்டோ விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெற இருந்தது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலில் இன்-கார் கனெக்டிவிட்டி வழங்க ஜியோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. கூட்டணியை தொடர்ந்து எம்ஜி மோட்டார் புதிய காரில் ஜியோவின் இசிம் வழங்கப்படும்.
இது காரினுள் ரியல்-டைம் கனெக்டிவிட்டி, இன்போடெயின்மென்ட் மற்றும் டெலிமேடிக்ஸ் போன்ற வசதிகளை வழங்குகிறது. புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. வாங்கும் வாடிக்கையாளர்கள் ஜியோவின் அசத்தலான இணைய சேவையை மெட்ரோ மட்டுமின்றி ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும் பயன்படுத்த முடியும்.

எம்ஜி ஹெக்டார் மாடலில் 60-க்கும் அதிகமான கனெக்டெட் கார் அம்சங்கள், 35-க்கும் அதிகமான இந்தி-ஆங்கிலம் கலந்த வாய்ஸ் கமாண்ட்கள் உள்ளன. இத்துடன் லெவல் 1 ஆட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேக்கிங் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டன.
"ஆட்டோமொபைல் துறையின் கனெக்டெட் கார் பிரிவில் அதிநவீன தொழில்நுட்பம் தான் முன்னோடி. மென்பொருள் சார்ந்த சாதனங்களை அதிகரிப்பதே தற்போது டிரெண்ட் ஆக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையின் டெக் பிரிவில் முன்னணி இடத்தை பிடிக்க IoT தளத்தில் ஜியோவுடனான கூட்டணி பயன்தரும்" என எம்ஜி மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம், விற்பனையகங்களில் ரூ. 21 ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து விரைவில் இந்த மாடலுக்கான வினியோகமும் துவங்குகிறது. முன்பதிவுடன் புதிய மாடலுக்கான டீசரையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. இதில் புதிய கார் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா அமேஸ் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 9.99 லட்சம். எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி தனது உற்பத்தி ஆலை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி சிம்பிள் எனர்ஜியின் ஆலை ஓசூரில் அமைகிறது. உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வினியோகம் செய்ய முடியும். இதற்காக சிம்பிள் எனர்ஜி சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஆலையை கட்டமைக்கிறது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 350 கோடியை முதலீடு செய்ய சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் எனும் பெயரில் அறிமுகமாகிறது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இதில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார், ஸ்கூட்டரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வழங்கும். இந்தியாவில் சிம்பிள் ஒன் விலை ரூ. 1.10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.
2022 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருந்த இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா புதிய தேதிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனாவைரஸ் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரும் ஆட்டோ நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியா ஆட்டோ எக்ஸ்போ இருக்கிறது. வழக்கமாக இவ்விழாவில் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற விழாவில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது சற்றே சவாலான காரியம் என்பதால், தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆகும்.
முந்தைய அறிவிப்பின் படி 2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா 2022 பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. இவ்விழா கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்க்ப்பட்ட டியாகோ NRG மாடல் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
டாடா டியாகோ NRG மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய டியாகோ NRG துவக்க விலை ரூ. 6.57 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.09 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய NRG எடிஷன் டியாகோவின் கிராஸ்ஓவர் வேரியண்ட் ஆகும். டியாகோ NRG எடிஷனில் கருப்பு நிற ரூப், காரை சுற்றி கிளாடிங், ரூப் ரெயில் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட், கருப்பு நிற ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா டியாகோ NRG எடிஷன்- பாரெஸ்டா கிரீன், ஸ்னோ வைட், பயர் ரெட் மற்றும் கிளவுடி கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் ரியர்-வியூ கேமரா, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், 7 இன்ச் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
டியாகோ NRG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.






